சர்க்கரையா? கட்டாயம் இதை சாப்பிடுங்க

Spread the love

இந்த காலத்தில் சர்க்கரை நோய் நிறைய பேருக்கு சீக்கிரமே வந்துவிடுகிறது.  ஊட்டச்சத்து கோளாறுகளினால் வயதானவர்களுக்கு  மட்டுமில்லாமல் சிறிய குழந்தைகளுக்கும் வந்து விடுகிறது.  சர்க்கரை வியாதி இருக்கிறவர்கள் உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும், அதுமட்டுமல்லாமல் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள்  மட்டுமில்லாமல், அனைவருமே காய்கறிகள் மற்றும்  பழங்களை அதிகமாக  சாப்பிடுவது  மிகவும்  நல்லது.  சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எந்தெந்த காய்கறிகள் மற்றும்  பழங்களை சாப்பிட்டால் மிகவும்  நல்லது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க…

பிரொக்கோலியில் கலோரீஸ் மிகவும்  குறைவாக இருக்கிறது,  அதனால்  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை  கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது. சர்க்கரை வியாதிக்கு மட்டும் இல்லாமல் பொதுவாகவே இதில் வைட்டமின்ஸ், ஃபோலிக் அமிலம் இருப்பதால் அனைவருமே சாப்பிடலாம்.

ஸ்டாபெர்ரியில்  நிறைய ஆக்ஸிஜனேற்ற (antioxidant) சத்துக்கள் உள்ளது. குறிப்பாக சாப்பாடு சாப்பிட்ட பிறகு இந்த ஸ்டாபெர்ரி சாப்பிடுவது மிகவும் நல்லது. ஸ்டாபெர்ரி கொழுப்பை குறைக்க உதவுகிறது, அதுமட்டுமல்லாமல் உடலில் இன்சுலின் அளவை கட்டுபாட்டில் வைக்க உதவுகிறது, அதனால் தான்  ஸ்டாபெர்ரி சர்க்கரை நோய்க்கு மிகவும்  நல்லது என்று கூறுகிறார்கள்.

பூண்டு சாப்பிடுவதனால் நிறைய நன்மைகள் உள்ளன, குறிப்பாக கொழுப்பை குறைக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்திற்க்கும், சர்க்கரை வியாதிக்கும் மிகவும் நல்லது.

தர்பூசணி பழத்தில் நிறைய வைட்டமின்கள் உள்ளன. சர்க்கரை நோய் இருக்கிறவர்கள் தர்பூசணியை அதிக அளவு சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்று  அமெரிக்க ஆராய்ச்சி  ஒன்றில்  கண்டு பிடித்துள்ளனர்.

சர்க்கரை நோய் வரப்போகிறது என்பதற்கான சில அறிகுறிகள்

ஒரு குறிப்பிட வயதிற்கு மேல் சர்க்கரை வியாதி எல்லோருக்கும் தான் வருகிறது. சர்க்கரை நோய்க்கு முறையான  சிகிச்சை செய்யாமல்   விட்டுவிட்டால், அதிக அளவு பிரச்சனைகள் வரும். ஆனால், சர்க்கரை நோய் நமக்கு வந்துவிட்டது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம் தான், இருந்தாலும் சில அறிகுறிகளை வைத்து  கண்டுபிடிக்கலாம். அந்த அறிகுறிகள் என்னென்ன என்பதை கீழே பார்ப்போம்.

முதல் அறிகுறி, அதிகமாக  தாகம் எடுக்கும், அதுமட்டுமில்லாமல்  அதிகமாக  சிறுநீர்  போகும், ஏனென்றால்  இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்  போது இரத்தத்தில் உள்ள தண்ணீர் எளிதாக (water content easy) பிரிஞ்சு சிறுநீர் பையை (urine bladder) விரைவில் நிறைந்து விடும். அதனால் தான் சர்க்கரை நோய் வந்து விட்டால் தாகமும், சிறுநீர் கழிப்பதும் அதிகமாக இருக்கிறது.

அதிகமாக பசி எடுக்கும், அதற்கு காரணம் நம் உடம்பில் சுரக்கின்ற இன்சுலின் ஹார்மோன் (insulin hormone) முறையாக  செயல் படாமல் இருப்பதால், இரத்தத்தில் இருக்கின்ற  குளுக்கோசை  உடலினால்  பயன்படுத்த முடியமால் போய் விடும்,  அதன் காரணமாக  தான் பசி அதிகமாக எடுக்கிறது. எடை அதிகமாக  இருந்தால் சக்கரை வியாதி வருவதற்கான  வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

முதல் வகை சர்க்கரை நோய்  உள்ளவர்களுக்கு உடல் எடை மிகவும் வேகமாக குறையுமாம், ஏன்னென்றால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாததனால் உடம்பில் இருக்கின்ற கொழுப்பு திசுவும், தசை திசுவும் விரைவில் உடைந்துவிடும். எப்போதும் சோர்வாக இருப்பது போன்று  தோன்றி கொண்டே இருக்கும். சர்க்கரை நோய்  வந்தால் கண் மங்களாக தெரிவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. காயம் சரியாக அதிக காலம் ஆகும். காயத்திற்க்கு சரியான சிகிச்சை எடுக்காமல் இருந்தால் பெரிய பிரச்சனையில்  சென்று முடிந்து விடும்.


Spread the love