கர்ப்ப காலத்தில் உயர் மன அழுத்தமா?

Spread the love

பேறுகால உயர் மன அழுத்தம்

பி.ஐ.ஹெச். என்று அழைக்கப்படும் உயர் மன அழுத்தத்துடன் கூடிய கர்ப்பம் தரித்தல் என்பது பொதுவாக சிக்கலைத் தரக் கூடியது. அமெரிக்காவில் மேற்கூறிய பிரச்சனையால் 7 முதல் 10 சதவீதம் வரை கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். நமது நாட்டிலும் இந்த நிலை, சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது. பி.ஐ.ஹெச் அல்லது ஹெஸ்டசினல் ஹைபர் டென்சன் என்பது கர்ப்ப காலத்தில், பொதுவாக 20 வாரங்கள் கழித்த பின்பு இரத்த அழுத்தமானது 140/90 மட்டத்திலோ அல்லது அதை விட கூடுதலாகவோ காணப்படுவதே ஆகும்.

பி.ஐ.ஹெச் ஆனது கரு உள்ள பொழுது கருப்பையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கெட்டியான, வட்டமான தசையாலாகிய நஞ்சுப் பையினை குறிப்பிடத் தக்களவு பாதிப்படையச் செய்கிறது. நஞ்சுப் பையின் அளவையும் எடையையும் குறைப்பதன் மூலம், இந்த மாற்றம் இரத்த ஓட்டத்தில் மாறுதலுக்கு காரணமாகிறது. இதன் மூலம் கருவின் வளர்ச்சியையும் மற்றும் குழந்தையின் பிறப்பு எடையையும் பாதிப்படையச் செய்கிறது.

மேற்படி பாதிப்பிற்கு வயது, குடுப்ப பின்னணி வரலாறு மற்றும் இரட்டிப்பு கர்ப்பங்கள் காரணமாக இருப்பது ஒரு வகை. உடல் பருமன், ஆரோக்கியமற்ற வாழ்க்கைச் சூழலைத் தேர்ந்தெடுத்தல் அதாவது புகை பிடித்தல், மது அருந்துதல், குறைவான அளவு உட்கொள்ளுதல் போன்ற காரணங்கள் ஒரு வகையாகும்.

பேறு கால உயர் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் நீண்ட கால மன அழுத்த நோய் ஏற்படும் வாய்ப்பை தவிர்க்க வேண்டுமெனில் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கைச் சூழலை நாம் தேர்ந்தெடுத்து கடைபிடித்தால் மட்டுமே இயலும் என்பதை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

வாழ்க்கை சூழல் மாற்றம்

புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளை கரப்பம் தரிப்பதற்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே தவிர்த்து விட வேண்டும். அது மட்டுமின்றி வாரத்தில் குறைந்த பட்சம் 150 நிமிடங்காளாவது நடை பயிற்சி எடுக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உடல் சார்ந்த வேலைகளைச் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையை, கர்ப்பம் அடையும் முன்னரே பராமரித்துக் கொள்ள இயலும். பி.எம்.ஐ இண்டெக்ஸ் என்ற உடல் பருமன் அளவுக் குறியீடு 18.5 முதல் 25 என்ற அளவிற்குள் அமையுமாறு பராமரித்துக் கொள்ள இயலுகிறது.

ஊட்டச் சத்து மாற்றம்

சரிவிகித ஊட்டச் சத்துணவு கர்ப்பிணிப் பெண் உட்கொள்வதன் மூலம், பேறு காலம் முழுவதும் தேவைக்கேற்ப உள்ள உடல் எடையை பராமரித்துக் கொள்ள இயலும். இந்த நுண்ணிய ஊட்டச் சத்துக்கள் நஞ்சுப் பையில் நிகழும் செயல்பாடுகளில் ஆக்ஸிகரண அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த காரணிகளின் அதிகரிப்பை தீர்மானிக்கிறது. குறிப்பிட்ட உணவுகள் அல்லது சத்துக்கள் பி.ஐ.ஹெச் என்ற பேறுகால உயர் மன அழுத்தத்தைத் தடுக்கிறது அல்லது குணப்படுத்த உதவுகிறது.

கால்சியம்

கால்சியம் சத்துள்ள உணவுகளை கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்வதால் பேறுகால உயர் மன அழுதத்தை குணப்படுத்திக் கொள்ளலாம் என்று பல மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சி, தசை இயக்கம், நரம்பு மண்டல இயக்கங்களுக்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது.

கால்சியம் அதிகம் காணப்படும் உணவுகள்

பால், பன்னீர், வெள்ளை மாமிசம் (கோழி இறைச்சி), முட்டை, பச்சைக் காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள்

மெக்னீசியம்

மெக்னீசியம் சல்பேட் அல்லது மெக்னீசியம் குளிகோனேட் என்னும் மெக்னீசியம் சத்து அடங்கிய உணவு பேறுகால உயர் மன அழுத்த நோயில் அதிக பாதிப்புக்கு ஆளாகும் நிலையினை தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உதவுகிறது.

முழுத் தானியங்கள், அவகேடோ, பருப்பு வகைகள், பசுமையான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் மெக்னீசியச் சத்து உள்ளன.

வைட்டமின் டி உயிர்ச் சத்து

வைட்டமின் சி சத்து குறைந்த அளவு காணப்படும் பொழுது பேறு காலத்தில் எதிர் விளைவைத் தருகிறது. இதை வைட்டமின் டி சத்துகளை கூடுதல் உணவாக சப்ளிமெண்டரியாக சேர்த்து சரி செய்து கொள்ளலாம். வைட்டமின் டி சத்து மாவுப் பொருட்கள், பால், முட்டை கொழுப்புள்ள மீன்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளது. காலசியத்தின் கூடுதல் சேர்க்கையானது, கர்ப்ப காலத்தில் 400 ஐ.யு. வைட்டமின் டி சத்து இருக்க வேண்டும்.

பா. முருகன்


Spread the love
error: Content is protected !!