தைராய்டு பிரச்சனை, தப்பிக்கும் வழிகள்

Spread the love

தைராய்டு சுரப்பி என்பது ஒரு வகை நாளமில்லாச் சுரப்பியாகும். இது நமது உடலில் கழுத்துப் பகுதியில் மூச்சுக் குழாய் முன் பக்கம் அமைந்துள்ளது. இந்த தைராய்டு சுரப்பியானது கருவிலேயே அதாவது 30 வது நாளிலேயே உருவாகி விடுகிறது. இது நாக்கின் பின் பகுதியிலிருந்து உற்பத்தியாகி கீழ இறங்கி தொண்டைப் பகுதி வரை வந்து மூச்சுக் குழலுக்கு முன்பாக வண்ணத்துப் பூச்சி வடிவத்தில் அமைகிறது. உடம்பில் உள்ள எல்லாச் சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்கது தைராய்டு சுரப்பி. இதனை சுரப்பிகளின் அரசன் என்று கூறலாம். தைராய்டு சுரப்பியில் அயோடின் சத்து உள்ளது.

ஒரு அவுன்ஸ் அயோடின் உடலுக்கு ஒரு ஆண்டிற்கு போதுமானதாகும். அயோடின் சுரப்பிகளை ஒழுங்காக செயல்படச் செய்கிறது. மனதிற்கு சக்தியை அளிக்கிறது. சுயசிந்தனை, சுயமாக செயலாற்றும் திறன், கற்றல், தன்னம்பிக்கை இவற்றைத் தருகின்றது. கழுத்தில் உண்டாகும் கழலையானது, ஆரோக்கிய வழியை பின்பற்றாததால் சுயமாக ஏற்படும் விஷ மயக்கம், நரம்புக் கோளாறு, தலை சுற்றல், வழுக்கை ஆகியவற்றைத் தடுக்கிறது. என்றும் இளமையாக இருக்க அயோடின் உதவுகிறது.

உடம்பை சமநிலைப் படுத்துகிறது. அயோடின் குறைந்தால் தோல் சுருக்கம், முகத்தில் சோகம், கடுமை ஆகியவை உண்டாகும். அயோடின் இல்லாமல் இரத்தமானது, இரத்தக் குழாய்களில் பாயாது. இரத்தச் சோகை, நரம்புக்கோளாறு, ஒழுங்கற்ற சீதோஷ்ணம் கொண்ட உடல் நிலை, நீரிழிவு, சிறுநீரக வீக்கம், தேவையற்ற பயம், தொந்தி, வெறுப்பான செயல்கள், கடுமையான நீர்க்கோல், கொடிய பசி உணவு, மன ஒருமையின்மை போன்றவை அயோடின் குறைவினால் ஏற்படக் கூடியவை.

தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறினால் 90 வகையான நோய்கள் ஏற்படும். மிகை தைராய்டு, குறை தைராய்டு, தைராய்டு வீக்கம் ஆகியவை அதிகமாகக் காணப்படும். தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தால் அது மிகை தைராய்டு நோய் எனப்படும். இதன் அறிகுறிகள் பசி அதிகமாக இருக்கம். அடிக்கடி சாப்பிடுவார்கள். ஆனால் உடல் இளைத்துக் கொண்டே போகும். கை, கால்கள் ஒடுக்கம் இருக்கும். சில நேரங்களில் உடல் முழுவதும் நடுங்கும். காரணம் இல்லாமல் கோபம் வரும். மலம் கழியும். தூக்கமின்மை ஏற்படும் கண் விழிகள் பெரிதாகி முட்டிக்கொண்டு நிற்கும். இதய படபடப்பு இருக்கும்.

குறை தைராய்டு

தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் அது குறை தைராய்டு எனப்படும். இதன் அறிகுறிகள் உடல் பருமனாகும். மந்தமாக இருக்கும். சோம்பலாக இருக்கும். மலச்சிக்கல் உண்டாகும். கால் வீக்கம் ஏற்படும். கொழுப்பு அதிகமாகும். இது தவிர மூட்டு வலி உண்டாகும். சிலருக்கு கர்ப்பம் தங்காமல் போகவும் வாய்ப்புண்டு. மேலும் சிலருக்கு ஞாபக சக்தி குறைந்து மறதி ஏற்படும். பெண்கள் பூப்பெய்வது தாமதமாகும்.

தைராய்டு கட்டிகள்

தைராய்டு நீர் அதிகமாக சுரந்தால் நஞ்சு கலந்த வீக்கமும் விஷக் கட்டியும் தோன்றும். இது மாக்சிக் காய்ட்டர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ரக கட்டிகள் முதலில் சிறியதாக தோன்றும். ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி இருக்காது. ஆனால் திடீரென பெரிதாக வலி ஏற்படத் தொடங்கும். இதனால் மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் பாதிக்கப்படும் அபாயமும் நேரிடும். வீக்கம் வரும் போதே கவனித்து சிகிச்சை அளிக்க எளிதாக கட்டுப்படுத்தி விடலாம். இத்தகைய கட்டிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், மிகவும் நச்சுத் தன்மை கொண்டதாக மாறி புற்று நோயாக மாறிவிடும் அபாயம் உண்டு. அயோடின் சத்துக்கள் அடங்கிய உணவுகளை நாம் அடிக்கடி உட்கொள்ள தைராய்டு சுரப்பி பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். அயோடின் முழு அரிசி, நீரிலும், நீரைச் சுற்றிலும் வளர்பவன, வெங்காயம், அன்னாசி, பட்டாணி, பசலைக்கீரை, பீட்ரூட், காளான், வெட்டூஸ், தக்காளி, உருளைக் கிழங்கு தோல், கடல் நுரை, கடல் அருகே விளையும் காய்கறிகள் கடல் மீன்களில் காணப்படுகிறது.


Spread the love
error: Content is protected !!