வலிகள் தீர சில வழிகள் – 1

Spread the love

நாம் உடலில் வலிகள், வேதனைகளில் துடிக்கும் போது நமக்கு உதவி புரிய மருத்துவமனைகளும், மருத்தவர்களும் உதவுகிறார்கள். ஆனால் எப்பொழுதும் அவர்கள் நமக்கு அருகிலேயே கிடைப்பார்கள் என்று கூறமுடியாது. அந்த சமயத்தில் நமக்கு நாமே ஆங்கில மருந்துகளை வலி நிவாரணியாக சுய மருத்துவம் செய்து கொள்வது ஆபத்தானதும் ஆகும்.

ஆனால் சித்த, ஆயுர் வேத மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்லாத, எளிதாக கிடைக்கக்கூடிய, நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களைக் கொண்டே வலியை போக்கிக் கொள்ளலாம். அதன் பின்பு அவசியம் எனில் மருத்துவரை, மருத்துவமனையை அனுகிக் கொள்ளலாம்.

தலைவலி

அமைதியாக உள்ள அறையில் அமர்ந்து கொள்ளுங்கள். ஐஸ்கட்டி வைக்கப்பட்டுள்ள உறையை உங்கள் முன் தலையில் வைத்து கட்டிக்கொள்ளுங்கள். அல்லது சந்தனத்தை தண்ணீர் விட்டு குழைவாக அரைத்து முன் நெற்றியை பற்று போட்டுக் கொள்ளுங்கள். பசி உணர்வாக நீங்கள் காணப்பட்டால் சூடாக சமைக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடலாம்.

தலைவலி வருவதற்கு காரணம்

ஜலதோஷம், குளிர் ஒரு பக்கம் தாக்கும் தலைவலி (மைக்ரேன்) மன அழுத்தம் போன்றவைகள் தான் தலைவலியை உருவாக்குகின்றன. ஜலுதோஷம் வராமலும், உடலில் அமிலம் அதிகம் உருவாகக் காரணமாக உள்ள உணவு வகைகளை தவிர்த்தல் நல்லது.

கண்வலி

பன்னீரில் நனைக்கப்பட்ட சுத்தமான பருத்தித் துனியினால் கண்களின் மேல் சிறிது நேரம் வைத்து எடுக்க நிவாரணம் கிடைக்கும்.

கண்களுக்கு அதிக வேலையைத் தருவது, கண் எரிச்சல் கண்வலிக்கு பொதுவான காரணம் ஆகும். சரியான வெளிச்சம் உள்ள இடங்களில் பணிபுரிவதும், வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

திரிபலா சூரணம் மூலம் கண்களை கழுவிக் கொள்ளலாம்.

காதுவலி

காதுக்குள் எவ்வித பொருட்களையும் வைத்து காது குடையாதீர்கள். காது வலியினை உணரும்பொழுது காதில் ஏதேனும் பொருள், பூச்சி உள்ளதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

காதுக்குள் ஏதேனும் தூசு தும்புகள் போன்று ஏதேனும் இருப்பதால் அல்லது காது தொற்று நோய்களினால் காது வலி ஏற்பட காரணமாகிறது. குளிர், குளிர்காற்று காதில் போகாமல் பாதுகாத்துக் கொள்ளவும். கூர்மையான பொருட்களை காதில் வைத்து குடையாதீர்கள்.

பல்வலி

கொஞ்சம் Alum, நசுக்கப்பட்ட இலவங்கப்பட்டை மற்றும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாயை நன்கு கழுவி கொப்பளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல் பகுதியில் பெருங்காயத்துடன் கலந்த கடுகு எண்ணெயை இடவேண்டும்.

பல் கூச்சம் மற்றும் பல் ஈறு வீக்கம் காரணமாக பல்வலி ஏற்படுகிறது. மிகவும் குளிர்ச்சியான அல்லது சூடான உணவுகளை சாப்பிடக்கூடாது. தினசரி பற்களை நன்றாக விளக்கி வந்தால் பல் வலி வராது.

கைவலி

தோள் மற்றும் கை வலிக்கும் பகுதிகளில் உப்பு, சுடுநீர் ஒத்தடம் தரலாம். எளிதான உடற்பயிற்சிக்குப் பின்பு இதை செய்வது நல்லது. கைகளை தலைக்கு அடியில் அழுத்தம் கொடுத்து உறங்குதல், உறங்கும் நிலை தவறாக அமைந்தால் மேற்கூறிய வலியும் வேதனையும் ஏற்படும்.


Spread the love
error: Content is protected !!