‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே..
அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே’’ நீதிக்கு தலைவணங்கு படத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய இந்தப் பாடல் போன தலைமுறையைச் சேர்ந்த எல்லோருக்கும் தெரியும்.
குழந்தைகளின் சிறப்பான உருவாக்கத்தில் அம்மாவுக்கு மட்டுமல்ல.. அப்பா, தாத்தா, பாட்டி என அனைவருக்கும் முக்கியத்துவம் உண்டு. இவர்களை தவிர்த்து உணவுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. மனிதர்களின் உணர்வுகளுக்கும், அவர்களது உணவுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
உணவில் சாத்வீக உணவு, ராட்சச உணவு, தாமச உணவு என மூன்று வகை உண்டு. இதை மென்மையான உணவு, வன்மையான உணவு மற்றும் சோம்பல் உணவு, என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். கீரை, காய்கறிகள், பழங்கள் எல்லாம் மென்மை உணவு வகை. எண்ணெய் பதார்த்தங்கள், அசைவம், கிழங்குகள் எல்லாம் வன்மையான உணவு வகை. தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம் போன்றவையெல்லாம் சோம்பல் உணவு வகை.