நல்ல தலைமுறையை ‘சமையுங்கள்’ – 2

Spread the love

வளரும் பிள்ளைகளுக்கு மென்மையான உணவு வகைகளே சிறந்தது. சுவை அடிப்படையில் உணவு கொடுப்பதை தவிர்த்து, வயது அடிப்படையில், உணர்வுகளின் அடிப்படையில் உணவு கொடுக்க வேண்டும். தினமும் இரண்டு, மூன்று வித காய்கறிகள், கீரைகள், பருப்புக் கலந்த உணவு, கொண்டைக்கடலை, பழங்கள் எல்லாம் உணவுப் பட்டியலில் அவசியம் இடம் பெற வேண்டும். காய்கறி சூப் குடிப்பதை தினமும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரே மாதிரியாக இருக்கும் போது, சலிப்பு ஏற்படலாம். எனவே வடிவங்களை மாற்றிக் கொள்ளுங்கள். காய்கறிகளை சமைத்து கொடுக்காமல், ஓரிரு நாட்கள் பச்சையாக கொடுக்கலாம். சாலட் ஆக கொடுங்கள். இந்த உணவுகள், உங்கள் குழந்தைகளை சாத்வீகமாக வளர்ப்பதோடு, ஆரோக்கியமாகவும், பலசாலியாகவும், அறிவாளியாகவும் வளர்த்தெடுக்கும்.

கோபப்படுகிற, ஆக்ரோஷமான பிள்ளைகளுக்கு அசைவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, காய்கறி, பழங்களை கொடுங்கள். வன்முறை நடத்தை மாறுவதோடு, அவர்களது நுட்ப உணர்வுகளும் மேம்படும். நினைவாற்றல் பெருகும். வாரம் ஒரு நாள், ஒரு வேளைக்காவது வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவதை குடும்ப வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு எடுத்துக்காட்டாக உங்கள் குடும்பம் தான் இருக்கும்.

இவற்றை விடுத்து, நூடுல்ஸ், ரெடிமேட் உணவுகள், பீட்சா, பர்கர், எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி அயிட்டங்கள் என செயற்கை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வளர்த்தால், ஒரு தலைமுறையையே கெடுக்கிறீர்கள் என்று அர்த்தம்.

தங்கள் நலன் கருதி,

ஆயுர்வேதம் எஸ். செந்தில் குமார்.


Spread the love