தொண்டை தொந்தரவுகள்

Spread the love

தொண்டை தொந்தரவுகள்

கீழ்க்கண்டவை தொண்டை நோய்கள்

1.            தொண்டை புண், கரகரப்பு (Sore throat)

2.            டான்சிலைட்டீஸ் (Tonsilitis)

3.            அடினாய்ட் அழற்சி (Inflammation of Adenoid)

4.            குரல் வளை பாதிப்புகள்

5.            குரல் நாண்கள் பாதிப்பு

6.            குறட்டை

அ) தொண்டைபுண், கரகரப்பு, (தொண்டை கட்டு (Sore throat) (Pharyngitis)

தொண்டையின் அழற்சி தொண்டை கரகரப்பை உண்டாக்கும் Pharyngitis ன் முக்கால்வாசி நேரங்களில் டான்சிலைட்டீஸும் கூட வரும். பெரும்பாலும் +-

பாக்டீரியா தாக்குதல் ஏற்பட்டிருந்தால், சுரப்பிகளின் வீக்கம், சிவந்து போன தொண்டை, நல்ல ஜுரம், அதீத தசை – எலும்பு வலிகள் இருக்கும். இரண்டு சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஒன்று ரூமாடிக் ஜுரம் (Rheumatic fever) மற்றொன்று சிறுநீரக அழற்சி.

ஆயுர்வேதம் தொண்டை பாதிப்பு, தவறான உணவுப் பழக்கத்தால் உண்டானது என்கிறது. கப தோஷ பாதிப்புகள், ‘ஜில்’ என்று குளிர்ந்த உணவுகள், புளிப்புச் சுவை அதிகம் உள்ள உணவுகள் (புளி, அன்னாசி, தயிர், புளிப்பான மோர், அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகள் – இவை தொண்டையை பாதிக்கும்.

சாராயம், வேளைக்கு சாப்பிடாதது, விருத்தாஹாரங்கள் (ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாத உணவுகள் – உதாரணமாக மீனுடன் பால், வாழைப்பழத்துடன் தயிர்) இவையெல்லாம் தொண்டையை பாதிக்கும்.

புகையிலை (குட்கா போன்றவை) தொண்டை பாதிப்புககு ஓரு முக்கிய காரணம். டான்சிலைடீஸ் Pharyngitis கூட வருவது டான்சிலைடீஸ். இரண்டும் கிட்டத்தட்ட ஒன்று என்று கூட கூறலாம். டான்சிலைடீஸ் பெரும்பாலும் சிறுவர்களை தாக்குகிறது. Pharynx எனும் தொண்டைப் பகுதியில் உள்ள டான்சில்களின் அழற்சி, தொற்று டான்சிலைட்டீஸ். இதை ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும்.

டான்சில்கள் தொற்றுகளை தாங்கள் ஏற்றுக் கொண்டு, பெரிதாக பரவாமல் காக்கின்றன. பெரிதாக ஜலதோஷம், ஜுரம் ஏற்படும் முன் தொண்டை பாதிப்புகள் (தொண்டை கட்டுதல், வலி) உண்டாவது டான்சில்கள் முதலில் செயல்படுவது தான் காரணம். முன்பெல்லாம் சிறுவர்களை அடிக்கடி Tonsilities  தாக்குவதை தவிர்க்க டான்சில்களை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடுவது வழக்கமாக இருந்தது. அதனால் எந்த வித பயனும் இல்லை. மாறாக டான்சில் இல்லாவிட்டாலும் தொற்றுகள் அதிகமாகின்றன என்பது தெரிய வந்தால் இப்போது டான்சில்களை எடுப்பதில்லை.

அறிகுறிகள்

கிட்டத்தட்ட புண்பட்ட தொண்டை போல் தான், தொண்டை வலி, குறிப்பாக உணவை முழுங்குவதில் கடினம், வலி. குளிர் சுரம், சிவந்து, வீங்கிய டான்சில்ஸ், சில நேரங்களில் காது வலி முதலியன.

தொண்டை பாதிப்புக்களை தடுக்கும் உணவுகள்

சேர்க்க வேண்டியவை தானியங்கள் – கோதுமை, பார்லி காய்கறி – வெண்டைக்காய், கத்தரிக்காய் திரவியங்கள்- புடலங்காய், வெந்தயம், பூண்டு, மஞ்சள், இஞ்சி, வெங்காயம், பாகற்காய் பருப்புகள் – பயத்தம் பருப்பு மாமிசம் வறுத்த சிக்கன், மட்டன் (கீமா) முயல் மாமிசம் பழங்கள் தவிர்க்கவும் – உலர் திராட்சை, பேரீச்சம்பழம் எடுத்துக்கொள்ளலாம். பால் பால் சார்ந்த உணவுகள் – சூடான பசும் பால், நெய், ஆட்டுப்பால் நீர் – வெதுவெதுப்பான நீர், துளசி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகு, சுக்கு சேர்ந்த மூலிகை நீர் இதர – தேன், குங்குமப்பூ, தேஜ்பத்தா, இலவங்கம், எள், தனியா, சீரகம், பெருங்காயம், சர்க்கரைதவிர்க்க வேண்டியவை மக்காச்சோளம் முருங்கை இலைகள், பட்டாணி  கிழங்கு வகைகள், மிளகாய் கொள்ளு செம்மறியாட்டு மாமிசம், மீன் அன்னாசி, நாவல் பழம், பலாபழம், திராட்சை- இதர புளிப்பான பழங்கள்,  தயிர், மோர். தண்ணீர், ஃபிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீர் வறுத்த பொரித்த உணவுகள், அப்பளம், புளி, அக்ரூட், மசாலா உணவுகள், ஐஸ்கிரீம்.


Spread the love
error: Content is protected !!