நமது உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதும், மிகப் பெரியதுமானது தைராய்டு சுரப்பியாகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இச்சுரப்பி, நாம் பிறக்கும் போது 3 கிராம் அளவில் தொடங்கி, நாம் வளர்ந்து பெரியவர்களாகும் போது 60கிராம் எடை வரை மாற்றம் அடையும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, இதன் அளவு மேலும் அதிகரிக்கும்.
தைராய்டு சுரப்புக் குறைபாடு:
சாதாரணமாகப் பெண்களுக்கு தினமும் 150 மைக்ரோ கிராம் அளவு அயோடின் சத்து தேவைப்படுகிறது. அதே நேரத்தில் கர்ப்ப காலத்தில், அதே பெண்ணுக்கு 200 மைக்ரோ கிராம் அவசியப்படுகிறது. இது கிடைக்கத் தவறினால், தைராய்டு சுரப்புக் குறைபாடு ஏற்பட்டு, கழலை ஏற்படும்.
எனவே, கர்ப்ப காலத்தில், பெண்களுக்கு அவசியம் தைராய்டு பரிசோதனை தேவையாகும்.
கர்ப்பிணிகளுக்கு தைராய்டு சுரப்புக் குறைபாடு ஏற்பட்டால், கருவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, கருச்சிதைவு ஏற்படும்.
இக்குறைபாட்டை எவ்வாறு உறுதி செய்வது?
இவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்து, அதில் தைராய்டு ஹார்மேர்ன்களின் அளவுகளைப் பார்த்தால், இக்குறைபாட்டை கண்டறிய முடியும்.