இந்தியாவின் பிரபலமான இனிப்பு உணவுகள்

Spread the love

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மொழிகள் மட்டும் பேசவில்லை, அவர்களது உடை, கலாச்சாரம், உணவு என எல்லாம் வெவ்வேறாக உள்ளன. இந்தியாவில் தான் நிறைய பண்டிகைகள் கொண்டாடுகின்றோம், எல்லா பாண்டிகைகளுக்கும், விசேஷங்களுக்கும் எல்லோரும் முக்கியமாக வீட்டிலேயே தயாரிக்கும் உணவு “இனிப்பு சிற்றுண்டி”. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு இனிப்பு சிற்றுண்டி பிரபலமாக உள்ளது, அதில் மிகவும் பிரபலமான, அனைவரும் விரும்பி உண்ணக் கூடிய இனிப்பு வகைகள் சிலவற்றைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகின்றேன்.

  1. குலாப் ஜாமுன்

அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இனிப்பு பண்டம் இந்த குலாப் ஜாமுன். விசேஷங்களின் போது முதலாவதாக நாம் செய்ய நினைப்பது இந்த குலாப் ஜாமுனை தான். கடையில் கிடைக்கும் இதன் “ரெடிமேட் மிக்சை” கொண்டு தான் நாம் இப்பொழுது எல்லாம் குலாப் ஜாமுனை செய்கின்றோம்.

இந்த குலாப் ஜாமுன், பாலில் இருந்து எடுக்கப்படும் “கோயா” என்று அழைக்கப்படும் மாவில் இருந்து தான் இந்த இனிப்பு பண்டத்தை நாம் செய்கின்றோம். இந்த குலாப் ஜாமுன் “முஹல்” காலத்து அரசரான ஷாஜகானுடைய சமையல்காரர், சமையல் செய்யும் போது நடந்த சிறு விபத்தில் இருந்து உருவாக்கப்பட்டது தான் இந்த இனிப்பு சிற்றுண்டி என்று சிலர் கூறுகின்றனர். “GULAB” என்பது “பெர்சிய” மொழி என்றும், தமிழில் “GUL” என்றால் “பூ” என்றும், “AB” என்றால் தண்ணிர் என்றும் கூறுகின்றனர். அதாவது நறுமணத்துடன் இருக்கின்ற தண்ணிர், அதாவது ஜீராவை குறிப்பதற்காக இந்த பெயர் வந்தது என்றும், “ஜாமுன்” என்பது உருது மொழியில் உள்ள வார்த்தையாகும், அதற்கு ஆர்த்தம் BLACK PLUM என கூறப்படும் ஒரு பழம் என்றும் “குலாப் ஜாமுன்” பார்ப்பதற்கு இந்த BLACK PLUM பழத்தை போலவே இருப்பதால் அப்படி அழைக்கப்படுகின்றது என்றும் கூறுகின்றனர்.

  • கஜர் கா ஹல்வா

கஜர் என்றால் கேரட் என்று பொருள், கேரட்டை வைத்து செய்யப்படும் ஒரு ஹல்வா தான் இந்த கஜர் கா ஹல்வா. இந்த இனிப்பு பண்டம் எந்த ஊரில் முதன் முதலில் கண்டுப் பிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை, ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தான் இந்த உணவு இந்தியா முழுக்க பரவப்பட்டிருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். “ஹல்வா” என்பது அராபிய மொழி வார்த்தை என்றும், அதற்கு பொருள் “இனிப்பு” என்றும் சொல்கிறார்கள். கேரட், சக்கரை, பால், நெய் எல்லாவற்றையும் சேர்த்து செய்யப்படுகின்றது இந்த கஜர் கா ஹல்வா.

  • சந்தேஷ்

சந்தேஷ், இந்த இனிப்பு ஒரு BENGAL உணவாகும், கொல்கத்தாவில் மிகவும் பிரபலமான இந்த இனிப்பு பண்டம், பாலில் இருந்து செய்யப்படுகின்றது. பாலை காய்த்து, எலுமிச்சம் பழ சாரை உற்றி பாலை திரலவத்து, சக்கரை சேர்த்து மிகவும் எளிதாக செய்கின்றனர் இந்த சந்தேஷ் இனிப்பு பண்டத்தை. ராமாயணத்தில் கூட இந்த இனிப்பு கூறப்பட்டுள்ளது ஆனால் சரியாக இந்த இனிப்பு எப்பொழுது கண்டுப்பிடிக்கப்பட்டது என்று தெரியவில்லை

  • கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்திக்கு கண்டிப்பாக எல்லார் வீட்டிலும் செய்யப்படும் ஒரு இனிப்பு பண்டம் இந்த கொழுக்கட்டை, அரிசிமாவிற்குள் பருப்பு, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்த செய்த பூரணத்தை வைத்து செய்யப்படும் இந்த கொழுக்கட்டை நம் தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான இனிப்பு பண்டம். இந்த பண்டத்தை வட இந்தியாவில் “மொடக்” என அழைகின்றனர். ஸ்ரீலங்கா தேசத்தில் இருக்கும் அம்பாறை மாநிலத்தில் நான்கு மாதங்கள் நிரம்பிய கர்ப்பிணி பெண்களுக்கு “பிள்ளை கொழுக்கட்டை” என்று கூறி, இந்த இனிப்பை வழங்குகின்றனர். கல்யாண வீட்டில் மணமக்களுக்கு குழந்தை செல்வமும், நல்ல அரோகியமும் இந்த கொழுக்கட்டையின் உருவம் போல் பெருக வேண்டும் என்பதற்காக இந்த இனிப்பை பரிமாறுகின்றனர் சில காலாச்சாரத்தில்.

  • பாயசம்

அடுத்ததாக கல்யாண பந்தியில் நாம் கடைசியாக சாப்பிடும் பாயசம். குறைந்த நேரத்தில் செய்யக் கூடுய ஒரு சுவையான இனிப்பு உணவு இந்த பாயசம். இந்தியா முழுக்க இந்த பாயசம் பிரபலமாக உள்ளது, சில மாநிலத்தில் “கிர்” என்றும் “பாயாசா” என்றும் அழைகின்றனர். இந்த பாயசம் நிறைய வகையில் செய்யப்படுகின்றது. அரிசி பாயசம், ஜவ்வரிசி பாயசம், பருப்பு பாயசம், சேமியா பாயசம் என இந்த எல்லா வகையான பாயசத்திலும் பால், சக்கரை அல்லது வெல்லம், நெய், மற்றும் முந்திரி போன்ற பொருட்கள் முக்கியமாக சேர்க்கப்படுகின்றது.  

  • காஜு கி பர்ஃபி

காஜு என்றால் முந்திரி என்று பொருள், வட இந்தியாவில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது இந்த இனிப்பு. பர்ஃபி என்றால் இனிப்பு என்று அர்த்தம், இந்த பர்ஃபி பாலை நன்றாக காய்த்து கெட்டியாக்கி, பிறகு அதில் இனிப்பு சேர்த்து செய்யப்படும். இந்த பர்ஃபியுடன் பொடித்த முந்திரியை சேர்த்து செய்யப்படுவது தான் காஜு கி பர்ஃபி. முந்திரியை ஊறவைத்து, அரைத்து செய்யப்படுவது காஜு கட்லி, ஆனால் காஜு கட்லியில் பால் சேர்க்க மாட்டார்கள். முந்திரி உபயோகிப்பதால் இந்த காஜு கி பர்ஃபி இனிப்பு வகையானது கொஞ்சம் விலை உயர்ந்த இனிப்பு பண்டம் ஆகும். இருந்தாலும் இந்த இனிப்பை அனைவரும் விருப்பி வாங்கி வருகின்றனர்.

  • டபுள் கா மீத்தா

டபுள் கா மீத்தா இந்த இனிப்பு ஹைதராபாத்தில் மிகவும் பிரபலம். இனிப்பு பிரட் செய்து அதனை பாலில் ஊறவைத்து, ஏலக்காய், குங்கும பூ எல்லாம் சேர்த்து செய்யப்படுகின்றது இந்த இனிப்பு. சாஹி துக்ர என்று அழைக்கப்படும் இன்னொரு இனிப்பு பண்டமும் இதனை போல் தான் இருக்கும். டபுள் கா மீத்தா என்றால் “டபுள் ரோட்டி” என்று ஆர்த்தம், பாலில் ஊறிய பிறகு பிரட் இரு மடங்கு பெரிதாகிவிடுவதனால் இந்த பெயர் வந்துள்ளது.

  • பிரிநி

இந்த பிரிநி இனிப்பு, பாயசம் போல் தான் இருக்கும், ஒரு சில வித்தயாசங்கள் மட்டும் தான். RICE PUDDING என்றும் இதனை அழைகின்றனர். இந்த பிரிநியை வெவ்வேறு விதமாக செய்கின்றனர். இந்த ரைஸ் புட்டிங் என அழைக்கப்படும் இனிப்பு, இந்தியாவில் மட்டும் இல்லை உலகம் முழுதும் பிரபலமாக உள்ளது. கானடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா என எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு விதமாக இந்த ரைஸ் புட்டிங்கை செய்கின்றனர். நமது நாட்டில் குறிப்பாக முஸ்லிம் பண்டிகையான ரம்ஜானிற்கு பிரிநி செய்து வருகின்றார்கள்.

இந்தியாவில் இன்னும் நமக்கு தெரியாத பல வகையான இனிப்பு பண்டங்கள் இருகின்றன, இந்தியாவில் திருவிழாக்களுக்கா பஞ்சம்?. இந்தியாவின் பலதரப்பட்ட அருமையான இனிப்பு பண்டங்களில் குறிப்பிட்ட சில வகைகளை மட்டுமே உங்களுக்காக பிரித்தெடுத்து காண்பித்துள்ளோம். நன்றி…


Spread the love