உடல் வியாதிகளும் மனோவியாதிகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. இந்த இரண்டின் அறிகுறிகளை தோற்றுவிப்பது உண்மையில் மூளை தான். ஆனால் ஆயுர்வேதத்தை பொருத்த வரை “மனஸ்” (மனது தான்) மனித சிந்தனைகளின் பிறப்பிடம். மனிதன் இறந்தால் மூளையும் இறந்து விடும். மனம் இறப்பதில்லை. வேறு சரீரத்திற்கு மாறி விடுகிறது.
நவீன மருத்துவத்தை பொருத்த வரை “எண் சாண் உடலுக்கு மூளையே பிரதானம்”. மனதுக்கும் மூளைக்கும் வித்யாசமில்லை. மனது, அதாவது எண்ணங்கள் தோன்றுவதெல்லாம் மூளையின் செயல்பாடு தான். உடலுக்கு வலி ஏற்பட்டாலும் மனதுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் மூளை தான். “சிக்னலை” அனுப்புகிறது – இந்த சிக்னல்களை கவனிக்க வேண்டும்.
மனச்சோர்வு, உற்சாகமின்மை (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) – உடலுக்கு ஜலதோஷம் போல் மனதுக்கு டிப்ரெஷன் சகஜம். மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கு செய்தி அனுப்புவது “நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் (ழிமீuக்ஷீஷீ tக்ஷீணீஸீsனீவீttமீக்ஷீ). இவற்றில் ‘செரோட்டினின் (ஷிமீக்ஷீஷீtஷீஸீவீஸீ) உற்சாக, பாஸிடிவ் சிந்தனைகள் உணர்ச்சி மண்டலம் மகிழ்ச்சி முதலியவற்றை வழி நடத்தும் நியூரோ டிரான்ஸ்மிட்டர். இதன் செயல்பாடு குறைந்தால் எதிர்மறை எண்ணங்கள், சோகம், விரக்தி, தற்கொலை எண்ணங்கள் முதலியன ஏற்படும். இவை தான் டிப்ரெஷனின் அறிகுறிகள். மனச்சோர்வால் தாக்கப்பட்டவர் தன்னம்பிக்கை இழந்து “நான் எதற்கும் உதவாதவன்” என்று உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொள்வார்கள்.
டிப்ரெஷனால் உடலில் ஏற்படும் அறிகுறிகள் – எப்போதும் களைப்பு, தூக்கமின்மை, பசியின்மை, உடலுறவில் நாட்டமின்மை முதலியன. இந்த அறிகுறிகள் 2 வாரங்களுக்கு மேல் நீடித்தால் உங்கள் வைத்தியரை அணுகவும். மனச்சோர்வை சிகிச்சையால் நீக்கலாம். ஆயுர்வேதத்திலும் சிறந்த சிகிச்சை முறைகளும் மருந்துகளும் இருக்கின்றன.
மன பரபரப்பு, பேராவல், மனப்பதட்டம் (கிஸீஜ்வீமீtஹ் – ழிமீuக்ஷீஷீsவீs) – இனந்தெரியாத பயம், எதற்கெடுத்தாலும் கவலைப்படுவது, பயப்படுவது – இவைகள் கிஸீஜ்வீமீtஹ் கோளாறுகள். மனக்குழப்பம், சஞ்ஜலம், கலக்கம் முதலியவற்றுக்கு ஆளாவார்கள்.
அறிகுறிகள்
நரம்புத்தளர்ச்சி, கைகால் நடுக்கம், வாய் உலர்தல், அதிக வியர்வை ஏற்படுதல், வாந்தி, மயக்கம், படபடப்பு, வயிற்றுக்கோளாறுகள் முதலியன. சர்ம வியாதிகள், பாலியல் கோளாறுகளும் ஏற்படலாம். மன பரபரப்பையும் சிகிச்சைகளால் குணப்படுத்தலாம்.
உடலில் ஏற்படும் அறிகுறிகள் – அதிகம் வியர்ப்பது, இங்கும் அங்கும் நடந்து கொண்டேயிருப்பது, எடை குறைவு, ஆயாசம் முதலியன.
மேற்சொன்ன மனோவியாதிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.
ஆயுர்வேத சிகிச்சைகள்
ஆயுர்வேதம் மனதிற்கும் உடலுக்கும், குறிப்பாக இதயத்துக்கும், உள்ள நெருங்கிய உறவை வலியுறுத்தி சொல்கிறது. மன பாதிப்புகள் உடல் நலத்தையும், இதயத்தையும் பாதிக்கும். மனம் உடலில் எங்கு இருக்கிறது என்பது ஆயுர்வேதத்தில் முரண்பாடாக சொல்லியிருந்தாலும், ஆரோக்கிய மனநிலை உடல் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் என்கிறது ஆயுர்வேதம். மனம் நொடிக்கு நொடி இங்கும் அங்கும் கட்டுங்கடங்காமல் தாவும் குணமுடையது. மன வேகங்களை அடக்கப் பழக வேண்டும். இதற்காக ஆயுர்வேதம் சொல்லும் பிரத்யேக சிகிச்சை சத்வாவாஜய சிகிச்சை. இதற்கு முன் தைவ்விய பஸ்ரய சிகிச்சை அதாவது மந்திர உச்சாடனம், மூலிகைகள், நவரத்தின சிகிச்சை, புண்ணிய ஸ்தல யாத்திரை இவை பரிந்துரைக்கப்படும். பிறகு யுக்தி வியாபஸ்ரய சிகிச்சை இதில் பத்திய உணவு, மருந்துகளை பயன்படுத்தப்படும். முதலில் சொன்ன சத்வாஜய சிகிச்சையில் அலை பாயும் மனது கட்டுப்படுத்தப்படும். பிராணாயம், யோக சிகிச்சைகள் இதில் அடங்கும். மனது கட்டுப்படுத்தப்படும். மூச்சு விடும் முறைகளின் செயல்பாடுகள் உதவும். மனம் அமைதியிழக்கும் போது, முடிந்தவரை ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும் பிறகு மூச்சை வெளிவிடவும். இதை ஐந்து தடவை செய்யவும். பழகியவுடன் 20 தடவை செய்யவும். அறிவையும் ஞானத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னைப்பற்றி, தன் உடலைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். சரியான ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் மனம் ‘வெளுக்க’ வழி கிடைக்கும்.
ஆயுர்வேத மூலிகைகள்
பிரம்மி (ஙிணீநீஷீஜீணீ னீஷீஸீஸீவீமீக்ஷீவீ)
வல்லாரை (சிமீஸீtமீறீறீணீ கிsவீணீtவீநீணீ)
சங்கு புஷ்பம் (சிஷீஸீஸ்ஷீறீஸ்uறீus ஜீறீuக்ஷீவீநீணீறீவீs)
அமுக்கிரா கிழங்கு (கீவீtலீணீஸீவீணீ sஷீனீஸீவீயீமீக்ஷீணீ – அஸ்வகந்தா)
சர்ப்பகந்தா (ஸிணீuஷ்ஷீறீயீவீணீ sமீக்ஷீஜீமீஸீtவீஸீணீ)
ஜடமான்சி (ழிணீக்ஷீபீஷீstணீநீலீஹ்s யிணீtணீனீணீஸீsவீ)
வசம்பு (கிநீஷீக்ஷீus நீணீறீணீனீus)
தவிர வாஜீ கர்ணத்திற்கு பயன்படும் மூலிகைகளும், (பூனைக்காலி)
உன்மத்தத்திற்கு உபயோகப்படுகின்றன. மன பரபரப்புக்கு , பொதுவாக, கொட்டைக்கரந்தை (ஷிஜீலீணீமீக்ஷீணீஸீtலீமீs வீஸீபீவீநீus), சதவாரி தகரா (க்ஷிணீறீமீக்ஷீவீணீஸீணீ கீணீறீறீவீநீலீவீ), குடூச்சி (ஜிவீஸீஷீsஜீஷீக்ஷீணீ நீஷீக்ஷீபீவீயீஷீறீவீணீ) மூலிகைகள் கொடுக்கப்படுகின்றன.
மன ஓய்வுக்கு
காஃபி, டீ, சாக்லேட், குளிர்பானங்கள் (கோலா போன்றவை) இவற்றை தவிர்க்கவும்.
கால் கப் இஞ்சி, கால் கப் பேகிங் சோடாவை, பாதி – டப்பின் நீரில் போட்டு 10-15 நிமிடம் அமிழ்ந்திருக்கவும்.
உடல் (தலை உட்பட) முழுவதும் நல்லெண்ணை தடவி குளிக்கவும். எண்ணை சிறிது சூடாக இருக்க வேண்டும்.
சிறிது குங்குமப் பூ, ஜாதிக்காய் விழுது சேர்த்த பாதாம் பால் குடித்தால் மனபரபரப்பு குறையும்.
ஆரஞ்சு ஜுஸ் + தேன் (ஒரு ஸ்பூன்) + ஜாதிக்காய் பொடி (ஒரு சிட்டிகை) கலந்து குடிக்கலாம்.
யோகா
மன நோயாளிகள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். சூர்ய நமஸ்காரம், பின்னால் வளைந்து செய்யும் புஜங்காசனம் போன்றவைகளை செய்ய வேண்டும். தவறாமல் பிரணாயாமம் செய்வது அவசியம். தகுந்த யோகா குருவிடம் பயின்று, ஆசனங்களை மேற்கொள்ளவும்.