Stomach Burning Sensation , அதாவது வயிற்றில் அனலாக எரியும் ஒரு உணர்வு… இது மிகவும் சாதாரணமான விஷயம் என நினைத்து பெரும்பாலானோர் விட்டுவிடுகிறார்கள். ஆனால் இதன் விளைவுகள் மிகவும் மோசமானது.. இதற்கு உடனடியாக செய்ய கூடியது, காரமான கொழுப்பு உணவுகளை முதலில் தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனை வருவதற்கான காரணம்?
உடல் உஷ்ணம், உடல் பருமன், அதிகப்படியான கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது, டீ காபியில் இருக்க கூடிய காபின், ஆல்கஹால், புகை பிடித்தல், சாப்பிட்ட உடனே தூங்குவது, மன அழுத்தம், மற்றும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கும் ஏற்படுவது, மற்றும் வயிற்றில் சுரக்கக்கூடிய அதிகப்படியான அமிலம்… இந்த பழக்கங்களை நிறுத்துவதோடு, சில உணவுகளை தினமும் கடைப்பிடித்து வந்தால் இந்த பிரச்சனையை தீர்க்கலாம்…காலை எழுந்ததும், ஒரு தம்ளர் சுடு தண்ணீரில், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்..
இதனால், இரவில் சாப்பிட்ட உணவால் ஏற்பட்டிருக்கக்கூடிய அமிலம் சுத்திகரிக்கப்படுகிறது… சுடுநீரில் எலுமிச்சை சாறு குடிப்பதனால், வயிற்றில் சீராக அமிலத்தை நிலைநிறுத்தக்கூடியதான சூழல் உருவாகும்.. வயிற்று எரிச்சலும், சூடும் தணியும்..காலை மற்றும் இரவு இரு வேளையிலும் சாப்பிட்ட பின், குளிர்ந்த பால் குடித்து வருவது நல்லது.. பால், இரைப்பையில் இருக்கும் அமிலங்களை உறுதிபடுத்தி, அசிடிட்டி வராமல் தடுக்கும்.. வயிற்று கோளாறு ஏற்படாமல் இருக்க அமில சுத்திகரிப்பு மிகவும் அவசியம்… அதற்கு உலர் திராட்சை சிறந்த பலனாக இருக்கும்…
எப்போதெல்லாம் வயிற்று எரிச்சல் மற்றும் அசிடிட்டியா உணருகிரீர்களோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உலர் திராட்சையை வாயில் போட்டு மென்றுவந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்…வயிற்று எரிச்சலுக்கு காஃபின் ஒரு உதாரணமாக இருக்கின்றது. அதனால் அடிக்கடி டீ காப்பியை தவிர்த்து தினமும் காலை, மாலை கிறீன் டீ எடுப்பது மிகவும் நல்லது. மூலிகை டீ யில் இருக்கக்கூடிய ஆன்டி-இன்ப்லம்மேட்டிரி, அலர்ஜியை கட்டுப்படுத்தி, வயிற்றில் அனல் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும்..தினமும் 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், நமக்கு தேவையான ப்ரோட்டீன் கிடைப்பதோடு, அமிலத்தால் ஏற்பட கூடிய நெஞ்செரிச்சலுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்..
அதேபோல் தண்ணீரில் இஞ்சியை நறுக்கி போட்டு சூடு செய்து அதில் சிறிது தேன் கலந்து டீ குடித்தால் acid reflux க்கும், வயிற்று பிரச்சனைக்கும் மிகவும் நல்லது… இந்த டீயை தினமும் இரு முறை குடித்து வரலாம்…வயிற்று எரிச்சலை குணப்படுத்தவும் அவை வராமல் தடுக்கவும், நிச்சயமாக கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிகப்படியான காரம், காற்று நிரப்பி விற்க கூடிய சிப்ஸ், தேவைக்கு அதிகமான வெங்காயம், பூண்டு, சிட்ரஸ் நிறைந்த பழங்கள், ஆல்கஹால், சிகரெட், இவை அனைத்தும் burning sensation க்கு வழி வகுக்கக்கூடியதாக இருக்கிறது..
அதிகப்படியான மருந்துகள் எடுக்கக்கூடாது.. இயற்கை வைத்தியம் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்… தினமும் சிட்ரஸ் இல்லாத பழ ஜூஸ் குடித்து வருவது உடல் உஷ்ணத்திற்கு நல்லது.