அழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதிற்குள் வருவது முகத்தை பராமரிப்பது தான். இது தான் பலரது மனதில் தோன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள், கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்கள் நகங்களை பற்றி கவலைப் படுவதில்லை. அப்படியே அக்கறை உள்ளவர்களும் கூட, அதை அழகாக வைக்க முற்படுவார்களே தவிர ஆரோக்கியமாக வைக்க முற்படுவதில்லை. இயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும்.
To Buy Our Herbal Products >>>
ஆரோக்கியமான நகங்களை பெற, அதை ஹைட்ரேட் செய்து நகத்துக்கு மேல் உள்ள தோலைப் பராமரிப்பது அவசியம். உறுதியான நகங்களை பெற கிரீம் மற்றும் ஆயில் கொண்டு மேல் தோலை அடிக்கடி ஹைடிரேட் செய்ய வேண்டும். நகங்கள் உறுதியாக புரோட்டின், பயோட்டின், இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நகத்தை கடிப்பதாலோ அல்லது நகத்தில் உள்ள அழுக்கை முரட்டுத்தனமாக எடுப்பதாலோ நக நுனிகளில் முறிவு ஏற்படும். நாளடைவில் நகமே உடைந்து விழுந்து விடும். அதே போல் சிலருக்கு நகத்தால் எதையாவது சுரண்டும் பழக்கம் இருக்கும். இது நகத்தின் மேல் கோடுகள் போல் தோற்றத்தை உருவாக்கி விடும்.
தரமற்ற நெயில் பாலிஷ்களை பயன்படுத்தினால், நகங்கள் வலுவிழந்து, ஆரோக்கியமிழந்து போய்விடும்.
நகம் புறத்தோல்களுக்கு கீழ் தான் வளரும். அதனால் புறத்தோலை மசாஜ் செய்தால், அந்த இடத்திற்கு இரத்த ஓட்டத்தை ஏற்ப்படுத்தி நகங்கள் ஆரோக்கியமாக வளர உதவும். இதற்கென சிகிச்சைக்கு செல்வதற்கு பதிலாக, வெறுமனே மசாஜ் செய்வதே சிறந்தது.
வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே நகங்களை மென்மையானதாக்க, நகப்படுக்கைகளை சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.
நகங்கள் மற்றும் அதன் புறத்தோல் போன்றவற்றிற்கு மெனிக்யூர் சீரான முறையில் செய்து கொள்வது அவசியம். அதே போல் தினமும் சருமத்தின் மீது மாய்ஸ்சுரைசர் தடவினால், நகங்கள் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.