சளி, இருமல் ஆஸ்துமா போக்கும் தான்றிக்காய்

Spread the love

பிபிடகி அல்லது பகேடா என்று இந்திமொழியில் அழைக்கப்படும் தான்றிக்காய் மர வகையாகும். பல்வேறு மருத்துவப் பயன்களை கொண்டுள்ளன. திரிபலாசூரணம் என்ற மருந்து தயாரிப்பில் முக்கியமாக சேர்க்கப்படும் மூன்று மூலிகைகளில் தான்றிக்காயும் ஒன்று. மற்ற இரு மூலிகைகள் கடுக்காய் மற்றும் நெல்லிக்கனி ஆகும். மேற்கு இந்தியாவின் வறண்ட பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. இலையுதிர்க் காடுகளில் உயரம் அதிமான மரங்கள் காணப்படுகின்றன.

தான்றிக்காய் உறுதியான வேர்களுடன் கூடிய பெரிய மரம் ஆகும். இலைகள் பெரியவை, 15 முதல் 25 செ.மீ வரை நீளமானவை. கிளைகளின் நுனிகளில் கொத்தாகக் காணப்படும். பூக்கள் சிறியதாக, வெளிறிய பச்சை நிறம் உள்ளவை. நெருடலான மணத்துடன் சிறிய காம்புகளின் காணப்படும். சிறிய காம்புகளில் காணப்படும் பழங்கள் 4 செ.மீ வரை நீளமுள்ளவை. நீள் வட்டத்தில் பழுப்பு நிறத்தில் காணப்படும்.

தாவர இயல் பெயர் :  டெர்மினாலியாஞ் பெல்லாரிகா

ஆங்கிலத்தில பெல்லாரிக் மைரோபாலன் என்றும் அழைக்கப்படும் தான்றிக்காய் தெலுங்கில் தான்றிகாயா; மலையாளத்தில் தான்னிகாய்; கன்னடத்தில் தான்றி காயா; பெங்காலியில் பாயடா என்றும் அழைக்கப்படுகிறது.

தான்றிக் காய் அனைத்து வகை சளி, காய்ச்சல், இருமல், பல் வலி, செரிமானக் கோளாறு, கல்லீரல், குடல் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்க, காயங்கள் வேகமாக ஆறு உதவுகிறது. தான்றிப் பழத்தின் விதை மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் இளநரை போக்கவும் முடி வளர்ச்சியினை அதிகரிக்கவும் உதவுகிறது.

தான்றிக்காயின் மருத்துவப்பண்புகளில், இதனை உட்கொள்ள இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது. எனவே நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் அல்லது அறுவை சிகிச்சைக்குரியவராக இருந்தால் உங்கள் மருத்துவரிடம் கூறி ஆலோசிப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் தான்றிக்காய் கலந்த மருந்தை ஒரு சில நாட்கள் தொடர்ச்சியாக பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரின் கண்காணிப்பில் உட்கொள்வது நல்லது. மேலும் அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மீறி அதிகமாக மருந்தை உட்கொள்ளக்கூடாது.

தான்றிக்காயின் சிறப்பான மருத்துவப் பயன்கள்

சளி, இருமல், ஆஸ்துமா மற்றும் அஜீரணக் கோளாறை குணப்படுத்துகிறது.

அதிமதுரம் வேர்ப்பகுதி, திப்பிலி, மற்றும் தான்றிக்காய் (தான்றிக்காயின் விதை நீக்கியது) மூன்றையும் சம அளவில் எடுத்து பொடியாக்கக் கொள்ளவும். மேற்படி பொடியில் 2 தேக்கரண்டி அளவு எடுத்து 500 மி.லி நீரில் விட்டு கலந்து கொதிக்க வைக்கவும். மேற்படி கொதிக்க வைத்த கஷாயத்தை வேளைக்கு 100 மி.லி என காலை, மாலை தினசரி இருவேளை அருந்தி வரவும். மேற்கூறிய உடல் கோளாறுகளுக்கு இது மிகச் சிறந்த நிவாரணம் தரும்.

தொண்டைப் புண்ணை குணப்படுத்துகிறது

நீங்கள் தான்றிக்காய் ஒன்றை சிறிய கல்/சுத்தியல் மூலம் நொறுக்கனால் அதிலிருந்து ஒரே ஒரு விதை வெளிவரும். அதை ஒதுக்கி விட்டு உடைந்த தோல் பகுதியை எடுத்து வாயில் போட்டு (சிறிது நேரம்) ஓரத்தில் ஒதுக்கிக் கொண்டு நீரை விழுங்கவும். துவர்ப்பு மற்றும் கசப்புச் சுவை இருநதாலும், தொண்டைப் புண், சளி பிரச்சனைக்கு மிகவும் சிறப்பாக பலன் தரும்.

வெளிக்காயங்களை குணப்படுத்துகிறது

உடலின் வெளிப்பகுதியில் ஏற்படும் காயங்களை அதிசயத்தக்கவிதமாக விரைவில் குணப்படுத்துகிறது. நீங்கள் சிறிய வேனல் கட்டி, தோல் எரிச்சலினால் பாத்க்கப்பட்டிருந்தால் (தான்றிக்காய் நுர் விட்டு மை போல அரைத்து) தடவி வர குணம் பெறலாம். தான்றிக்காய் துவையல் சாப்பிட மெனோபாஸ் காலத்திற்கு பின்பு பெண்களுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தமான கோளாறுகளை குணப்படுத்தலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love