பெண்களைத் தாக்கும் தைராய்டு நோய்கள்

Spread the love

தைராய்டு கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதையில் உள்ள நாளமில்லா சுரப்பியாகும். நம் மூளை மற்றும் உடலின் குறிப்பிட்ட பாகங்கள் தைராய்டு ஹார்மோன் சீராக சுரக்க உதவுகிறது. தைராய்டு ஹார்மோன் சுரப்பதில் பிரச்சனை ஏற்படுவதால் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் செலுத்தப்பட்டு அனைத்து தசைகளின் வளர்சிதை மாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.

தைராய்டு நீண்ட காலமாக உடல் ஆரோக்கியம் முழுவதையும் பாதிக்கக் கூடியதாகும். இது நம் கழுத்துப் பகுதியில் ஏற்படுகின்றது. இது ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு அதிகளவில் ஏற்படுகின்றது. இவற்றைப் பற்றி பார்க்கலாம்.

தைராய்டு வகைகள்

தைராய்டு நோய் இரு வகைப்படும். இவை இரண்டுமே அதிகளவில் பாதிப்பைத் தரக் கூடியது தான்.

தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவில் சுரப்பதால் ஹைபோ தைராய்டிசம் ஏற்படுகின்றது.

ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுவதால் உடல் பருமன், மாதவிடாய் தடைபடுதல், மலச்சிக்கல், மன அழுத்தம், மூட்டு வலி, முடி உதிர்வு, தோல் வறட்சி போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றது.

தைராய்டு ஹார்மோன் அதிக அளவில் சுரப்பதால் ஹைப்பர் தைராய்டிசம்  ஏற்படுகின்றது.

ஹைப்பர் தைராய்டிசம் பாதிப்பு உள்ளவர்களில் உடல் எடை உடனடியாக குறைந்து மெலிந்த நிலை ஏற்படுகின்றது.

ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறிகள் மெதுவாக தென்படுவதால் மன அழுத்தம் அல்லது பதட்டம் என தவறாக புரிந்து கொள்ள நேரிடும்.

தைராய்டு கட்டிகள்

தைராய்டு சுரப்பியில் உள்ள செல்களின் அபரிமிதமான வளர்ச்சியால் ஒன்று அல்லது இரண்டு கட்டிகள் ஏற்படலாம். இதற்கு காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இது எந்த ஒரு தொந்தரவும் ஏற்படுத்துவதில்லை. சிலருக்கு கழுத்தில் வலி, குரலில் மாற்றம், விழுங்குதல் மற்றும்  மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை மருத்துவரிடம் சென்று புற்றுநோய் கட்டி இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

பெண்களில் உண்டாகும் குறைபாடு

பெண்கள் தைராய்டு பிரச்சனைக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இல்லையெனில்  எதிர்கால பாதிப்புகள் உண்டாகும்.

தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அவசியமாகும். இதனை உணவில் இருந்து மட்டுமே முழுமையாக பெற முடியும். மருந்தும் உட்கொள்ளலாம்.

அயோடின் குறைபாட்டால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக கர்ப்பமடைந்த பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு அயோடின் மிகவும் அவசியமாகும். இவர்களுக்கு போதிய அளவு இல்லாத நிலையில் குறைபிரசவம், மூளை வளர்ச்சியில்லாத குழந்தை, மூளை திறன் குறைவான குழந்தை, பேச்சு கேட்கும் திறனில் குறைபாடு, குழந்தை பிறந்த பிறகு இறக்க நேரிடலாம். அயோடின் சேர்க்கப்பட்ட சமையல் உப்பை பயன்படுத்துவதன்  மூலம் இக்குறைபாட்டை தவிர்க்கலாம்.

உணவு முறைகள்

தைராய்டு குறைபாடு முற்றிலும் நீங்க அயோடின் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி, காளான், பூண்டு, கடற்பாசி, பால், மீன், பசலைக் கீரை, முட்டை, தானியங்கள், வேகவைத்த உருளைக்கிழங்கு, தக்காளி, ப்ளூபெர்ரி, ஆலிவ் எண்ணெய், நட்ஸ் வகைகள், கிராம்பு மற்றும் ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் தைராய்டு குறைபாட்டில் இருந்து விடுபடலாம்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் சோயா பொருட்கள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃப்ளவர், பீச், பிளம்ஸ், சர்க்கரை வள்ளி, மரவள்ளி, மணிலா பயறு, முள்ளங்கி, பசலை, பேக்கரி உணவுகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

பால் பொருட்களை முடிந்தளவு தவிர்க்கலாம். அதிகளவு நீர் அருந்துதல் வேண்டும்.  தைராய்டு குறைபாடு நீங்க உணவு கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும்.

சிகிச்சை முறை

தைராய்டு சுரப்பி பெரிதாவதால் காய்டர் ஏற்படுகின்றது. இதில் ஹார்மோன் சுரப்பிகள் அதிக அளவு அல்லது குறைவாகவோ அல்லது எந்தவித மாற்றமும் இன்றி செயல்படலாம். பெரிதான சுரப்பி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.

தைராய்டு சிகிச்சைக்கு மருந்துகள் உட்கொள்ளும் போது சரியான அளவு உட்கொள்வது அவசியமாகும். தேவையை விட குறைவாக உட்கொள்வதால் அறிகுறிகள் முழுவதும் குணமடையாது.

அதிகளவு உட்கொள்வதால் படபடப்பு, சோர்வு, மூச்சு வாங்குதல், எடை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

வருடத்திற்கு ஒரு முறை இரத்த பரிசோதனை செய்யலாம். இது தெரிந்ததும் மருத்துவரை அணுகி அதற்கான கிச்சைகளை பெறுவது அவசியமாகும். தொடர்ச்சியான மருந்துகள், உணவு முறைகள் மட்டுமே நோயிலிருந்து விடுபட உதவுகிறது.

ஆயுர்வேதம்.காம்

To Buy Our Products >>>


Spread the love