சர்க்கரை நோய்

Spread the love

சர்க்கரை வியாதி என்றவுடனே ‘ஐயோ, டயட்டில் இருக்க வேண்டுமே, என்னால் முடியாதப்பா” என்று அலறுவது சகஜம். நமது வாழ்வில் ஒரு கால கட்டத்திற்கு பிறகு வியாதி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, உணவுக்கட்டுபாடு அவசியம் தான். அதுவும் தற்போது உணவு மருத்துவம் மிகவும் புரட்சிகரமாக முன்னேறியிருக்கிறது. பலவித, பலவகை உணவுகள் கிடைக்கின்றன. இன்சுலீன் கண்டுபிடிப்பதற்கு முன் உணவு கட்டுப்பாடு ஒன்றே சர்க்கரை வியாதிக்கு மருந்தாக இருந்தது. முன்பு இருந்த ‘பட்டினி – பத்தியம்’ மாறி குறைந்த கொழுப்பு – அதிக நார்சத்து உணவு பிரபலமாகி விட்டது. புரதகட்டுப்பாடு, டயாபிடீக் நெப்ரோபதி (Diabetic nephropathy) யை குறைக்கும் என்பதும், காய்கறி புரதம், மிருக புரதங்களைவிட பாதுகாப்பானது என்பதும் தற்கால கணிப்புகள்.

நீரிழிவில் உணவு கட்டுபாட்டின் லட்சியங்கள்

1. சத்தான உணவினால் ஆரோக்கியத்தை மேம்படுத்தல்

2. ரத்த சர்க்கரை அளவு மற்றும் ‘லிபிட்’ (கொழுப்புகள்- fats, steroids. geycolipids) பொருட்களின் அளவுகளை சீராக வைத்திருத்தல்

3. வளர்ச்சி, சரியான உடல் எடை, உடலின் பல தேவைகளை பூர்த்தி செய்ய, வியாதிகளிலிருந்து மீண்டவுடன் தேவைப்படும் சத்துக்கள் இவற்றை பெறுவது.

4. அதிக உடல் எடை, இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் இவைவராமல் பாதுகாக்கும் சத்துள்ள உணவை உட்கொள்வது.

சர்க்கரை வியாதிக்கு ஏற்ற உணவுகளை உட்கொள்வதால், கடிகார பெண்டுலம் போல அதிக சர்க்கரை அளவு அல்லது குறைந்த சர்க்கரை அளவு என்று மாறி மாறி ஏற்படும் நிலைமையை தவிர்க்கலாம்.

சர்க்கரை வியாதிக்கான உணவை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

1. உணவின் கலோரி அளவு என்ன

2. க்ளைசெமிக் (இரத்தில் சர்க்கரை மிகுந்து காணப்படுதல்) அளவு

3. நார்ச்சத்து

4. உணவின் வெளித்தோற்றம் – திரவ உணவா இல்லை திட உணவா – என்பது

சிகிச்சை

1. வளர்சிதை மாற்றம், மருந்துகளால் ஏற்படும் ஆண்மைகுறைவு, சத்தில்லா உணவு, புகைபிடித்தல், குடிப்பது, இது போன்ற காரணங்களை மாற்றலாம். இது முதல் படி.

2. மனோரீதியான ஆண்மைகுறைவுக்கேற்ற ஸென்ஸேட் – ஃபோகசிங், (Sensate focus therapy), உடலுறவில்லாத உடற்பயிற்சிகள் போன்றவை மேற்கொள்வது.

3. ஆயுர்வேத மூலிகையான பூனைக்காளி (Mucuma Pruriens), யோஹிம்பைன், ஸ்ட்னாக் னின் (Strychnine) போன்ற மருந்துகள் பலன் தரும். ஆண் ஹார்மோன் சிகிச்சையும் உதவும். சில்டெனாபில் சிட்ரேட் (Sildenafil citrate) என்ற மருந்து தற்போது மற்ற சிகிச்சைகளை பின் தள்ளி, ஆண்மை குறைவுக்கு அருமருந்தாகி விட்டது. வயாகராவும் பிரபலம். ஆனால் மருத்துவர் களின் அறிவுரை. கண்காணிப்பில்லாமல் இந்த மருந்துகளை சாப்பிடக்கூடாது.

4. நீரிழிவு உள்ள பெண்களின் பாலியல் குறைபாடுகளை களைவது சிறிது சுலபம். பெண் உறுப்பின் வறட்சிக்கு பல களிம்புகள் உள்ளன. பெண்ணுறுப்பில் ஏற்படும் தொற்றுக்களுக்கும் நல்ல மருந்துகள் உள்ளன. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, நீயூரோ – விட்டமின்கள் சாப்பிட்டு வந்தாலே பெண்களின் கிளிட்டோரல் நியூரோபதி (Clitoral neuropathy) சரியாகும்.

ஆண்மை, பெண்மை குறைபாடுகள் சர்க்கரை வியாதி உள்ளவர்களை அதிகம் பாதிப்பதால், இந்த குறைபாடுகளை தவிர்க்க முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு வியாதி உள்ளவர்கள் இதனால் மனத்தளர்ச்சி அடைய வேண்டாம். தற்போது முன்னேறிய சிகிச்சை முறைகள் கிடைக்கின்றன.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!