சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் மூலிகைகள்

Spread the love

நம் இரத்த சர்க்கரை அளவு, நம் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவில் ஏற்படும் மாற்றங்கள் டயாபெட்டிஸ் ஏற்படுத்துவது இல்லை. சர்க்கரை நோயை சரியாக கவனிக்காமல் விடுவதால் அதிகமான பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு தினசரி உடற்பயிற்சி, சரியான உணவுப் பழக்கம், சில நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகள் போன்றவை மிகவும் அவசியமாகும். சில நோய் எதிர்ப்பு சக்தியுள்ள நீரிழிவு நோய்க்கான உணவுகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

பாகற்காய்

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதமாகும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்தக் காயானது கசப்புத் தன்மையுடையதால் அனைவரும் இதனை தவிர்க்கின்றனர். சர்க்கரை நோயாளிகள் பாகற்காயை சாறு எடுத்து அருந்துவது நல்லது. அதையும் மீறி இந்த பாகற்காய் பிடிக்கவில்லை எனில் பாகற்காய் சேர்க்கப்பட்ட மருந்துகளை சாப்பிடலாம்.

பட்டை

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் பட்டை குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவும், ஜீரணக்கோளறு, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. எனினும் பட்டை சேர்த்த அனைத்து உணவுகளையும் அதிகமாக உண்பது கூடாது. ஏனெனில் பட்டை பயன்படுத்திய உணவுகளில் மசாலாப் பொருட்கள் அதிகமாக இருக்கும். இதனை அதிகளவில் உண்பதால் ஜீரணக்கோளாறு ஏற்படும்.

வெந்தயம்

வெந்தயம் சாப்பிடுவதால் இன்சுலின் அளவை சரி செய்யலாம். உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் முடியும். வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம், அல்லது பொடி செய்தும் சாப்பிடலாம், இரவில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை நடைப்பயிற்சி செல்வதற்கு முன் ஊறவைத்த வெந்தயத்தை தண்ணீரோடு சேர்த்து குடித்து வரலாம்.

இஞ்சி

இஞ்சியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இஞ்சி சேரப்பதால் இரத்த சர்க்கரை அளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் `உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அளவாக இஞ்சித் தேனீர் அருந்துவது, இஞ்சி சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பது மூலமாக சர்க்கரை அளவை சிறிது கட்டுக்குள் வைக்கலாம்.

சோற்றுக் கற்றாழை

இன்சுலின் சுரக்கும் செல்களைப் பாதுகாக்கவும், சரி செய்யவும் சோற்றுக் கற்றாழை பெரிதும் உதவுகிறது. சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. தோல் நோய்களுக்கு சோற்றுக் கற்றாழை மிகவும் சிறந்ததாகும்.


Spread the love
error: Content is protected !!