நாளுமே அசதியான உணர்வுகள் உங்களை வாட்டுகிறதா?
அதனையும் தகர்த்திட சுலபமான வழிகள்.
பத்து மனிதர்களில் ஒருவருக்கு எப்பொழுதும் உடம்பு அசதியாகவும், சோம்பலாகவுமே இருக்கிறது என்ற உணர்வு உள்ளது. சமயங்களில் உடலில்முக்கிய சத்துகளின் குறைவும். சுரப்பிகளின் தன்மையும் வேறுபடுவது காரணமாக இருந்தாலும், நாம் வாழும் விதமும் ஒரு காரணமாகவே இருக்கலாம் . இதோ அதனையும் விரட்டிட சில அரிய வழிகள்.
தண்ணீர் அதிகம் பருகுங்கள்
தினந்தோறும் கட்டாயமாக எட்டு (8) டம்பளர் தண்ணீரை பருகுங்கள்(சுமார் 4000னீறீ.). ஏனென்றால் உடலில் தண்ணீர் அளவு குறையும்பொழுது ரத்த அழுத்தம் குறைந்து மூளைக்கு செல்ல வேண்டிய ‘ஆக்சிஜன்’ அளவும் குறைவதால் மயக்கம்அல்லது சோம்பல் நிலை வருகிறது. எனவே, தண்ணீரை குறையில்லாமல்பருகுங்கள். தேவையானால் சமயத்தில் ஒரு கப் ‘காபி’ கொடுத்தால் சுறுசுறுப்பும் பெருகி விடும்.
குட்டித் தூக்கம் போடுங்கள்.
மத்தியான வேளையில் அசதியாக இருந்தால் நல்ல ஒரு குட்டி தூக்கம்( 20 லிருந்து 30 நிமிடங்கள்) போடுங்கள். அதுவும் தந்திடும் புத்துணர்வையும் உடனேயே எழுந்தவுடன் உடனேயே வேலைகளை தொடங்காமல் சிறிதுநேரம்மூளையும் புத்துணர்வு பெற அவகாசம் கொடுங்கள்.
மூலிகை மருந்துகள் சாப்பிடுங்கள்
சில தாவர மூலிகைகள் இந்த அசதி அல்லது சோம்பல் நிலையை விரட்டபெரிதும் உதவும். உதாரணமாக ‘ஜின் செங்’ . அடிரினல்கிளாண்ட்’ ஊக்கி வைத்து சுறுசுறுப்பை தரும். ரோடியோல்லா, என்ற மூலிகை மந்த நிலையை விரட்டிடும். ஆனால், எதுவும் உடனேயே வேண்டிய நன்மையை தராது. நாலு ஐந்து தினங்களில்படிபடியாக ஒரு பெரிய முன்னேற்றத்தையும் கண்டிப்பாக உணரலாம்.