வெயில்கால டிப்ஸ்…

Spread the love

·             வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச் செல்லுங்கள்.

·             பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.

·             தினமும் இரண்டு முறை குளியுங்கள். இல்லையெனில் வீட்டுக்குள் நுழைந்ததும் கை கால்களைக் கழுவ வேண்டியது அவசியம்.

·             கொதிக்க வைத்து ஆறிய நீரையே குடியுங்கள். ஐஸ் வாட்டர் வேண்டாம்.

·             குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உண்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

·             செயற்கை உணவுகள், சாலையோர உணவு வகைகளை சாப்பிடாதீர்கள்.

·             வெயிலுக்கு இதமாக இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம். பழச்சாறுகளை ஐஸ் சேர்க்காமல் அருந்துங்கள்.

·             அசைவ உணவை தவிர்த்து தினமும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love