நம்பினால் நம்புங்க இதோட பலன் வேர லெவல்

Spread the love

உண்மையிலேயே இளநீரின் பலன் எல்லாருக்கும் தெரியும். இதை பருகுவது மிகவும் நல்லது,நோயாளிகளுக்கு கூட எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இளநீரை வாங்கி கொடுக்கலாம்.இளநீரின் கூடுதல் பலன்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.இளநீரில் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, செம்பு, கந்தகம்,குளோரைடு போன்ற தாதுக்கள் குறைவில்லாமல் நமக்கு கிடைக்கும். இளநீரில் இருக்கும் புரதசத்தில், தாய்பாலில் இருக்கும் புரத சத்துக்கு இணையான மகத்துவம் அடங்கியிருக்கிறது.

இளநீரை குடிப்பதால் வாதம், பித்தம், கபதத்தில் இருந்து விடுதலை பெறலாம். அதோடு உடல் வெப்பத்தையும் தணித்து, ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். மேலும் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி விந்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும் உதவுகின்றது. இதனால் இரத்த சோகை வராமல் தடுக்கப்படுகின்றது. ஜீரண கோளாறுகளால் அவதிபடுகிற குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இரத்த  கொதிப்பு  உள்ளவர்களுக்கு  இளநீர் நல்ல மருந்து. 

உடலில் இருக்கும் அதிகபடியான உஷ்ணத்தை குறைக்கும் வல்லமை இளநீர்க்கு இருப்பதனால், அம்மை நோய் உள்ளவர்களுக்கும் நோயின் வீரியம் குறையும். சிறுநீர் கல்லடைப்பு ஏற்படாமல் இளநீர் தடுக்கும். மேலும் நாவறட்சி,தொண்டை வலியும் நீங்கும். அதிகமான மதுபழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் பாதிக்கும் அபாயம் உள்ளது. அதனை சீர்படுத்தும் ஆற்றல் இளநீருக்கு உள்ளது. இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய வால்வுகளை பாதுகாத்து துரிதமாக செயல்பட உதவுகிறது.

இதனால் இளநீர் குடித்து வந்தால் இதய நோய் நெருங்கவே நெருங்காது. எலும்பு பலவீனம் உள்ளவர்கள் இளநீர் குடிப்பதால் இதில் இருக்கும் சுண்ணாம்பு சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கும்,உறுதிக்கும் உதவுகிறது. இளநீரில் இருக்கும் உப்பு தன்மை, காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்து, அதோடு குடல் புழுக்களை அழிக்கிற ஆற்றலும் இளநீரில் இருக்கிறது.
குறிப்பாக இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்த நாளங்களின் உஷ்ணம் குடியேறாமல் இளநீர் உறுதுணையாக இருக்கும்.   

ஆயுர்வேதம்.காம்   


To Buy Our Herb Products >>>


Spread the love