வைரம் பாய்ஞ்ச உடம்பு வேணுமா?

Spread the love

கிழங்கு வகையைச் சேர்ந்த மஞ்சளில் ஏராளமான அளவு ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியிருக்கின்றன என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அதில் தொற்றுக்கள் நீங்குவதற்கான பல்வேறு உட்பொருள்கள் இருக்கின்றன. இது நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகின்ற ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அதனால் சமையலில் மட்டும் அல்லாமல், பால், காபி, டீ, சூப், ஸ்மூத்தி, ஷேக்ஸ் என பல்வேறு வகைகளில் அதைப் பயன்படுத்துகின்றனர்.

எது ஆரோக்கியம்

தற்போது மஞ்சளை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்ட காப்சியூல்கள் கடைகளில் கிடைக்கின்றன. மஞ்சள் உடலுக்கு நல்லது என்றாலும் எப்படி எடுத்துக் கொண்டால் அதிக பலன்கள் இருக்கும் என்பது தெரிந்து கொண்டு அதன்படி பயன்படுத்துவது தானே புத்திசாலித்தனம். பாலில் மஞ்சள் போட்டு குடிப்பது அதிக பலன்களைத் தருமா? அல்லது காப்சியூல்கள் வடிவில் சாப்பிடுவது நல்லதா அலல்து உணவில் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லதா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டியது மிக அவசியம்.

என்ன இருக்கிறது அதில்?

மஞ்சளில் கர்குமின் என்னும் உட்பொருள் அடங்கியிருக்கிறது. அதில் தான் அந்த சூப்பர் பவர் இருக்கிறது. இதுவே நீங்கள் மஞ்சளை காப்சியூல்களாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், அதில் குர்குமினின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

எவ்வளவு தேவை?

குர்குமினாய்டுஸ் என்பது மஞ்சளில் இருக்கின்ற மிகச்சிறிய அளவேயாகும். மஞ்சளில் அதிக அளவில் இன்பிளமேட்ரி எதிர்ப்புப் பொருள் இருக்கிறது. அது இந்த குர்குமினுக்குள் தான் அடங்கியிருக்கிறது. இந்த குர்குமின் 500 முதல் 1000 மில்லி கிராம் வரைக்கும் நமக்குத் தேவைப்படுகிறது.

ஒரு ஸ்பூன் மஞ்சளில் கிட்டதட்ட 200 மில்லி கிராம் அளவு குர்குமின் நிறைந்திருக்கிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்கு எடுத்துக் கொண்டீர்களானால் நல்லது. அதற்காக, வெறுமனே மஞ்சளை பொடியாகவோ கிழங்காகவோ அல்லது ஏதாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். வெவ்வேறு வகையிலாக வகைகளில் மஞ்சள் கலந்திருக்கும் பொருள்களை உணவாகவும் மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். உணவில் மசாலாவாக சேர்த்து தினசரி உணவில் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குடிக்கும் காபி மற்றும் ஸ்மூத்திகளில் கூட மஞ்சளை சேர்த்து சாப்பிடலாம்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

என்னதான் ஆரோக்கியமான விஷயமாக இருந்தாலும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது அல்லவா? அதை மனதில் கொள்வது மஞ்சளுக்கு மட்டுமல்ல, எந்த உணவாக இருந்தாலும் அவசியம். ஒரு நாளைக்கு 500 மில்லி கிராம் குர்குமினாய்டுகள் டோஸ் அளவுக்கு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். எதிர் நோய்த் தொற்றுக்கள், நோய் எதிர்ப்புத் தன்மைகள் உடலில் அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எதோடு சேர்த்து சாப்பிடலாம்?

கருமிளகுடன் மஞ்சளைச் சேர்த்து சாப்பிடுவது இன்னும் கூடுதல் பலன்களைக் கொடுக்கும். மஞ்சளுடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிடுவதனால், கூடுதல் ஸ்டாமினாவும் உடலில் கூடுதல் ஆற்றலும் திறனும் கூடியிருக்கும்.

பா. முருகன்


Spread the love