மனம் மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் தூண்டுகிறது. மனதின் சக்தி அளவற்றது. ஆயுர்வேதத்தின் படி, நாம் ஒவ்வொரு நிமிடத்திலும் உடலின் தாது பலத்தை, சக்தியை செலவழிக்கிறோம். இதனால் தாது பல சேமிப்பு குறைகிறது. இது ‘ஆதானம்‘ எனப்படுகிறது. தாது இழப்பை நாம் உணவால் நிரப்பி விடுகிறோம். இதை ஆயுர்வேதம் ‘விஸர்க்கம்‘ என்கிறது. இந்த இரண்டையும் கட்டுப்படுத்துவது, ரஜோகுணமும், தமோ குணமும், மூன்றாவது குணம் “சாத்விகம்” சுருக்கமாக, ரஜோ குணமுடையவர்கள், அதிகம் பேசுவார்கள், தற்பெருமை கோபதாபங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். தமோ குணம் உடையவர்கள் பயந்தவர்களாகவும், சோம்பேறிகளாகவும் அதிகம் தூங்குபவர்களாகவும், படிப்பறிவு இல்லாமல் இருப்பார்கள்.
கீதையில் மனதைப் போல உணவையும் மூன்று விதமாக சொல்லப்படுகிறது. ஆயுள், உடல் மற்றும் மன வலிமை, ஆரோக்கியம் இவற்றை வளர்த்து, மனதை தெளிவாக்கி அறிவை விரிவடையச் செய்யும் உணவு சாத்விக உணவாகும். காரமான, புளிப்பான, உப்பு நிறைந்த உணவுகள் ரஜோ குணத்தை வளர்க்கும். சமைத்து வெகு நேரமான உணவு, துர்நாற்றமடிக்கும் உணவு, தமோ குணத்தை வளர்க்கும்.
ஆயுர்வேதம் உணவால் ஏற்படும் மனபாதிப்புகளை தவிர்க்க சிறந்த சமையல் முறைகளை விவரிக்கிறது. மூன்று தோஷங்களை சீராக வைத்து பஞ்ச பூதங்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. பருவகல மாற்றங்களையும், அந்தந்த பருவகாலங்களுக்கு ஏற்ற உணவையும் ஆயுர்வேதம் சொல்கிறது. எனவே நன்மை தரும் நற்குணங்களை தூண்டும் “சாத்விக” உணவை உண்பதே நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
உணவு நலம் மார்ச் 2011
மனதின், மூன்று, குணங்கள், மனம், மனதின் சக்தி, ஆயுர்வேதா, உடல், தாது பலம், ஆயுர்வேதம், ரஜோ குணம், தமோ குணம், கீதை, ஆயுள், மன வலிமை, ஆரோக்கியம், உணவு, மனபாதிப்புகள், மூன்று தோஷங்கள், பஞ்ச பூதங்கள், சாத்விக உணவு, ஆரோக்கியம், ஆயுர்வேதத்தின் அடிப்படை, மனதின் செயல்கள், மனதின் செயல்பாடுகள், மன சக்தி, மனது, ஆயுர்வேதா சொல்வது, ஆயுர்வேத கருத்துக்கள், ஆயுர்வேத செயல், ஆயுர்வேதம், மனது, பலம், தாது புஷ்டி, மன பாதிப்பு, கருத்து வேறுபாடு, சாத்வீக உணவுகள்,