நீடூழி நெடுநாள் வாழ வழி

Spread the love

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு. மரணம் என்பது தவிர்க்க இயலாதது. யாருக்கு எந்த நேரத்தில், எந்த வழியில் மரணம் ஏற்படும் என்பதை கூற இயலாது. மரணத்தைக் கண்டு பயப்படாத மனிதர்களே இல்லை. சித்தர்கள் மரணத்தை தவிர்க்கவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கான  ஆண்டுகள் வாழ்ந்து மக்களின் நோய் நொடிகளைத் தீர்த்து வைத்து இருக்கிறார்கள். ஆனால் மனிதனோ..? உடல் நலத்தை சின்னாபின்னமாக்கும் தீய பழக்கங்கள்; தவறான உணவு முறை; தகாத உறவு முறை என்று மனிதன் மரணத்திற்கு வரவேற்பு பத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறான்.  நு£று ஆண்டுகள்  வாழ்பவனை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

சித்த வைத்தியத்தினை தோற்றுவித்த சித்தர்களில் ஒருவர், மனிதனுக்கு ஏற்படும் சளி வகைகளையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும், என்ன உணவு, என்ன வகை சளியை ஏற்படுத்துகிறது என்பதையும் கூறியுள்ளார். சளிகள் நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி என்று மூன்று வகைப்படும். மனிதனுக்கு மரணம் மேற்கண்ட மூன்று சளிகளில் ஏதாவது ஒன்றினால் தான் ஏற்படுகிறது. இச்சளிகள் மனிதனின் உடலில் இல்லை என்றால் மரணம் என்பது இல்லை என்று அவர் கூறுகிறார்.

மனிதனுக்கு மேற்கண்ட 3 வகை சளிகள் ஏற்படுவதற்குரிய காரணம் என்ன?

பால், பால் பொருட்களால் ஆன தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும், அனைத்து அசைவ உணவுகளும், உப்பும் தினமும் சாப்பிடுவதால் தான் மனிதனது உடலில் நெஞ்சுச் சளி, மண்டைச் சளி, தொண்டைச் சளி ஏற்படுகிறது. இவை எல்லாம் வெளியேறாது, அங்கேயே தங்கி, அதிக நாட்கள் தங்கி மிகுதியாகி, மனிதனுக்கு இறக்கும் நிலையை உருவாக்கி விடுகிறது.

சளியை எவ்வாறு நீக்கலாம்?

உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள், கீரைகளை உட்கொள்ளலாம். சமைக்காத இயற்கை உணவுகளான தேங்காய், பழ வகைகளை உணவாக நாம் உணவுப் பழக்கத்தில் சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டு வரலாம். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்துச் சளிகளும், படிப்படியாக உடலிலிருந்து வெளியேறி விடும். அதன் பின் உடலில் சளி இல்லாத, வலியோ, நோயோ இல்லாத உறுதியான உடலாக நமது உடல் மாறுவதுடன், இறப்பினையும், முதுமைத் தோற்றத்தையும் தள்ளி வைத்து விடும்.

மரணத்தை மறுதலிக்க முடியாது; ஆனால் தள்ளி வைக்கலாம். நாம் ஏன் கனியிருக்க காயை கவர வேண்டும்? நீடூழி நெடுநாள் வாழ வாழ்த்துக்கள்.

                தங்கள் நலன் கருதி

                                ஆயுர்வேதம் ஞிக்ஷீ. ஷி. செந்தில் குமார்


Spread the love