கருவுற்ற பெண்களுக்கு சில டிப்ஸ்

Spread the love

கருவுற்ற பெண்மணிகள் நல்ல உடல்நலத்துடன் திகழ சில குறிப்புகள்

மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளை எக்ஸ்ரே எடுப்பதைத் தவிர்க்கவும்.

உயிர்நிலையான உறுப்புக்களை நேரடியாகப் பாதிக்கும் சுற்றுப்புறச் சூழல் சார்ந்த பொருட்களின் உபயோகத்தை விட்டு ஒதுக்குங்கள், அல்லது குறையுங்கள். காரீய நச்சு கலந்த சூழலில் வசித்தல், மது அருந்துதல், குறிப்பிட்ட சில மருந்துகளை அருந்துதல் ஆகியவற்றை ஒதுக்குங்கள். கல்லீரல் ஒரு சில மருந்துகளை உடைத்து மாற்றமடையச் செய்வதனால் வயிற்றிலுள்ள சிசுவிற்குப் பிறவிக் குறைபாடுகள் நேர வாய்ப்புள்ளது. என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 1981 லேயே தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, எந்தவிதமான மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளாமல் இருப்பதே இதற்குரிய மிகப் பாதுகாப்பான வழிமுறை, கட்டாயமாகப் புகைக்கக்கூடாது. புகைக்கும் பெண்களுக்குக் குழந்தை இறந்து பிறக்கும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம். பேறுகாலத்திற்கு முந்திய இறப்பு அபாயம் 26 சதவீதம் அதிகம்.

இரத்தத்திலுள்ள காரணியைக் கண்டறியுங்கள். இது இரத்தத்தில் காணப்படும் ஒரு வித பொருள். இதைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல் போன்ற கோளாறுகள் விளைவிக்கும். தாய் – சேய், இரத்த வகைகள் ஒன்றோடொன்று மோதல்களை உருவாக்கிக் கொள்ளாதபடி தடுக்க ஊசி மருந்து எடுக்கலாம்.

கருவுற்ற பெண்களுக்கு 17 விதமான மிக அவசியமான ஊட்டச்சத்துக்கள் தேவையான சாதாரண காலத்தைவிட கருவுற்ற காலத்தில் 200 முதல் 300 கலோரி ஆற்றல் அதிகமாகத் தேவை. எனவே சாதாரணமாக உண்பதைவிட 40 சதவீதம் அதிகமாக சாப்பிட வேண்டும்.

வயிற்றிலுள்ள குழந்தையைப் பற்றி அக்கறை செலுத்த வேண்டும். குழந்தைப் பிறப்பிற்கு எப்படியெல்லாம் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும் என்று தகுதியுள்ளவர்கள் மூலமாகக் கற்றறிந்து பாதிப்பில்லாத அளவில் உடற்பயிற்சிகளை செய்ய தக்க மருத்துவரின் ஆலோசனைப் படி உடற்பயிற்சி முறைகளை அறிந்து செய்ய வேண்டும்.

குழந்தை பிறக்கும் முன் உங்களுக்கு ஏற்படும் கலவரத்தைத் தணிக்கவும், பிரசவ வலியை ஓரளவு தணிக்கவும் சமனப்படுத்தவும்  மருந்துகளைத் தர முடியுமா என்று மருத்துவரிடம் கேட்டு, முடிந்தால் தரும்படி கூறுங்கள்.

குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சோர்வு நிலையை மேற்கொள்ள ஆயத்தமாக இருங்கள். குழந்தை பிறந்த பிறகு பெரும்பாலான பெண்கள் ஒருவிதச் சோர்வு நிலை அடைகின்றனர். இப்படிப்பட்ட வருத்தத்தைத் தரும் உணர்வு ஒரு நாள் முதல் இரண்டு வார காலம்வரை நீடிப்பது உண்டு. சுமார் 10 – ல் ஒரு பெண்ணே மிக மோசமான மனக்கலக்கத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். முன்னதாகத் தயார் நிலையில் இருந்தால் குழந்தை பெறுவது சிக்கலானதாக மாறாது. செக்ஸைப் பற்றித் தெரிந்து கொண்டால் ஒழுக்கம் கெட்டு விடும் என்கிறார்களே, பண்டைய நாளில் வாத்ஸ்யாயனரும், கல்யான மல்லரும், கம்பனும், காளிதாசனும் அதிவீரராம பாண்டியரும் செக்ஸ் பற்றி எழுதாமலா இருந்தார்கள். திக்கெட்டும் புகழ் பரப்பும் தென்னாட்டுக் கோவில்கள் என்று பெருமை பேசுகிறோமே அந்த ஆலயத்துச் சிற்பங்களிலே பாலுணர்வு பற்றிய சிற்பங்களை நீங்கள் கண்டதில்லையா? இதனால் அன்றிருந்தவர்கள் அத்தனை பேரும் நடத்தை கெட்டுபோனவர்கள் என்றா பொருள் கொள்வது?


Spread the love
error: Content is protected !!