உணவு பொருளிற்கு முன்னால் சுண்டைகாய் சிறந்த மருந்து பொருளாக இருந்துள்ளது. இதில் விட்டமின் ஏ, இரும்புசத்து, கால்சியம் மற்றும் நார்சத்து முக்கிய ஊட்டசத்துகளாக உள்ளது.
சுண்டைக்காயின் முக்கிய மூன்று விஷயங்கள் மிகவும் முன்னிலை படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது ஆண்டி-பாக்டீரியல், ஆண்டி-பூஞ்சை மற்றும் ஆண்டியாக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளது. சுண்டைக்காய், நுரையீரலில் ஏற்படும் கேன்சரை தடுக்ககூடியதாக இருக்கும். மேலும் செரிமானத்தை சீராக்கும். இதில் இருக்கும் பெனோலிக் என்ற பொருள், சிறந்த ஆண்டி-ஆக்சிடண்டாக உள்ளது.
இதில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் அளவை குறைத்து, சர்க்கரை நோயையும் கட்டுபடுத்தும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி, சிறுநீரை பெருக்கும். அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்து வந்தால் உடல் சோர்வு நீங்கும். சுண்டைக்காயை சுத்தமாக கழுவி அதை இரு பாதியாக கட்செய்து அதோடு பூண்டு, மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்து சூப் மாதிரி குடித்து வந்தால், கபம், இருமல், காய்ச்சல், மூலச்சூடு, மூலத்தினால் உண்டாகுகின்ற இரத்த கசிவு இவையனைத்தும் நீங்கும்.
மேலும் வாந்தி, தலைசுத்தல், மார்புசளி, தொண்டைகட்டு இவையனைத்தும் சரியாகும். பலதரப்பட்ட தோல் தொற்றிற்கும் சுண்டைக்காய், பல மருந்துகளில் சேர்க்கப்படுகின்றது. சுண்டைக்காயில் இருக்கும் எத்தனோலிக் மன அழுத்தத்தை குணமாக்கும். அதோடு நுரையீரல் மற்றும் மூச்சு குழாயில் ஏற்படும் நோய்களையும் தடுக்கும். சுண்டைக்காயை மோரில் ஊறவைத்து, வெயிலில் காய வைத்து, வத்தல் போல செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் குடல் புழுக்கள், கழிவு மூலமாக அழிந்து வெளியேறும்.
https://www.youtube.com/embed/5VyyncF7YME