காலையில் ஒரே ஒரு டம்ளர் இதை குடித்து பாருங்கள்….

Spread the love

சில குறிப்பிட்ட மூலிகை செடிகள் நமது வீட்டின் அருகிலேயே இருந்து வருகிறது. ஆனால் அது மூலிகையா என நாம் தெரிந்துகொள்ளாமல் அதை வெறும் பூண்டு செடி என்று நீக்கிவிடுகிறோம். அந்த வகையில் தான் இந்த “தைம்” மூலிகையும் இதன் மருத்துவ பயன்களும் கிட்டத்தட்ட ரோமானியர்கள் காலத்திலிருந்து வந்தது என்று கூறினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்த தைம் செடியின் மருத்துவ பலன்கள் பற்றி விரிவாக காண்போம்.

தைம் மூலிகையிலிருந்து தைலம், எண்ணெய், டீ என மூன்று முறையில் பல விதமான தீர்வுக்கு தயாராகி பெரிய அளவில் மார்க்கெட் செய்யப்பட்டு வருகிறது, இந்த மூலிகை நமக்கு கிடைத்தால் இதை டீயாக தயாரித்து பல உடல் பிரச்சனைக்கு தீர்வு பெறலாம். இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் இருப்பதோடு, இது உடலுக்கு நல்ல ஆண்டி ஆக்ஸிடன்டாவும் செயல்படுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதி சிறந்த பானம் என்று கூறலாம்.  நீங்கள் இரத்த சோகையால் அவதிபடுகிறவர்களாக இருந்தால், நீங்கள் எடுக்கும் சிகிச்சையோடு “தைம்” டீ குடித்து வந்தால் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

“தைம்” நரம்பு தளர்ச்சியை குணபடுத்தி மன வளர்ச்சியை பெருக்கும். குடலில் இருக்கும் நச்சு புழுக்களை நீக்கி, நெஞ்சுவலி, காசநோய், மார்புச்சளி, பித்தம் போன்ற பிரச்சனைகளை முற்றிலும் நீக்கும். இதன் எண்ணெயை வாயிலிட்டு கொப்பளித்தால், தொண்டை வலி குணமாகும். மேலும் இந்த எண்ணெய், இருமல், காய்ச்சல், வயிற்றுவலி, வயித்துப்போக்கு, தோல் அரிப்பு, டான்சில், வாய்புண், வாய் நாற்றம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

“தைம்”-ல் இருக்கும் மருத்துவ குணம், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக்கி, தைராய்டு பிரச்சனையை நீக்குகிறது. “தைம்”-ல் இருக்கும் கால்சியம் எலும்பு சம்மந்தமான முடக்கு வாதம், கீல்வாதம், மூட்டுவலி இவற்றிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்க உதவுகிறது. எவ்வளவு சாப்பிட்டாலும் களைப்பாக உணர்வு உள்ளவர்கள், காலையில் ஓரு டம்ளர் தைம் டீ –யை குடித்து வரும்போது, அந்த நாள் முழுவதும் களைப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். இப்போது இந்த தைம் டீ யை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

இதற்கு தேவையான பொருட்கள்:


தண்ணீர் ஒரு டம்ளர், தேன் தேவையான அளவு.


முதலில் தைம் இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்து, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு டம்ளர் நீரை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்ததும் அதனை இறக்கி வடிகட்ட வேண்டும். பின்  மிதமான சூட்டில் தேன் கலந்து குடிக்கவும்.இதனை தினமும் காலையில் டீ, காபிக்கு பதிலாக குடித்து வந்தால், உடல் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழலாம். 

ஆயுர்வேதம்.காம்


To buy our herb products >>>


Spread the love
error: Content is protected !!