குடம்புளி ஜுஸ் தயாரிப்பு

Spread the love

குடம் புளியை நீர் விட்டு நன்றாக அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்யப்பட்ட குடம் புளியை நீரில் ஓரிரு மணி நேரம் ஊற வைக்கவும். நீரின் நிறம் மாறியிருப்பதைக் காணலாம்.

இப்போது காய்ந்துபோன குடம்புளியானது மென்மையாக மாறியிருக்கும்.

நீரில் வெல்லம் சேர்ந்து காய்ச்சி, வெல்லம் முழுவதும் கரையும்படி செய்துகொண்டு அசுத்தங்களை நீக்க வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு தேவையான அளவு ஊற வைக்கப்பட்ட குடம்புளி நீரினை அதில் சேர்த்து ஓரிரு நொடிகள் காய்ச்சவும்.

ஏலக்காய், உலர்ந்த இஞ்சியை சிறு குழவி ஒன்றினால் இடித்துக் கொள்ளவும். ஜாதிக்காயையும் இடித்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் விரல் இடுக்களவு உப்பும் சேர்த்து மேற்கூறிய ஊற வைக்கப்பட்ட குடம்புளி நீரில் சேர்த்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.

மேற்கூறிய பானத்தை வடிகட்டிக் கொள்ள அருமையான குடம்புளி பானம் இப்போது அருந்துவதற்கு தயார்.

குறிப்பு

குடம் புளியானது மிகுந்த புளிப்புச் சுவை உடையது என்பதால் ஊறவைக்கப்பட்ட குடம்புளி நீர் அதிக அளவு செய்முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். உங்களால் பானத்தை அருந்த இயலாமல் போய்விடும்.

நீரிழிவு நோயாளிகள் இப்பானத்தை அருந்தினார்கள் எனில், அதற்கு முன்பு அவர்களின் இரத்தச் சர்க்கரை அளவை கண்காணித்துக் கொள்வது அவசியம்.

தினசரி சமையலில் இப்பானத்தை சேர்த்துக் கொள்ள முயற்சிக்கவும்.


Spread the love