தேர்வுக் காலங்களில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு குழந்தைகளுக்குத் தேவைப்படும். அந்த சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் மன உளைச்சலுக்கு எளிதில் தீர்வு காண வேண்டியது அவசியம்.
ஆகவே, குழந்தைகளுக்கு தேவையான சரியான உணவுகளை சரியான அளவில், சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து அளிப்பதன்மூலம், அவர்களுக்கு தேர்வுக் காலங்களில் ஏற்படும் பலவகையான மன உளைச்சலைத் தடுக்கலாம். ஆண்டு முழுவதும் தாங்கள் கற்ற கல்வியை, தேர்வில் சிறப்பான பதில்களை அளித்து நல்ல மதிப்பெண்களை எளிதாகப் பெற முடியும்.
தேர்வுக்கான மன இறுக்கத்தை சரியான உணவு வகைகளின் மூலம் வெல்ல முடியும் என்பது இன்றைய உணவியல் வளர்ச்சியின் சாதனையாகும். இப்படி நல்ல உணவு வகைகளின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் மன இறுக்கத்தை வெல்லும் மருத்துவ முறையை Eat up stress என்கிறார்கள்.
ஆயுர்வேதம்.காம்