இமயமலையின் அடிவாரத்தில் பசுதை நிறத்துடன் நெடிது வளரக்கூடிய மரவகை இது. இதன் இலைகளே பெரிதும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விதைகள் கீழாநெல்லிக்காய்களைப் போன்றிருக்கும். மிகுந்த கசப்புச் சுவை கொண்டது. தாளிச பத்திரி இலைக் கஷாயம் இருமல், இழுப்பு, கபம், ஆஸ்த்துமா போன்ற நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
தாளிசபத்திரி இலை¬யைக் காயவைத்துப் பொடியாக்கி ஆடாதொடை இலைச்சாற்றில் கரைத்துக் கொடுக்க நாட்பட்ட ஈளை, இழுப்பு, ஆஸ்த்துமா போன்றவை குணமாகும். தாளிச பத்திரி இலைப்பொடி வயிற்றுப்போக்கு வாந்தி ஆகியவற்றை கண்டிப்பதுடன் வயிற்றுப்பொருமல், மந்தம், பசியின்மை ஆகியவற்றைப் போக்கிப் பசியைத் தூண்ட வல்லது.
தாளிசபத்திரி, மிளகு, சுக்கு, அரிசி, திப்பிலி, மூங்கிலுப்பு (குகைநீர்) இவைகளை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்கிற அளவில் சேர்த்து லவங்கப்பட்டை ஏல அரிசி இவை அரைப்பங்கு அரிசித்திப்பிலி நான்கு பங்கு கற்கண்டு 32 பங்கு சேர்த்து செய்யப்படும் சூரணத்திற்கு தாளிசாதி சூரணம் என்று பெயர்.
இது இருமல் இழுப்பு போன்ற நோய்களைப் போக்கும்.
ஒரு உறுப்பின் புற்று நோய்க்காகச் செய்யப்படும் கதிரியக்கக் சிகிச்சையால் மற்ற உறுப்புகளில் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதையும் அனைவரும் அறிதல் வேண்டும்.