நீரிழிவு வருவதை 10 வருடம் முன்பே தெரிந்து கொள்ளலாம்
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள், 10 வருடம் முன் கூட்டியே நீரிழிவு வரும் அபாயத்தை காட்டும் இரத்தப்பரிசோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கிங்’ஸ் காலேஜ், லண்டன் (King’s College, London) நகரத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வு இதை தெரிவிக்கிறது. இந்த ரத்தப் பரிசோதனையால் யாருக்கு டைப் – 2 நீரிழிவு நேரும், இதில் எவருக்கு மாரடைப்பு, மூளைத்தாக்கு முதலிய சிக்கல்கள் தாக்கும் என்பதை சொல்ல முடியும். இந்தப் பரிசோதனையில் ரத்தத்தில் மைக்ரோ ஸிழிகி என்ற மரபணு மூலக்கூறு (Genetic molecule) ஒன்றின் அளவை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த மரபணு மூலக்கூறு இதயம் மற்றும் இரத்த நாளக் கோளாறுகளை சுட்டிக் காட்டும். இந்த பரிசோதனையை இதர வழக்கமான பரிசோதனைகளுடன் இணைந்து நடத்தப்படும். இந்த புது பரிசோதனையின் பயன் என்னவென்றால், நீரிழிவு ஏற்படுத்தும் இரத்தக்குழாய் பாதிப்புகளை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். பாதிப்புக்களை வைத்து எப்போதும் எந்த பாதிப்பு ஏற்படும் என்பதை கணிக்க முடியும். இந்த ஆய்வில் 822 நபர்கள் பங்கேற்றனர்.
விடிலிகோ மருத்துவம்
அறிமுகம்
விடிலிகோவின் மற்றொரு பெயர் லுகோடெர்மா (Leucoderma). விடிலிகோ “வெண்குஷ்டம்” என்றும் சொல்லப்படுகிறது. லுகோடெர்மா என்றால் வெள்ளை சருமம் என்று பொருள். தோலுக்கு நிறம் தரும் மெலானின் எனும் நிறமி குறைபாட்டால் விடிலிகோ ஏற்படும். வெண்ணிற திட்டுகள் உடலின் பாகங்களில் தோன்றி உடலெங்கும் பரவும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த மனவேதனையை கொடுக்கும். நோய் விட்டிலிகோ. நாட்பட்ட பேதி மற்றும் வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு விடிலிகோ ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
காரணங்கள்
ஆயுர்வேதத்தின் படி நோயுற்ற கல்லீரலால் ஏற்படும் பித்த குறைபாடுகள் விடிலிகோவை உண்டாக்குகின்றன.
பாரம்பரியம்
கவலை
அதீத யோசனை
ஸ்ட்ரெஸ் முதலியனவும் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றில் பூச்சி, கல்லீரல் கோளாறுகள் விட்டிலிகோவை அதிகரிக்கும்.
தீப்புண்கள், காயங்கள் விடிலிகோவை உண்டாக்கலாம்.
நுண்ணுயிர்கள், கிருமிகளால் விட்டிலிகோ உண்டாவதில்லை. சரியான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது.
அறிகுறிகள்
முதலில் திட்டுதிட்டாக வெள்ளைநிற வட்டங்கள், தோலில் உடலெங்கும் தோன்றும். இவை பெரிதாகிக் கொண்டே போகும்.
வீட்டு வைத்தியம்
கார்போக அரிசி (Psoralea Corylifolia) யுடன் வினிகர் சேர்த்து அரைத்து, விழுதை வெள்ளை திட்டுகளில் தடவி, காலை சூரிய ஒளியில் 15 நிமிடம் நிற்கவும். திட்டுக்களின் மீது சூரிய ஒளி பட வேண்டும்.
தினமும் 10 மி.லி. இஞ்சிச் சாறு குடித்து வர, வெள்ளைத்திட்டுக்களுக்கு இரத்தம் சேரும்.
செம்பு நிறைந்த சிகப்பு களிமண்ணை சம பாகம் இஞ்சி சாறுடன் பிசைந்து வெண் திட்டுக்களில் தினம் ஒரு தடவை தடவவும்.
மஞ்சள் பொடியை கடுகெண்ணையில் குழைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
நசுக்கிய வேப்பிலைகளுடன் நெல்லி சூரணம் (1 தேக்கரண்டி) கலந்து தினம் 1 வேளை அளவில் 1 மாதம் எடுத்துக் கொள்ளவும்.
ஆயுர்வேத மருத்துவம்
விட்டிலிகோ நோயாளிகளுக்கு மலச்சிக்கல் போன்ற ஜீரணக்கோளாறுகள் இருந்தால் அதற்கு முதலில் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இதற்கு குடசப்பாலை (Holarrhena antidysentrica) நல்ல மருந்து. இதன் பட்டையை பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவில் தினம் 3 வேளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கிய வர்த்தினி வடி மாத்திரைகளும் தரலாம். சேரங்கொட்டை (Semecarpus anacardicum) யும் ஜீரணத் கோளாறுகளுக்கு கொடுக்கலாம். இதன் கஷாயம் ஒரு தேக்கரண்டி தினம் ஒரு வேளை தரலாம். இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்க்க, சேராங்கொட்டை கஷாயத்தை குடிக்கு முன் சிறிது நெய் (அ) வெண்ணெய்யை உட்கொள்ளவும். மூலிகையை உண்டபின் ஒரு கப் பால் குடிக்கவும்.
சரகசம்ஹிதையின் படி, ஆயுர்வேத சிகிச்சை உடலின் கழிவு மற்றும் நச்சுப்பொருட்கள் நீக்கி, எண்ணெய்ப்பசை சேர்க்கும் வைத்தியத்துடன் தொடங்கும். பிறகு நோயாளி பேயத்தி சாற்றை வெல்லத்துடன் எடுத்துக் கொண்டு, மூன்று நாள் காலை வெய்யிலில் பாதிக்கப்பட்ட இடங்கள் படுமாறு நிற்க வேண்டும்.
பேயத்தி (Ficus Hispida), பிராசரம் (Ptero carpus marsupium), பிரியங்கு (Callicarpa macrophylia), வெள்ளெருக்கு (Caloropiv procera) – இவற்றின் கஷாயத்தை தினமும் காலையில் இரு வாரங்களுக்கு குடித்து வர வேண்டும்.
மேலும் ரசமானிக்யா, மஹாதிக்தகக்ருதம், அவல் குஜாதி லேபம், கதிராரிஷ்ம், ஸ்வேத குஞ்சடி தைலம் போன்ற பல ஆயுர்வேத மருந்துகள் கிடைக்கின்றன.
உணவுப்பத்தியம் உப்பில்லா பத்தியம் பரிந்துரைக்கப்படுகிறது. தேவையானால் இந்துப்பு சிறிதளவில் உபயோகிக்கலாம். கசப்பு ருசி உள்ள பாகற்காய் போன்ற காய்கறிகள் நல்லது.