நரம்பு பலவீனத்தை வீட்டு வைத்தியத்தில் எப்படி சரிசெய்யலாம்?

Spread the love

நரம்பு பிரட்சனைகளை பொறுத்தவரைக்கும், மருத்துவத்தில் நியுரோபதி எனசொல்வார்கள். இந்த கோளாறு வெவ்வேராக பிரிக்கப்படுகின்றது. இது உடலில் சில பகுதிகளைதாக்குவதன் மூலமாக அடையாளம் காணமுடிகின்றது. இது சில நபருக்கு தற்காலிகமாகவும், சிலநபருக்கு நிரந்தரமாகவும், உடலில் பிரட்சனையாகவும் மாற வாய்ப்பு உள்ளது. அதனால் நரம்பு பலவீனமாகும் போது உடல் சோர்வால் மூழ்கப்பட்டு கழுத்தில் இருந்து கை, கால்வரை வலி ஏற்படும். இதற்கு சில வீட்டு வைத்தியம் உள்ளது வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.

முதலில் ஆயுர்வேதிக் எண்ணெய் மசாஜ், இதற்கு தேவையானது பாதாம் எண்ணெய்அல்லது எள் எண்ணெய். இவை இரண்டில் ஏதாவது ஒரு எண்ணெய் போதுமான அளவு எடுத்து சூடுசெய்து, லேசான சூட்டில் பாதிக்கப்பட்ட இடமோ அல்லது உடல் முழுவதும் மசாஜ்செய்யவும். பின் ஒரு அரைமணி நேரம் கழித்து குளித்து வர மனதிற்கும், உடலிற்கும் புத்துணர்ச்சிகிடைப்பதோடு நரம்பு மண்டலமும் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றது.


அடுத்த குறிப்பு எப்சம் உப்பு, குளிப்பதற்கு முன்னால் ஒரு கப் எப்சம்உப்பை குளிக்கும் தண்ணீரில் போட்டு, ஒரு 2௦ நிமிடத்திற்கு ஊறவிடுங்கள். எப்சம்உப்பு அனைத்து கடைகளிலும் கிடைக்கும். இல்லையென்றால் இணையதளங்களில் வாங்கலாம். தற்போதுஇந்த தண்ணீரில் குளித்தால், உடல் வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். அதோடு எப்சம்உப்பு அழற்சியை கட்டுபடுத்தும். இதில் நிறைந்திருக்கும் மெக்னீஷியம்,நரம்புகளுக்கு பலனளிக்கும். இந்த குளியலை வாரத்திற்கு மூன்று முறை எடுத்து வர நல்லபலன் கிடைக்கும்.

அடுத்து அஸ்வகந்தா Supplements தினமும் எடுத்து வந்தால் நிச்சயம் நல்லபலன் கிடைக்கும். ஆனால் முழுபலன் கிடைக்க ஒரு நாளைக்கு மூன்று முறை, குறைந்தது ஒருமாதம் வரைக்கும் சாப்பிட்டு வரவேண்டும். இது மன அழுத்தத்தை போக்கி, நரம்பு மண்டலத்தைவலுவூட்டி சோர்வில்லாத உடல் நிலையை வழங்கும்.

https://www.youtube.com/embed/gkzPcNV5IZU


Spread the love