தக்காளியும் ஆன்டி ஆக்ஸிடெண்டும்

Spread the love

தக்காளியின் அருமை பெருமைகள் நாம் அறிந்ததே. காதல் ஆப்பிள் எனப்படும் தக்காளி உலகிலேயே அதிகமாக விரும்பப்படும் காய்கனிகளில் ஒன்று. அமெரிக்காவில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மற்ற காய்கறிகளை விட வயிறு மற்றும் சுக்கிலவகம் புற்றுநோய்களை எதிர்க்கும் ‘லைகோபின்’ என்னும் சக்தி தக்காளியில் அபரிமிதமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. தக்காளியை சாப்பிட, சாப்பிட ரத்தத்தில் லைகோபின் அளவு அதிகரித்து, ப்ராஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைந்தது லைகோபின் என்பது ஒரு ‘கரோட்டினாய்ட்’ கேரட்டுக்கு நிறம் மற்றும் சத்தைத் தரும் பீடா – கரோடீன் போல் லிகோபின் தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் ஃப்ரீரேடிகல்ஸ் என்பது உடலுக்கு கொடுமையான நோய்களை தரும் பொருட்களாகும். இந்த ஃப்ரீரேடிகல்களை அழிப்பதில் சூப்பர் பொருள் லிகோபின். அதாவது, லிகோபின் ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்ட் இது பீடா – கரோட்டினை விட 10 மடங்கு அதிகமாக புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

மற்ற காய்கனிகளை விட தக்காளியில் தான் இந்த லைகோபின் அதிகம் இருக்கிறது. இதனால் புற்றுநோயை எதிர்ப்பதில் தக்காளி முதலிடம் சுக்கிலவகம் வயிறு, குடல், நுரையீரல் இவைகளில் வரும் புற்று நோய்களுக்கு தக்காளி, தக்காளியால் செய்யப்படும் சாஸ் போன்றவைகள் சிறந்த மருந்து, இந்த உண்மை 6 வருடமாக ஹார்வார்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேட்கிறோம். இவை என்ன என்பதைப்பற்றி பார்ப்போம்.

நம் உடலில் ஃப்ரிரேடிகல்ஸ் என்ற பொருட்கள் உற்பத்தியாகின்றன. இவை சமயம் வரும்போது நம் உடலின் உயிரணுக்களை தாக்கி தீங்கு விளைவிக்கின்றன.

வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் இவற்றை தடுக்க உதவும். இவை ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்’ எனப்படும்.

தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பலவிதத்திலும் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


Spread the love