நம் முன்னோர்கள் நம் உடலிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள் ஏன் தெரியுமா-? நிலையற்ற பொய்யான உடம்பில் மெய்யான மெய்பொருள் இருப்பதனால், பொய்யான இவ்வுடலிற்கு மெய் என்று பெயர் சூட்டினார்கள். உயிர் உடலில் இருந்து பிரிந்தால், பயனற்றதாக போய்விடும், என்பதால் இந்த உடலை பேணுவது பயனற்றது என்று சிலர் நினைக்கின்றனர்.
இன்பங்களை நாடும் இவ்வுடலை பேணிக்காத்தல் பயனற்றது என்று பலர் கருதுகின்றனர். இதற்கான பதிலை கூறி உடலை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதற்கான வழிகளையும் திருமூலர் கூறுகிறார்.
திருமூலர்
பதினெண் சித்தர்களில் திருமூலரும் ஒருவர். 63 நாயன்மார்களில் ஒருவராகவும். திருமூல நாயனாராகப் போற்றப்படுபவர். 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படும் திருமூலரின் திருமந்திரம், சைவ திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக போற்றப்படுகிறது.
உடல் நிலையாமை
உடம்பாகிய வீட்டை தாங்கும் தூண்களாக இரண்டு கால்கள் உள்ளன. உடலுக்கு உறுதியாக முதுகெலும்பு உள்ளது. அதன் இருபக்கங்களிலும் கூட்டைப் போல பெரிய விலா எலும்பு, பக்கத்திற்கு பதினாறாக முப்பத்திரண்டு எலும்புகளும் உள்ளன. மேலே கூறிய கூரையை மூடி வைக்க பல வகை தோல்கள் உள்ளன. இத்தனை இருந்தாலும் உயிர், இந்த வீட்டை விட்டு பிரிந்து போய்விடும். ஒரு முறை பிரிந்து சென்று விட்டால் மறுபடியும் வந்து முன் போல உடலினுள் சேர முடியாது.
வளமான வாழ்வுக்கு நலம் நிறைந்த உடல் வளம் தேவையாகும். உடலை பேணினால் உயிரை போற்றலாம்.
உடலை வளர்த்தால் தான் உள்ளத்தை வளர்க்க முடியும்.
உள்ளம் எனும் கட்டிடத்தை எழுப்ப சிறந்த உடல் நலம் என்ற அடித்தளம் தேவையானதாகும். இன்றைய உலகத்தில் உடல் நலம் பேணுதல் என்பது மிக முக்கியமான ஒன்று.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
உடல் நலத்திற்கு தடையாய் அமைவது நோய் எனலாம். நல்ல உணவை சரியான, அளவும், காலமும் அறிந்து உண்ண வேண்டும். சுவையான உணவு என்று அளவு மீறி சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்தை தரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உயிர் சத்து நிறைந்த உணவை அளவோடு சாப்பிட வேண்டும். அது மிகுந்தாலும் தொல்லைகள் தோன்றும். வைட்டமின் ‘ஏ’ அதிகமானால் பசி இல்லாமல் எடை குறையும். உடலில் அரிப்பு அதிகமாகும். ஈறு பெரிதாகும். முடி உதிரத் தொடங்கும்.
உடல் நலத்தை பேணும் முறைகள்
• காலையிலும், மாலையிலும் காற்றோட்டமான இடங்களில் நடப்பது நல்லது.
• நம் உறுப்புகளுக்கு ஓய்வு தரும் முறையில் உறங்க வேண்டும்.
• சத்துள்ள உணவை தரம் அறிந்து உண்ண வேண்டும்.
• வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளித்தல் வேண்டும். அதன் காரணமாக உடல் வலுவும், பொலிவும் பெறும்.
• இளமையில் உடல் நலத்தை பேணுதல் மிகவும் அவசியம்.
• சிறிய பிள்ளைகளை ஓடி ஆடி விளையாட விட வேண்டும். அதன் மூலம் முதுமையில் உடல் பலத்துடன் இருக்கலாம்.
தங்கள் நலன் கருதி,
ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.