காலையில் எழுந்தவுடன் காபியோ, டீயோ குடிக்காமல் அன்றைய பொழுது பெரும்பாலானோர்க்கு விடிவது இல்லை. காலையில் பற்களை விளக்காமல் பெட் காபி குடிப்பவர்கள் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல… உலகின் பல்வேறு நாடுகளிலும் இதே கதைதான். நாம் காபி அருந்துவதை விட தேனீர் அருந்துவதால் பல நன்மைகளை பெறுகிறோம் என்பதை அறிவியல் ஆராய்ச்சிகள் நிரூபித்து வருகின்றன. அவற்றுள் ஒரு சில முக்கிய நன்மைகளை பார்ப்போம்..
1. உடலில் நீர்ச்சத்தை நீடிக்க உதவும்.
உங்கள் உடலில் இருக்க வேண்டிய நீர்ச்சத்தை காபி அளித்தாலும், தேனீரில் உள்ள நீர் பொருட்கள் நீங்கள் வேர்த்திருக்கும் பொழுது வெளியேறும் (வேர்வைக்கு) நீருக்குப் பதிலாக சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. உங்கள் தோலுக்குத் தேவைப்படும் நீர்ச்சத்தை நீங்கள் இதன் மூலம் சரி செய்யும் பொழுது சருமமான மிருதுத் தன்மையும், அதிக இளக்கமானத் தன்மையும் அடைகிறது.
2. டீ நீண்ட நேரம் நம்மை இயக்க வைக்கிறது
நாம் அருந்தும் பானம் எந்த வகையாக இருந்தாலும் அதன் மூலம் நமக்குத் தேவையான சக்தியை நாம் பெறுகிறோம். ஆனால், தேனீர் மூலம் கிடைக்கும் ஆற்றல் நம்மை நீண்ட நேரம் இயங்கச் செய்கிறது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். காபி மற்றும் டீயில் காஃபின் என்ற பொருள் ஒரே அளவில் காணப்பட்டாலும், டீயை ஒப்பிடும் பொழுது காபி ஒரு வித து£க்க உணர்வைத் தரும். ஆனால் டீ அருந்தியவர்கள் மிக நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இயங்குவதைக் காணலாம்.
3. உடல் பருமன் நீங்கும்
நாம் அருந்தும் டீ வகைகளில் குறிப்பாக கிரீன் டீ தொடர்ந்து அருந்தி வரும் பொழுது, நமது உடல் எடை கணிசமான அளவு குறைவதை உணரலாம். வளர்சிதை இயக்க மாற்றத்தில் ஏற்படும் நிகழ்வு மட்டுல்லாது, கிரீன் டீயில் உள்ள குறைவான கலோரி அளவும் தான் இதற்கு காரணமாக உள்ளது. மற்ற கார்பனேற்றம் செய்யப்பட்ட மென்பானங்களை விட கிரீன் டீயில் கலோரி அளவு குறைவாக உள்ளது.
4. மன அழுத்தம், ஸ்ட்ரெசை(டென்சனை) குறைக்கிறது.
பொதுவாக ஒருவர் டீ அருந்துவதால் என்ன நேரிடுகிறது? இது ஸ்ட்ரெஸ் அளவை எவ்வாறு குறைக்கிறது? இப்பொழுதெல்லாம் பெரும்பாலானவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கப் டீ குடித்து விட்டு வரலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து ஒரு கோப்பை டீ குடிப்பதால் மனதில் ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைத்த உணர்வு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி டீயில் குறிப்பாக கிரீன் டீயில் மன அழுத்தத்ததைக் குறைக்கும் அல்லது தவிர்க்கும் ஒரு சில வேதிப்பொருட்கள் அடங்கியிருக்கிறது. இதனால் ஒரு கப் காபியை விட தேனீர் சிறந்ததாக உள்ளது. மன அழுத்தம் ஏற்படக்கூடிய ஹார்மோன் அளவுகளை குறைக்கிறது.
5. குறிப்பிட்ட வகை புற்று நோய்கள் வராமல் தடுக்கிறது
டீ அருந்துவதால், மனித உடலில் புற்றுநோய் தோன்றுவதற்குரிய செல்களை வளர விடாமல் தடை செய்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட புற்றுநோய் உருவாக்கக் கூடிய செல்களை (ஃபிரிராடிக்கல்களை) வெளியேற்ற உதவுகிறது. அது மட்டும் அல்லது டீ அருந்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. நாம் உடல் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் டீ அருந்துவது நல்லது.
1994ல் தேசிய புற்று நோய் நிறுவனம் தனது பத்திரிக்கைச் செய்தியில் கிரீன் டீ அருந்தும் சீனர்களில் கிட்டதட்ட 60 சதவீதம் பேர் உணவுக்குழாய் புற்று நோய் ஆபத்து குறைவதாக அறிவித்துள்ளது.
யுனிவர்சிட்டி ஆப் பர்டியூ ஆராய்ச்சியாளர்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாகவும், மோசமான கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்று கண்டறிந்துள்ளனர். இரத்தக் கட்டிகள் உருவாவதைக் குறைக்கிறது.
வயதானவர்களுக்குத் தோன்றும் பர்கின்சன் நோய் மற்றும் குறுகிய கால மறதி ஆகியவற்றை தேனீர் அருந்துவதால் குணப்படுத்த, குறைக்க உதவுகிறது.
6. எலும்புக்கு வலு தருகிறது
காபியை விட டீ அதிகம் அருந்துவதால் நமக்கு கிடைக்கும் முக்கிய பலன் என்னவெனில், நமது உடலில் உள்ள எலும்புகளுக்கு வலிமை தருகிறது. டீ தவறாமல் குடித்து வருபவர்களிடையே எலும்பு சார்ந்த பிரச்சனைகளான மூட்டுவலி, எலும்பு மூட்டுத் தேய்மானம் போன்றவை காபி அருந்துபவர்களை விட குறைவாக தோன்றுகிறது என்ற ஆஸ்திரேலியா நாட்டின் மருந்துவ ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
7. ஆன்டி ஆக்சிடன்ட் அடங்கியுள்ளது
ஏற்கனவே கூறியுள்ளபடி நமது உடலில் உள்ள விஷப் பொருட்களை நீக்கி ஆரோக்கியத்தைப் பேண டீயில் ஆன்டி ஆக்சிடன்டானது அதிக அளவு காணப்படுகிறது. வயது முதிர்வுத் தோற்றத்தையும தள்ளிப் போடுகிறது.