கோடைக்கேற்ற சுவை நீர்

Spread the love

சுவை நீர் என்பது வேறொன்றும் இல்லை. பழங்களின் சுவை கொண்ட நீர்களே ஆகும். கோடை காலத்தில் உடலின் ஈரச்சத்து குறையாமல் இருப்பதற்கு தேவையான அளவு நீர் பருகிட வேண்டும். ஆனால், அதிக நீரை வெறும் நீராக குடிப்பது சிரமமாக இருக்கும் என்பதால் சில பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் போன்றவற்றின் சுவையை நீர்களுக்கு ஊட்டி சுவை நீர்களாக பருகினால் எளிதாக பருகிட இயலும். உடல் ஆரோக்கியமாகவும் வனப்புடனும் திகழ்ந்திடும்.

பழங்களை அப்படியே சாப்பிடுவது சாலச்சிறந்தது எனினும் அப்படியே சாப்பிட முடியாதவர்கள் அதனை சுவை நீர்களாக பழரச பானங்களாக மாற்றி பருகிடலாம். கோடை காலத்திற்கேற்ற சில வகை இதோ

ஃப்ரூட் கோலாடா

தேவையான பொருட்கள்

பைனாப்பிள்-1கப்

அன்னாசி   –11/2கப்

ஆரஞ்சு     –5

செய்முறை

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்த ஒன்றாக மிக்ஸியில் அடித்து வடிகட்டி குளிர்ச்சியூட்டி பருகிடலாம். தேவைக்கு ஜீனி சேர்த்துக் கொள்ளலாம்.

கரும்புச்சாறு

கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. அதிக இனிப்பு சுவை கொண்டது. கரும்புச் சாறு ஆகும். கரும்புச் சாறுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து சாப்பிட உடலுக்கு புத்துணர்ச்சியும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சக்தியையும் அளிக்கும். இது சிறுநீர்த் தாரையில் ஏற்படும் அழற்சி சிறுநீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர்த்தாடையை போக்கும். இதனை உச்சி வெயிலில் சாப்பிடுவது நல்லது.

பதனீர்

பதனீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். தேவையான சக்தியையும் தரும். பதனீரை காலையில் சாப்பிடுவது மிகுந்த நன்மை பயக்கும்.

மூலிகை சுவை நீர்

கோடை காலத்திற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், குளிர்ச்சியையும் தரக் கூடியவை நன்னாரி மற்றும் வெட்டி வேர் ஆகும். நன்னாரி வேரையும், வெட்டி வேரையும் பானையில் ஊறப் போட்டு வைத்து ஒன்றிரண்டு நாட்கள் வரை பருகிட நல்ல பலன் கிடைக்கும். இவற்றில் ஊற வைத்த சப்ஜா விதை11/2 ஸ்பூனும் சர்பத் தேவையான அளவு சேர்த்துப் பருக நல்ல ருசியாக இருக்கும்.

இளநீர்

இயற்கை அளித்துள்ள அற்புதமான சத்துணவு பானம் இளநீர். வயிற்றுப் புண்ணை ஆற்றும். சிறுநீர்க் கோளாறுகளை சீராக்கும். வாய்வுத் தொல்லையை போக்கும்.

நுங்கு

நுங்கு இளநீர் போன்றே குணங்கள் கொண்டது. இதற்கு ஈடு இணை இல்லவே இல்லை.

நீர் மோர்

புளிப்பில்லாத மோரில் நன்கு நீர் கலந்து இஞ்சி, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நீர் மோர் தயாரித்து பருகிடலாம். இதற்கு நல்ல குளிரச் செய்யும் சக்தியுள்ளது. மிகவும் சுவையானதும் கூட.

அகர் அகர் அல்வா சுவை நீர்

வெளிநாடுகளிலிருந்து வரக் கூடிய சுத்தம் செய்யப்பட்ட கடல் பாசியான அகர் அகர் சிறது எடுத்து அதனை சுத்தமான பன்னீரில் போட்டு அதில் சர்க்கரை கலந்து பருகலாம் அல்லது அதனை பிரிஜ்ஜில் வைத்து ஐஸ்கட்டியாக ஆக்கினால் அல்வா போல ஜெல்லியாக இருக்கும். இது சுவையானது குளிர்ச்சி தரக்கூடியது.

மூலிகை சுவை நீர் நன்மைகள்

காபி, டீ அருந்துவதற்கு பதிலாக இக்காலத்தினர் மூலிகைகளை வைத்து சுவைநீர் செய்து பருகி வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் தரும். உடலில் நச்சுப் பொருளும் சேராது. இவற்றிற்கு தகுந்த மூலிகைகள், ஆவாதை, நெல்லிக்காய், துளசி, கொத்தமல்லி, ரோஜா மொட்டு, புதினா, சுக்கு, தாமரைப் பூ, செம்பருத்திப் பூ போன்றவையாகும்.

இவற்றை காபி/டீ தயாரிப்பது போலவே எளிமையாக தயாரிக்கலாம். அவ்றறை சூடாகவும் பருகலாம் குளிர்ச்சியூட்டியும் பருகலாம். இவற்றை மிக எளிய செலவில் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம். உடல் ஆரோக்கியம் காத்திடலாம்.


Spread the love
error: Content is protected !!