ஒரு பாடல் வரியில் கூட அழகு என்பது பெண்பால் என்று கவிஞர் எழுதிருப்பார். அத்தகைய பெண்ணின் அழகை மேலும் அழகாக்குவது கூந்தல் தான்.
கூந்தல் என்பது கடவுள் கொடுத்த வரம் என்றே கூறினர், நம் முன்னோர்கள். ஆண்களை விட பெண்கள் அழகாக இருக்க காரணம், பெண்களிடம் இருக்கும் மென்மையான கூந்தல் தான். கூந்தலை பராமரித்தல் என்பது இந்த காலக் கட்டத்தில் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
முடி சிறியதாக உள்ளவர்கள் நீளமாக வளர்க்க வேண்டும் என்று ஆசைபடுகிறார்கள். முடி நீளமாக உள்ளவர்கள், எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் வெட்டி விடுகின்றனர். இனி கவலை வேண்டாம். இதற்கு மிகவும் எளிமையான தீர்வை காண்போம்.
அடர்த்தியான முடி வளர எண்ணெய்
அடர்த்தியான முடி வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கு எழக் கூடிய கேள்வியாக உள்ளது. அதற்கு என்ன எண்ணெய் தேய்க்கலாம் என்று பார்க்கலாம்.
எண்ணையை தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
வெந்தயம் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10 இலைகள்
செய்முறை
முதலில் வாணலியை அடுப்பில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். வாணலி சூடான பிறகு அதில் தேங்காய் எண்ணையை ஊற்றி, சூடான பிறகு வெந்தயத்தை போட வேண்டும். அதன் நிறம் பொன்னிறமாக மாறிய பிறகு கறிவேப்பிலை போட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
எண்ணையை சிறிது நேரம் ஆற வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தேய்த்து வந்தால் கூந்தால் அடர்த்தியாக வளரும். பொடுகு பிரச்சனை வராது.
கூந்தல் வளர்வதற்கு ஏற்ற உணவுகள்
முடி வளர்வதற்கு எல்லாவற்றையும் விட உணவு வகைகளே உதவுகிறன. எந்தெந்த உணவு சாப்பிட்டால் முடி வளரும் என்பதை பார்ப்போம்.
· முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுவதனால் கூந்தால் வளர்ச்சியை கூட்டுகின்றது.
· பீன்ஸ் வகைகளை உணவில் சேர்த்து வந்தால், தலைமுடிக்கு நல்ல உறுதி கிடைக்கும் மற்றும் முடி உதிர்வது குறையும்.
· கீரை வகைகளில் அதிக இரும்பு சத்து உள்ளதால் வாரத்திற்கு இருமுறை உணவில் எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை தூண்டி கூந்தால் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.
· சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதன் மூலம் முடி கொட்டுவது குறைகிறது. மேலும், முகமும் பளபளப்பாக தோற்றம் அளிக்கும்.
· தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால், தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியை தூண்டி, வறட்சி இல்லாமல் பாதுகாக்கிறது.
· நட்ஸ் மற்றும் டிரை ஃப்ரூட்ஸ் தினமும் ஒரு கை அளவு சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை நிறுத்தும், பளபளப்பாகும். தோளுக்கு நல்ல நிறத்தையும் தரும்.
· நெல்லிக்கனிகளை தினமும் சாப்பிட்டு வரலாம்.
கூந்தலை பராமரிக்க சில வழி முறைகள்
· தலை குளித்த உடன் முடியை நன்கு காய வைக்க வேண்டும். ஈரத்துடன் தலையை சீப்பு வைத்து காய வைக்க கூடாது. அவ்வாறு ஈரத்துடன் வாரினால் முடி உதிர்ந்து விடும்.
· கூந்தலில் ஏற்கனவே எண்ணெய் சுரப்பி உள்ளது. அதனால் கூந்தலில் அதிக அளவு எண்ணெயை தேய்த்து விட கூடாது. தலையில் எண்ணெய் தேய்த்த உடனே குளித்து விட வேண்டும்.
· ஷாம்பூகளை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
· முடியை சீவுவதற்கு மர சீப்பை பயன்படுத்தலாம்.
· ஹேர் டிரையர் பயன்படுத்துவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.
· தலை குளிப்பதற்கு முன்பு முடியில் சிக்கு எடுத்து விட வேண்டும்.
· குளித்த பிறகு கை விரல்களை சீப்பு போல் பயன்படுத்தி சிக்கை எடுக்க வேண்டும்.
· தலையை துவட்டும் டவ்வல் எப்போதும் மென்மையானதாக இருக்க வேண்டும்.