1. உடற்பயிற்சியால், உடல் உழைப்பால் அதிக கலோரிகளை நீக்கவும். அனைவருக்கும் ஏற்ற சிறந்த பயிற்சி – நடப்பது.
2. நீச்சல் செய்வது உடல் குறைக்க உதவும்.
3. எண்ணை மசாஜ், அதுவும் மூலிகைகள் கலந்த எண்ணை மசாஜ் நல்லது.
4. எண்ணை மசாஜ்ஜுடன், ஒத்தடம் கொடுப்பது, பிறகு கடைசியாக எண்ணையில்லாமல் உலர் – மசாஜ் செய்வது, முறையான ஆயுர்வேத சிகிச்சையாகும். சர்மத்திற்கும் நல்லது.
5. கொள்ளு, பார்லி, இவை எடை குறைய உதவும்.
6. கலோரிகளை ‘எரித்தாலே’ எடை குறையும். சிறு சிறு வேலைகள் கூட கலோரிகளை எரிக்க உதவும்.
7. நிறைய தண்ணீர் குடிக்கவும். மத்தியானத்தில் தூங்க வேண்டாம்.
8. சீரகம், ஓமம், இஞ்சி, கடுகு, கிராம்பு, துளசி, மஞ்சள், வெந்தயம், லவங்கம் மற்றும் பூண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும். மாமிசம் தவிர்க்கவும்.
9. ஒரேடியாக நெய்யை நிறுத்த வேண்டாம். சிறிதளவு உருக்கிய நெய்யை சேர்த்து கொள்ளவும்.
10 உணவு முடித்த உடனே தண்ணீர் குடிக்காமல் சிறிது நேரமானதும் குடிப்பது நல்லது.
11 சாப்பிடும் ஆரம்பத்தில் சப்பாத்தி, ரொட்டி போன்ற கோதுமை வகைகளை சாப்பிட்டால், நிறைய சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் குறையும்.
12 அடிக்கடி எடையை சரிபாருங்கள்.