ஸ்டீராய்ட் என்பன ஆங்கில அலோபதி மருத்துவத்தில் உயிர் காக்கும் மருந்துகளாகும். ஸ்டீராய்ட் வகையில் முதன்மையான மருந்து பிரட்னிசலோன் ‘ Prednisolone’c ஆகும். இது உலகம் முழுதும் சுமார் 23 பெயர்களில் கிடைக்கின்றன. இந்தியாவில் இவை Wysolone, Prado, Predone, Unidrol, Kidpred, Emsolone, Delta Cortril என்ற பெயர்களில் கிடைக்கின்றது. இவை உடல் உற்பத்தி செய்யும் ஒரு வகை வீக்கத்தை (Inflammation) உண்டாக்கும் பொருளைக் கட்டுப்படுத்துக் கூடிய திறன் வாய்ந்தவை.
இவ்வகை ஸ்டீராய்ட்கள் குறிப்பாக சரும உபாதைகள், சரும ஒவ்வாமைகள், குடல் பிரச்சனைகள், மூட்டுவலி, சொரியாஸிஸ், சுவாச இறுக்கும் சுவாச மண்டலக் கோளாறுகள் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை தவிர தாங்க முடியாத உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள பல பிரச்சனைகளுக்கும் இவை உபயோகப்படுகின்றன.
இத்தகைய ஸ்டீராய்ட்கள் அளவற்ற சக்தி கொண்டவை அதே சமயத்தில் அளவிட முடியாத அளவு தீமையும் கொண்டவை. எனவே எவர் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் இவற்றை உபயோகிக்க முடியாது.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதனை உபயோகிப்பது பல உடல் நலக் கேடுகளை உண்டாக்கும். ஏழு நாட்களுக்கு மேல் தொடர்ந்து உட்கொண்டால் அது கருவை சரி வர வளர்ச்சியில்லாமல் குறைகளோடு பிறக்கும். இது தவிர இத்தகைய ஸ்டீராய்ட்களை கல்லீரல், கிட்னி பிரச்சனைகள், தைராய்ட் பிரச்சனை, மலேரியா, ஜிஙி, – க்ளக்கோமா, காட்ராக்ட், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உயர் சர்க்கரை அளவு, மன அழுத்தம், இதய நோய், இதயத் தாக்கு போன்றவை உடையவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
இவ்வகை ஸ்டீராய்ட்களை சரியான அளவில் மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் சிறிதளவு அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக் கொள்ளக் கூடாது. திடீர் னெ நிறுத்தக் கூடாது. அதுவும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
ஸ்டீராய்ட்களை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே தக்க விளைவுகளைத் தரும். அவற்றை தவறாகப் பயன்படுத்தினால் நிலைமையை மோசமாக்கி முன்பிருந்த பிரச்சனையை விட பல மடங்கு அதிகப்படுத்தி விடும். ஸ்டீராய்ட் கலந்த மருந்துகளை பொதுவாக தவிர்ப்பது உத்தமம்.
ஸ்டீராய்ட் – தீமைகள்
ஜுரணக் கோளாறு
அடிவயிற்றில் சங்கடம்
அல்சர்
எலும்புகள் வலுவிழத்தல்
எலும்புகள் உடைதல்
இரத்த சர்க்கரை அதிகமாகும்
அதிக பசி
உடல் எடை அதிகரித்தல்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
புண்கள் ஆறாது
மாதவிடாய் தடைபடுதல்
மாதவிடாய் சுழற்சி சீர்கேடு
முகம் வீங்குதல்
அடிவயிற்றில் நீல நிற கோடுகள்
தோல் மெலிதாவது
தூக்கமின்மை
மன அழுத்தம்
மன மாற்றம்
கோபம்
சிந்திக்க இயலாமை
சோகம் வருத்தம்
மூளை அழற்சி
கண்களில் அழுத்தம்
இத்தகைய எண்ணற்ற தீங்குகளை உண்டாக்கக் கூடியது ஸ்டீராய்ட் எனவே அலோபதி மருத்துவரின் ஆலோசனையில் மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும்.