சூரிய ஒளியில் குளியுங்கள்

Spread the love

குளிர் மற்றும் மழைக்காலங்களில் இந்த மந்த சோம்பல் நிலையும்அதிகமாகவே உணரப்படும். ஏனெனில் நம் உடலுக்கு வேண்டிய போதிய சூரியஒளி இன்மையே காரணம்.போதிய சூரிய ஒளி உடம்பிலும் படாத நிலையில் மெலடோனின் அதிகம் சுரப்பதால் உடம்பில் மந்த நிலை ஏற்படுகிறது.வெளியே சென்று சூரிய ஒளிபடும்படியாக ஒரு குளியல் அல்லது 15 நிமிடம் நடைபயணம் மேற்கொள்ளுங்கள்.காலையிலோ மதியமோ வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகளை சூரிய ஒளி வரும்படி திறந்து வையுங்கள்.

கதிர் ஒளி (Blu Rays) உபகரணங்களை கட்டுப்படுத்துங்கள்:

நீல கதிரொளி வீசும் உபகரணங்களான கணினி, மடி கணினி  மற்றும் தொலைகாட்சி போன்றவைகளை இரவு நேரத்தில் அதிகமாக உபயோகிக்காதீர்கள். அதில் இருந்து வீசும்ஒளிக் கதிர்கள் உடலில் மெலின்டானின் உற்பத்தியைதடுத்து தூக்கத்தையே சோர்வினையே உடனேயே தந்திடும். இரவு படுக்க போகும்முன் ஒரு மணிநேரம் தொலை காட்சி பார்க்காதீர்கள்.

மூச்சு பயிற்சி செய்யுங்கள் (பிராணயாமம்)

மூக்கு வழியாக மூச்சை சரியாக இழுத்துவிடாவிட்டால் கூட இந்த அசதி நிலை நாளும் நிலவும். தினமும் இரண்டு அல்லது மூன்று தடவையாவது. மூச்சை மூக்கு வழியாக காற்றும் வயிற்றை நிரப்பும் வரை பூரணமாக இழுத்துவிடவும். சுலபமான ஆரோக்ய வழி.

புரத சத்தை சேர்த்து கொள்ளுங்கள்: 

சுறுசுறுப்பாய் இருக்க என்றுமே நமது உடலில் 50 gm புரத சத்தும்  தேவை. கார்போஹைடிரேட்டும்உடலில் புரதச் சத்தை வெகுவாக உறிஞ்சிவிடும். இரத்தத்தில் குளுகோஸ் அளவையும் சரியாககட்டுபடுத்தும். புரத சத்தும், மேலும் அது உங்கள்மனது ஊக்கத்தையும் அதிகரிக்கும்.

காப்பியை கட்டுப்படுத்துங்கள்.

காப்பி பிரியர்களே அதிக காப்பியும் அதுவும் மதிய உணவுக்கு பிறகு இரவில் தூக்கத்தைகெடுத்து காலையில் எழுந்திருக்கும்பொழுதுமே சோம்பலை தரும். காப்பியின் அளவை குறையுங்கள். காப்பி டி மற்றும் குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை அளவு சோம்பலை தந்திடும். சர்க்கரைக்கு பதிலாக தேன் துளிகளை பயன்படுத்துங்கள். மிகவும் நலம்.

எளிய வழிமுறைகள் (சோம்பலை விரட்ட)

சோம்பலை தவிர்த்து உடனே சுறுசுறுப்பு பெற சில சுலப வழிகள்.

1. நறுமணச் சுவைகளை முகருங்கள்.

2. நறுமணச் சுவைகள் கலந்த பெப்பர்மெண்ட் அல்லது சாக்லேட்டுகளை சுவையுங்கள்.

3. சிறிது நேரம் கைகால்களை முழுமையாக நீட்டி இளைப்பாருங்கள்.

4. உடம்புக்கு ஒரு சிறிய ‘மசாஜ்’ செய்யுங்கள். உடம்பும் மூளையும் புத்துணர்வு பெறும்.

5. குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவுங்கள் முடிந்தால் ‘ஷவர்’ குளியல் போடுங்கள்.

6. நீங்கள் விரும்பும் நல்லதொரு இசையை கேளுங்கள்.இசை என்றுமே மயக்கம் அல்லது மந்த நிலையை விரட்டி புத்துணர்வை வெகுவாகவே தந்திடும்.


Spread the love