கோடைக் காலத்திற்கேற்ற நீர், மோர்

Spread the love

குறைந்த கலோரி அளவு நிறைந்த உணவுச் சத்து மோர் ஆகும். தயிரிலிருந்து கடைந்து வெண்ணெய் எடுக்கப்பட்ட ஒரு டம்ளர் சுமார் 200 மி.லி. மோரில் 25 – 30 கலோரி எரிசக்தி அடங்கியுள்ளது.

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றும் சொல்லலாம். பசியும் அடங்கும் அதே சமயம் வயிறும் நிறைந்து விடும். ஒரு நாளைக்கு 8 டம்ளர் மோர் குடித்தால் கூட 200 – 250 கலோரி தான் நீங்கள் உட்கொண்டிருப்பீர்கள்.

மோரில் அதிக ஊட்டச் சத்து நிறைந்து காணப்படும். கொழுப்புச் சத்து தான் அதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறதே தவிர, புரதம், மணிச்சத்து கால்சியம் மற்றும் வைட்டமின்கள் காணப்படுகின்றன.

மோரில் அதிக அளவு நீர் கலந்து, சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு நாளைக்கு ஐந்தாறு முறை குடிக்கலாம்.

வேலைக்கு செல்பவர்கள் கூட ஒரு பாட்டிலில் மோர் கலந்து எடுத்து சென்று இரண்டு அல்லது மூன்று முறை பருகலாம். கலோரி அளவு குறைந்து இருக்கும். உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கும் கோடைக்காலத்திற்கு நல்லது.

உணவு நலம் மே 2011

கோடைக் காலத்திற்கேற்ற நீர், மோர், கலோரி அளவு, உணவுச்சத்துவெண்ணெய், எரிசக்தி, உடல் எடை, கலோரி, ஊட்டச்சத்து, கொழுப்புச் சத்து, புரதம், மணிச்சத்து, கால்சியம், வைட்டமின்கள், கலோரிஅளவு, சத்து, உணவு, தயிர், கொழுப்பு, கால்ஸியம், வைட்டமின், உடல்எடை,


Spread the love
error: Content is protected !!