பெண்களைத் தாக்கும் தைராய்டு நோய்கள்

Spread the love

தைராய்டு என்பது நம் கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு முக்கியமான சுரப்பியாகும். இது நாளமில்லா சுரப்பிகளுள் முக்கியமான ஒன்று. தைராய்டு சுரப்பி அதிகமாக வேலை செய்தாலோ அல்லது குறைவாக வேலை செய்தாலோ சிக்கல் தான். குறைவாக தைராயிடு சுரப்பி வேலை செய்தால் தைராய்டு குறை என்றும் அதிகமாக வேலை செய்தால் அதிக தைராய்டு என்றும் கோளாறுகள் ஏறப்படுகின்றன.

தைராய்டு சுரப்பியிலிருந்து சுரக்கின்ற முக்கிய ஹார்மோன் தைராக்ஸின் தான் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கின்றது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இயங்கவும் இதுதான் உதவுகிறது. தைராய்டு நோய்களால் பாதிக்கப்படும் 8௦ சதவிகிதம் பேர் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

இதற்க்குக் காரணம் பெண்களின் ஹார்மோன் குறைபாடுகளும் அவர்களது உடலமைப்புமே ஆகும். மாரடைப்பு என்று எடுத்துக் கொண்டால் அதனால் மிகுதியாக பாதிக்கப்படுகிறவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். அதே போல இரத்த அழுத்தம், என்று எடுத்துக்கொண்டாலும் அதிலும் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது போல இந்த தைராய்டு கோளாறுகளால் அதிக அளவில் பெண்கள் தான் ஆளாகிறார்கள்.

தைராய்டு குறைவு
தைராய்டு குறைவு கோளாறுகளால் சோம்பேறித்தனம், அசதி, சோகம், அதிக தூக்கம் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாத விலக்குத் தொந்தரவுகள் தொல்லையைத்தரும். பொதுவாக அனேக பெண்களுக்கு உடல் எடை கூடிக் கொண்டே போகும். “காய்ட்டர்” Goitre என்கிற தைராய்டு வீக்கம் கழுத்தில் ஏற்பதலாம், கை, கால் வலி, மூட்டு வலி, மலச்சிக்கல் போன்றவை தோன்றலாம். கருத்தரிப்பதில் கூட தடை ஏற்படவும் ம் வாய்ப்பு இருக்கிறது.

முடி கொட்டிப் போகும் அபாயமும் கூட உண்டு. அதிக தைராய்டு கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் டென்ஷனாகவும் ஒருவித படபடப்புடனும் இருப்பார்கள். கண்களின் அமைப்பு முழி பிதுங்கி வெளியே தெரியலாம். மாத விலக்குத் தொந்தரவுகள் ஏற்படலாம். பாலுறவில் நிறைய சிக்கல்கள் ஏற்படலாம். அதனால் விவாகரத்து வரை கூட போக நேரிடலாம் .

தைராய்டு சுரப்பி கோளாறுகளால் தொண்டை வலி வர வாய்ப்பில்லை. தைராய்டு சுரப்பி பெரிதாகி பலூன் போல உணவு குழாயைத் தடுக்கும் போது தொண்டை வலி சில சமயங்களில் ஏற்படலாம். குழந்தைகளையும் இது தாக்குகிறது. குழந்தைகள் பிறந்ததிலிருந்து வயதுக்கேற்ப அவர்களின் நடவடிக்கைகளில் முன்னேற்றங்கள் தோன்ற வேண்டும். அவ்வாறு அல்லாமல் கைகளைப் பற்றுவது, தாயின் குரலைக் கேட்டால் திரும்பிப் பார்ப்பது போன்ற அதன் முன்னேற்ற நடவடிக்கைகள் தைராய்டு கோளாறுகள் பாதிக்ககூடும். வயதுக்கேற்ற செயல்பாடுகளில் மந்த நிலை ஏற்பட்டால் உடனே கவனத்துடன் குழந்தையை பரிசோதிப்பது அவசியம்.

அப்படியே விட்டு விட்டால் குழந்தை வளர்ச்சி பாதிக்கப்பட்டு மந்த புத்தியுடனேயே இருக்க நேரிடலாம். தைராய்டு நோயின் காரணம்
தைராய்டு நோய்க்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகலாம். நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்நோய் இருந்தால் அதுவும் நம்மை தொடர்ந்து தாக்கவும் வாய்ப்புகள் உள்ளது.

எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வது போல தைராய்டையும் பரிசோதித்து தெரிந்து கொள்வது அவசியம். இளம் வயதில் கழுத்தில் புற்று நோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தாலும் கூட நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். நம் உணவில் அயோடின் குறைவும் ஒரு காரணமாக அமையலாம்.

மலையடிவாரத்தில் வாழும் மக்கள் போன்றவர்களுக்கு இயற்கையிலேயே அயோடின் குறைபாடு இருக்கும் அவர்களை இந்நோய் தாக்கலாம். தைராய்டு பாதிப்பு மிக மெதுவாகவே ஏற்படுவது போலவே இந்நோய் அகலுவதற்கும் நீண்ட நாள் ஆகலாம். நோயின் பாதிப்பைப் பொறுத்து மருத்துவ சிகிச்சை தரப்படுகின்றது.
தைராய்டு சிகிச்சை

“ஐசோடோப்” எனப்படும் அணுவியல் சிகிச்சை இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. இம்முறையில் நோய்களைக் கண்டு பிடித்து குணமாக்க முடியும். கதிர் இயக்கத் தன்மையுடைய இம் மருந்தை வாய் வழியாகச் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

தைராய்டு தொல்லைக்கு தீர்வு!
கருத்துகளை தெரிவிக்க

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

டயட்

உடலில் அயோ டின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தைராய்டு பிரச்னையை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்‘ என்கிறார் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும். உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.

அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.

தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.


Spread the love
error: Content is protected !!