ஆய்வுகளும் கணக்கெடுப்புகளும் புதிய மற்றும் சுவாரசியமான தகவல்களை, வெளிக்கொண்டு வருவது வழக்கம். சில நேரங்களில் ஆய்வு முடிவுகள் நம்மை அதிசயிக்க செய்யும், சில நேரங்களில் புதிதாக வெளியாகின்ற கணக்கெடுப்பு முன்வைக்கின்ற தகவல் நம்மை உலுக்கிப் போடும்:உண்மையை பேசும். அத்தகைய, ஒரு ஆய்வு தான். நிம்மதி வேண்டும் என்பது தான் உலகத்தில் உள்ள அனைவருடைய நோக்கமும், பிரார்த்தனையுமாக இருக்கின்றது. அந்த வகையில், உலகில் நிம்மதியாக வாழ்வதற்கு எந்தெந்த நகரங்கள் சரியாக இருக்கும் என்பதை ஒரு ஆய்வு முடிவின் வழியாக தெரியவந்துள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ட் யுனிட் (Economist Intelligence Unit – EIU) என்கிற, அமைப்பானது, ஒரு கருத்துக் கணிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த கருத்து கணிப்புக்காக 140 நகரங்கள் பட்டியலிடப்பட்டு, கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. கருத்துக் கணிப்பில் நகரங்களின் அமைப்பு, கலாச்சாரம், மற்றும் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல், கட்டமைப்பு ஆகியவை குறித்து கருத்து கேட்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த நாடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் கருத்துகள், மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவின்படி, உலகில் வாழத்தகுந்த பத்து நகரங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. மெல்போன் (Melbourne)
2. ஆஸ்திரியா தலைநகர் வியன்னா (Austrian capital, Vienna)3. கனடாவின் வான்கூவர் (Canada’s Vancouver)
4. டொரண்டோ (Toronto)
5. கால்கரி (Calgary)
6. அடெலெய்டு (Adelaide)
7. பெர்த் (Perth)
8. ஆக்லாந்து (Auckland)
9. ஹெல்சின்கி (Helsinki)
10. ஹம்பர்க் (Hamburg)
உலகத்தில் பொதுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தகுதியற்ற 10 நகரங்கள் கீழ்கண்டவாறு:
1. கிவ் (Kiev)
2. டவாலா (Douala)
3. ஹராரே (Harare)
4. கராச்சி (Karachi)
5. அல்ஜிர்ஸ் (Algiers)
6. போர்ட் மோர்ஸ்பி (Port Moresby)
7. டாக்கா (Dhaka)
8. ட்ரிபோலி (Tripoli)
9. லாகோஸ் (Lagos)
10. டாமாஸ்கஸ் (Damascus)
இந்த கணக்கெடுப்பின்படி, கடந்த 5 ஆண்டுகளுக்குள், உலகளவில் சராசரியான, வாழ்வாதார மதிப்பு சுமார் 0.8 சதவீதம் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.