உணவும், வாழ்க்கை முறையே எடை அதிகமாகக் காரணம். எனவே, இதற்கான தகுந்த உணவை உட்கொள்ள வேண்டும். மொச்சை, கம்பு, காராமணி, பயறு போன்ற தானியங்களை அதிகம் சேர்க்க வேண்டும்.
லோத்ராஸவம் என்ற மருந்தை 3 ஸ்பூன் காலை, மாலை சாப்பிட்டபின் எடுத்துக் கொள்ளவும்.
மாமிச உணவு கூடவே கூடாது. குடல் சுத்தமாக இருக்க வேண்டும். இதற்கு திரிபலா சூரணத்தை ஒரு ஸ்பூன் எடுத்து தேனுடன் கலந்து இரவில் படுக்கப் போகுமுன் சாப்பிடவும்.
தேகப் பயிற்சி மிகமிக அவசியம். காலையில் முக்கால் மணி நேரம் நன்கு வேர்க்க நடக்க வேண்டும். பகல் தூக்கம் கூடாது.
வராதயென்ற கஷாயத்தை மூன்று ஸ்பூன் எடுத்து 12 ஸ்பூன் தண்ணீருடன் கொதிக்க வைத்து, ஆறியபின் கால் ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். இம் மருந்தை காலையில் சாப்பிட்டதும் இடதுபுறம் ஒருக்களித்து அரைமணி நேரம் படுக்கவும். 15 நிமிடங்கள் கழித்து வாயைச் சுத்தம் செய்து, சூடான தண்ணீரைக் குடிக்கவும். எடை குறையும்.
தயிர் வேண்டாம், தெளிந்த மோர் உகந்தது.