தவிர்க்கலாம் தொண்டை தொற்றை

Spread the love

குழந்தைகளுக்கு தொண்டை தொற்று என்பது பொதுவானது. தொண்டை தொற்று பாதிப்புக்கு ஆன்டி பயாடிக்ஸ் களை தவிர்க்கலாம். தொண்டை கரகரப்பு போன்ற தொற்று ஒரு நெருடலான வலி, பாதிப்பு நிலையை ஏற்படுத்தும். தொண்டை தொற்று பாதிப்பு ஏற்படும் போது, விழுங்குவதில் சிரமம் ஏற்படும். எந்த பருவ காலத்திலும் இந்த பாதிப்பு ஏற்படலாம். அதே போன்று எந்த நேரமும், எந்த காலமும் ஏற்படலாம். குழந்தைகள் மற்றும் வளர்பருவத்தினர் தொண்டை தொற்று பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள்.

தொண்டை வலி தொற்று அல்லது டான்சிலை டிஸ் என்றும் கூறப்படுகிறது. மூக்கு – வாய்க்கு பின்னால் உள்ள குழிப் பகுதியான பாரின்க்ஸ் அல்லது டான்சிலை சுற்றியுள்ள பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக ªஉள்ளது. வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்று காரணமாக இது போன்று ஏற்படுகிறது. ப்ளூ அல்லது சுரப்பி சார்ந்த பரவலான சுகவீனத்தின் அறிகுறியாகவும் இது உள்ளது.

தொண்டை வலி, தொற்று பொதுவாக, குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் காணப்பட்டாலும், அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கிறது. இந்த தொற்றின் முக்கிய அறிகுறி, தொண்டை வலி மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகும்.

தொண்டை வலிக்கான காரணங்கள்

பொதுவாக வைரஸ்கள் மற்றும் அந்த வைரஸ்கள் ப்ளூ போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதனால் தொண்டை வலியையும் ஏற்படுத்துகிறது. சில வைரஸ்கள் வாய்ப்பகுதி மற்றும் தொண்டைப்பகுதிகளில் கொப்புளங் களை ஏற்படுத்துகின்றன.

வாய் வழியாக உணவு உண்ணும் பொழுது  தொண்டையில் வறட்சி ஏற்படுத்துகிறது. தொண்டை வலியையும் ஏற்படுத்துகிறது.

சைனஸ் வறட்சியால் பாக்டீரியா தொற்று காரணமாகவும் தொண்டை வலி ஏற்படுகிறது.

தொண்டை வலிக்கு ஸ்டப்டோகாகஸ் மற்றும் அர்கனோ பாக்டீரியம், ஹீமோ லைடிகம் என்ற 2 பொதுவான பாக்டீரியாக்கள் காரணமாக இருக்கின்றன.

ஆன்டிபயாடிக்ஸ், கீமோதெரபி அல்லது நோய் எதிர்ப்பு மருந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட பின்னர் தொண்டை வலி காணப்படலாம்.

தொண்டை வலி 2 வாரத்திற்கு மேலாக நீடித்தால் அது தீவிர சுகவீனமாக, தொண்டை புற்று அல்லது எய்ட்ஸ் அறிகுறியாக இருக்கலாம்.

வைரஸ் பாதிப்பால் ஏற்படும் தொண்டை வலி, பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. பொது குளிர் வைரஸ், இன்ப்ளுயன்சா மற்றும் எப்ஸ்டின் – பார் வைரஸ் (சுரப்பு காய்ச்சல் வைரஸ்) காரணங்களால் தொண்டை வலி பாதிப்பு ஏற்படுகிறது.

வைரஸ் தொற்று காற்றில் கலந்து இருமல் சிதறல்களாலும் திடீர் தும்மல்களாலும், கைகளை ஒழுங்காக கழுவாத போதும் தொற்று ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது.

தொண்டை தொற்று வலிக்கு காரணமான பாக் டீரியாவாக ஸ்டப்டோகாகஸ் ‘ஏ’ வகை உள்ளது.

பாக்டீரியா அல்லது வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்படும் தொண்டை வலி அறிகுறிகள்:

வலியுடன் கூடிய சிவந்த தொண்டை

டான்சில்கள் வீக்கம்

விழுங்குவதில் சிரமம்

காய்ச்சல்

தலைவலி

சில நேரங்களில் அரிதாக காய்ச்சல் காணப்படுகிறது.

ஸ்டப்டோகாகஸ் வைரஸ் பாதிப்பால் தொண் டை வலி ஏற்பட்டால், டான்சில் பகுதியில், வியர்க்குரு போன்ற கொப்புளங்கள் காணப்படலாம். இது போன்று, மேல் அன்னப் பகுதியிலும் காணப்படலாம்.

நோயின் அறிகுறிகளை வைத்து குறிப்பிட்ட நோயை டாக்டர் அடையாளம் காண்கிறார்.

சில நேரங்களில் தொண்டை பகுதி சுரப்பு நீர் அல்லது ரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

தொண்டை வலி பெரிய பிரச்சனையை தருவது இல்லை. ஒரு வாரம் வரை இது நீடிக்கும். ஆனால் கீழ்கண்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

இரண்டாம் நிலை தொற்று நடு காது, சைனஸ் அல்லது நெஞ்சுப்பகுதியில் ஏற்படலாம்.

தொண்டை வலி பாதிப்பு ஸ்டிரப்டோகாகஸ்சால் ஏற்பட்டது என்றால், சிவப்பு திட்டுகள் காணப்படலாம்.

மிகவும் அரிதாக மூட்டு வீக்க காய்ச்சல் அல்லது குறிப்பிட்ட சில  சிறுநீரக நோய்கள் ஏற்படலாம்.

தொண்டை தொற்று வலி ஏற்படும் போது கீழ்கண்ட சிகிச்சை எடுக்கலாம்.

தொண்டை தொற்று ஆயுர்வேத மருத்துவம்

1 வது கூட்டுச்சேர்க்கை

நன்கு உலர்ந்த போரக்ஸ் பவுடர் (50 மி.கி)

லிகோரிஸ் (300 மி.கி)

சிதோபிளாதி சூரணம் (100 கி)

தேன்

வழிமுறைகள்

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் சேர்த்து பசையாக ஆக்கி, ஒரு நாளில், பல முறை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி உள்ள இடத்தின் மேல் பகுதியிலும் இதனை தடவிக் கொள்ளலாம்.

2 வது கூட்டுச்சேர்க்கை

1 கிராம் சின்னமான்

தேன்

வழிமுறை

சின்னமானை பாத்திரத்தில் கொதிக்க வைத்து, இந்த கலவையை 3-4 முறை தினமும் பயன்படுத்த வேண்டும்.

கதிராடி வடி அல்லது லாவன் கடி வடி அல்லது மிரிச்சாதி வடியை 2-4 முறை தினமும் தேனை எடுத்துக் கொண்ட பின்னர் உறிஞ்சலாம்.

விட்டு  வைத்தியம்

தொண்டை வலி பாதிப்பு உள்ள நேரங்களில், பெரும்பாலான கட்டத்தில், ஓய்வு கொடுப்பது நல்லது.

பேசுவதை தவிர்க்கலாம்.

பழச்சாறு அல்லது பானங்கள் எடுத்து கொள்ள லாம். நீர்ச்சத்து இழப்பு ஏற்படாது.

சேஜ் – என்பது மாற்று மருத்துவம். இது தொண்டை வலி தொற்றுக்கு நல்ல சிகிச்சை முறையாக உள்ளது.

எலுமிச்சை பழச்சாறு தேன், வென்னீர் ஆகிய கலவை பானம் தொண்டை வலியை குறைக்க உதவுகிறது.

பூண்டு சிறந்த நோய் எதிர்ப்புச்சக்தியை தருகிறது. தொண்டை வலி பாதிப்பை வேகமாக நீக்குவதுடன், பாக்டீரியாவை அகற்றவும் பூண்டு உதவுகிறது. அனைத்து வயது தரப்பினரும், பூண்டை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.

தொண்டை வலி பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததும், ஏற்கனவே பயன்படுத்திய பல் துலக்கியை (பிரஷ்) தூக்கி எறிய வேண்டும். அதை தொடர்ந்து பயன்படுத்தினால், மீண்டும் தொண்டை வலி பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வீடுகளில் தொண்டை வலியை போக்குவதற்கு தண்ணீர், வினிகர், எலுமிச்சை சாறு, உப்பு,  மற்றும் இஞ்சி இதர 3-4 கூட்டுச் சேர்க்கையை உபயோகிக்கலாம்.

தொண்டை வலியை குறைக்க, சில தீவிர வழிமுறைகளாக கார்பனேட்டட்  பானங்கள், வர்த்தக பழச்சாறுகள், வாழைப்பழம், செம் பருத்தி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

தொண்டை வலியை குறைக்க, சிறந்த வீட்டு மருத்துவமாக தேன் உள்ளது.

தொண்டை வலிக்கு பெப்பர் மின்ட், புதினா இலைகள், புதினா மிட்டாய்கள் இதமானதாக இருக்கும். புதினாவில் மென்த்தால் இருப்பதால், அது தொண்டையை குளுமைப்படுத்துவதால், தொண்டை தொற்று பாதிப்பை குறைப்பது போல் இருக்கும்.

நாம் சாப்பிடும் உணவு தவறானதாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் பயனளிக்காது.                

சு. பிரேம் குமார்


Spread the love