தேயிலையின் நற்குணங்கள்

Spread the love

தேயிலை இலைகளில், கரோடீன், ரிபோப்ளேவின், நிக்கோடினிக் அமிலம், பேன்தோதெனிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் இவை உள்ளன. இவைகளால் ரத்த அழுத்தம் அதிகமாவது, தொற்று நோய்கள் தவிர்க்கப்படுகிறது.

தேயிலையில் உள்ள பாலி ஃபெனால்ஸ் என்னும் பொருட்கள் புற்றுநோயை, இருதயநோயை தடுக்கும்.

கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

உடலின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும்.

தேயிலையில் உள்ள ப்ளூரைட் பற்களை பலப்படுத்தும்.

பச்சை தேயிலையின் நன்மைகள்

உடலில் கெடுதலை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிகல்ஸ் “க்ரீன் டீயில் உள்ள பாலி ஃபெனால்ஸ் அழித்து விடுவதால் சோர்வு அகன்று புத்துணர்ச்சி உண்டாகிறது. புற்றுநோயை தடுக்கிறது.

பச்சை தேயிலை ரத்த அழுத்தத்தை மற்றும் என்ஸைம்களை கட்டுப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது.

ரத்தம் கட்டுவதை தேயிலையில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட் குறைப்பதால் இதய வியாதியும் பக்கவாதமும் தடுக்கப்படுகின்றன.

பற்சிதைவை உண்டாக்கும் கிருமி ஸ்ட்ரெப்டோகாகஸ் முடன்ஸ், க்ரீன் டீ இந்த பாக்டீரியாவை வளரவிடாது.

வைரஸ் கிருமிகளை தேயிலையில் உள்ள ‘கேட்சின்ஸ்’ எனும் பொருள் அழித்து விடும். ப்ளூ போன்ற காய்ச்சல்கள் இதனால் தவிர்க்கப்படும்.

தேநீரின் நன்மைகளைப்பற்றி கூறும் போது சில மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. மேலும் ஆராய்ச்சிகள் தேவை. தேயிலையால் உண்டாகும் தீமைகளைப்பற்றி சரிவர தெரியவில்லையென்றாலும், அதில் காஃபின் உள்ளதால், அதை அளவாக குடிப்பது நன்மை தரும்.


Spread the love