மன அழுத்தம் குறைய முகர்ந்து பாருங்க…

Spread the love

மன இறுக்கம் அல்லது மன அழுத்தம் (Stress) நம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்குமென்பது யாவரும் அறிந்ததே. இது நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தியை குறைத்து விடுகிறது. வியாதிகளை வாவென்று அழைக்கும் அளவிற்கு நம்மைப் பாதிக்கும். நம் மனதும் உடைந்து பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும். எனவே இதைத் தடுக்க நாம் முயல வேண்டும்.

நறுமணத்தை முகர்தல் சம்பந்தமான பயிற்சியை அளிக்கும் ஒரு நிபுணர் கூறுவது. ஒருவரின் சிந்தனை ஓட்டமானது அவரின் மனதை அழுத்தினால், மணத்தை நுகர வேண்டும். எவ்வளவுதான் முடியாதென்ற சூழ்நிலை இருந்தாலும், இப் பயிற்சி நம் மன ஓட்டத்தை, சிந்தனையை மாற்றி ஈடுபட்டுள்ள வேலையின் மீது முழுக் கவனத்தைச் செலுத்த உதவும். திறமையுடன் செயல்புரிய முடியும்.

அரோமாதெரபியெனப்படும் நறுமண முகர்தல், மூச்சில் இழுக்கும் பயிற்சி மிகவும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நல்லது. தாவர எண்ணைகள், மற்ற உணவுக்கான எண்ணைகள் முகர்ந்து சுவாசித்தால் நலன் பயக்கும். ஆனால், இவைகளை சரியானபடி உபயோகப்படுத்த வேண்டும். எவ்வாறு இப் பயிற்சியை மேற்கொள்வது? கண்களை நன்கு மூடிக்கொண்டு ஒரு மலை உச்சியிலுள்ள பாறாங்கல்லில் உட்கார்ந்து கொண்டு கீழே ஓடிக் கொண்டிருக்கும் நீரோடையைப் பார்ப்பதாக கற்பனை செய்து கொள்ளவும். இப்பொழுது எண்ணையை முகர்ந்து நன்கு சுவாசித்து உள்ளிழுக்கவும். சலசலவென்று ஓடிக்கொண்டிருக்கும் நீரோடையின் சப்தத்தை கேட்பதாக நினைத்துக் கொள்ளவும். நல்ல பலன் கிட்டும்.

நல்ல தாவர எண்ணையை ஒரு பருத்தி உருண்டையில் நனைத்து ஆபீஸ் அறையில், வீட்டின் அறைகளில் வைக்கவும். உங்களைச் சுற்றி நறுமணம் கமழட்டும். அதன் பலன் வியக்கத்தக்கதாக இருக்கும்.

எந்த எண்ணைகள் நம் உடல் நலத்தை மேம்படுத்தும்?

கிளாரி சேஜ் (Clary Sage) ஆரஞ்சு,  பெர்கமாட் (Bergamot) லவாண்டர் லெமன்கிராஸ் (Lemon Grass) எலங்எலங் (Ylang Ylang) கிளாசி சேஜ் நம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும்.

லாவண்டர் பல விதங்களில் சிறந்தது. அதன் இனிமையான நறுமணம் மன அமைதியைத் தந்து, நம் சிந்தனை சக்தியையும் தெளிவாக்கி, மேம்படுத்தும்.

பெர்காமாட் நமது மனநிலையை சீராக்கி, குஷிப்படுத்தி (Cushy) வைக்க வல்லது.லெமன் கிராஸ் நமது உடலில் ஆற்றலை, சக்தியை வளப்படுத்தி நம்மை நன்கு செயலாற்ற தூண்டும்.

ஆரஞ்சின் மணம் நமது உணர்ச்சிகளை தட்டியெழுப்பி மனதிற்கு ஒரு அமைதியையும், சந்தோஷத்தையையும் தரும். எங்கெங்கு  நமது கோபத்தை, பதட்டத்தை, நரம்பெரிச்சலை அகற்றும். மனதிலுள்ள வேண்டாத கவலை, குப்பைகளை அகற்றி, மன அழுத்தத்தை நீக்கி நம்மை சாந்தப்படுத்தும்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love
error: Content is protected !!