இருமல் சளி தீர தாளிச பத்திரி

Spread the love

தமிழகத்தில் கடைச் சரக்காக மட்டுமே கிடைக்கும் தாளிசபத்திரி இமய மலையின் கிழக்குப் பகுதிகளான சிக்கிம், பூடான், திபேத், நேபாளம் போன்ற இடங்களில் கடல் பரப்பிற்கு மேல் 1600 மீ முதல் 4500 மீ வரை மட்டுமே வளரக் கூடிய ஒரு வகை ஊசி. சுமார் 200 அடி உயரம் வரை வளரும் இம்மரம் அடர்த்தியான இலைகளைக் கொண்டது. இலைகள் கரும்பச்சை நிறமுடைய ஊசி போன்றவை ஆகும். இவ்வகை மரங்கள் ஊசி மரங்கள் என அழைக்கப்படுபவை. காய்களும் விதைகளும் கோள்கள் என அழைக்கப்படும் முக்கோண வடிவம் கொண்டவை. இம் மரத்தின் கோள்கள் ஊதா நிறமுடையவை.

இவற்றின் இலைகள் மட்டுமே மருத்துவ பலன் கொண்டவை இதன் இலைகளில் இரு வகை மூலப்பொருட்களும் ஒரு வகை எண்ணெயும் கிடைக்கின்றன. இம்மரம் அதிக மழை உள்ள கிழக்கு இமயமலை பகுதியில் மட்டுமே வளரக் கூடியது.

இலைகள் ஜீரண சக்தியை தூண்டக் கூடியவை, இருமல், சளி போன்றவற்றை கட்டுபடுத்தக் கூடியவை. வயிற்று வலி, அடிவயிற்று வலி, போன்றவற்றை போக்கக் கூடியது. வயிற்றில் உள்ள வாய்வை வெளியேற்றக் கூடியது. ஜீரணத்தை தணிக்கக் கூடியவை.

பயன்கள்

1. இலைகளில் எடுத்த கஷாயம் இருமல், ஆஸ்துமா, கக்குவான் இருமல், வறட்டு இருமல் போன்றவற்றை தணிக்கக் கூடியது.

2. பாரம்பரிய மருத்துவ முறையில் தாளிசபத்திரி இலையின் சாறு 5 – 10 சொட்டு அளவில் தண்ணீர் அல்லது தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு நெஞ்சுச் சளி மற்றும் காய்ச்சலுக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

3. காய்ந்த இலைகளை பொடியாக்கி அதனை தேனில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க இருமல், இளைப்பு, இரைப்பு போன்றவை குணமாகும்.

4. மிளகு, சுக்கு, திப்பிலி, மூங்கிலுப்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை தேன் மற்றும் தாளிசபத்திரி இலை பொடி சேர்த்து கல்லீரல், ஷிஜீறீமீமீஸீ போன்றவற்றின் வீக்கம் மற்றும் குறைபாடுகளை சரி செய்யக் கூடியது.

5. இஹ்யின் பொடி அஜீரணம், வயிற்று உப்புசம், வாய்வு, வயிற்று வலி போன்றவற்றிற்கும் மருந்தாக உள்ளுக்கு கொடுக்கப்படுகின்றது.

6. தாளிசபத்திரி மரத்தின் பிசின் உடலின் வலி வீக்கம் மற்றும் நரம்புப் பிடிப்பு / வலிகளுக்கு பற்றாகப் போட உதவுகின்றது.


Spread the love
error: Content is protected !!