கருத்தடை மாத்திரைகளில் ஹார்மோன் மருத்துகள் இருக்கின்றன. இவை கர்ப்பம் ஆவதைத் தடுப்பதால், தினசரி ஒரு மாத்திரை என்று இரவு வேளைகளில் தொடர்ந்து 21 நாட்கள் உட்கொள்வது அவசியமாகிறது. மாதவிலக்கு ஆன முதல் நாளில் இருந்து இம்மாத்திரைகளை உட்கொண்டால், மாதவிலக்குச் சுற்றின் கடைசி ஏழு நாட்களுக்கு மாத்திரை அவசியமில்லை. அந்த எழு நாட்கள் கழித்து விட்டு மீண்டும் அடுத்த 21 நாட்கள் சாப்பிட வேண்டும்.
இந்த ஏழு நாட்களுக்கும் தற்போது மருந்தற்ற இனிப்பு மாத்திரைகளை தொடர்ந்து 28 நாட்கள் உட்கொள்ள மாத்திரைகள் விற்பனைப்படுத்தப்படுகிறது.
கருச்சிதைவு ஆன நாளில் இருந்து கருத்தடை மாத்திரகளை உட்கொள்ள வேண்டும். பிரசவம் நிகழ்ந்த பின் தாய்ப்பால் வழங்காத பெண் மூன்று வாரங்கள் கழித்தும், தாய்ப்பால் தரும் பெண் 6 மாதங்கள் கழித்தும் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்கள் மூன்று மாதங்கள் கழித்துப் பின்னர் ஆறு மாதங்கள் கழித்தும், அதற்குப் பின்னர் வருடம் ஒரு முறையும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருத்த்டை மாத்திரைகளை பயன்படுத்தினால் அவர்கள் அடிக்கடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பரிசோதனைகளில் அவர்களது மார்பகங்கள், உடல் எடை, இரத்த அழுத்தம் அளவு போன்றவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.
கருத்தடை மாத்திரைகளினால் ஏற்படும் ஆரோக்கியக் கெடுதல்கள்
வாந்தி உணர்வு, வாந்தி, தலைவலி, கால்வலி, எடை அதிகரித்தல் ,மார்பக வலி, முகப்பரு போன்றவை ஏற்படும். கருத்தடை மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு உதிரப்போக்கு திடீரென ஏற்படலாம். லேசான இரத்தபோக்கு ஒரு நேரம் அதிகமான இரத்தப் போக்காக நிகழும். உடல் சக்தி குறைந்து காணப்படும். தெம்பு குறைந்து பலகீனமாக இருப்பார்கள். வெள்ளைபடுதலும் வாய்ப்புகள் உண்டு.
தொடர்ச்சியாக கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம். இதனால் மிகை இரத்த அழுத்தம் ஏற்படலாம். காமாலை நோய் ஏற்படலாம். இரத்தக் குழாய்களில் இரத்தம் செல்வதில் ஒரு இறுக்கம் ஏற்படலாம்.
கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்துவதற்குரிய காரணங்கள் என்ன?
கடுமையான ஒற்றைத் தலைவலி, பார்வை அல்லது பேச்சுக் குறைபாடுகள், திடீரென தோன்றும் மார்பு வலி, காரணம் கண்டுபிடிக்க இயலாத மயக்கம் ஏற்படுவது அல்லது தலைசுற்றல், கிறுகிறுப்பு அடைதல், கால்களில் கடுமையான வலி, கால் தசைப் பிடிப்பு, உடல் எடை அளவுக்கு மீறிக் கூடுவது, கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்தி விடுவது அவசியம்.
கர்ப்பம் அடைய வேண்டும் என்று ஒரு பெண் விரும்பும் பொழுதும், அறுவைச் சிகிச்சை செய்யப் போகும் ஆறு வாரங்களுக்கு முன்னரும் கருத்த்டை மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்தி விட வேண்டும். கடுமையான உயர் இரத்த அழுத்தம், இரத்தக் குழாய் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருத்தடை கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது.
இதய வால்வு நோய், இதய இரத்த ஓட்ட நோய், மார்பு வலிச் சிக்கல் உள்ளவர்களும், சர்க்கரை நோயுடன் இரத்தக் குழாய் பிரச்சனைகள் உள்ளவர்களும் கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. ஒற்றைத் தலைவலி பாதிப்பு, கல்லீரல் நோய் பாதிப்பு இருப்பவர்கள், மார்பகப் புற்று நோயாளிகள், தாய்ப் பால் ஊட்டுபவர்கள்ம் மேஜர் ஆபரேஷன் அல்லது நீண்ட நாள்கள் படுக்கை நோயாளியாக இருப்பவர்கள், பிறப்புறுப்பில் இரத்தப் போக்கு வெளியேறுதலில் நிர்ணயம் செய்ய இயலாத பெண்களும் கர்ப்பத் தடை மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.