நிற்பதும்உடற்பயிற்சியே!

Spread the love

நமக்கு ஏதாவது ஒரு சிறிய நோய் வந்தாலே, நமக்கு தெரிந்த அனைவருமே உடற்பயிற்சி செய்யுங்கள் என்று கூறுவார்கள். நம்மில் பலருக்கு எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாது. இன்னும் சிலர் கடினமாக இருக்கும் என்று மனதில் நினைத்து கொள்கிறார்கள்.

உடற்பயிற்சி என்றாலே, உடல் இயக்கம் இருக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரியும். சும்மா நிற்பதும் உடற்பயிற்சி தான் என்றால் யாராலும் நம்ப  முடியாது. உடற்பயிற்சி என்ற சொல்லே, உங்களுக்கு பிடிக்காதா? அப்படியென்றால், இது உங்களுக்கு நல்ல செய்தி தான். சும்மா நிற்பதும் ஒரு நல்ல உடற்பயிற்சிதான், அதுமட்டுமின்றி, இதற்கும் ஏராளமான பலன்கள் உண்டு.

நாம் நிற்கும்போது கொழுப்பு எரியும்

நாம் உட்கார்ந்திருக்கும்போது, நம்  உடலின் மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) குறைந்து விடுகிறது. மாறாக, நாம் நிற்கும் போது அவ்வாறு நிகழ்வதில்லை. நாம் நின்றுக்கொண்டிருக்கும் போது நம் உடல் கொழுப்பை எரிக்கத் தொடங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் உட்கார்ந்திருக்கும்போது உடல், கொழுப்பைச் சேமிக்கத் தொடங்குகிறது.

நோய்களைத் தடுக்கிறது

நிற்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க முடிகிறது, ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கொழுப்பு அளவுகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில் மொத்தம் 800 பேர் பங்கேற்றனர், தினமும் இரண்டு மணிநேரம் கூடுதலாக நின்று கொண்டிருப்பதன் மூலமாக, இரத்த சர்க்கரை அளவை 2 சதவீதம் அளவுக்கும், கொழுப்பு அளவுகளை 11 சதவீதம் அளவுக்கும் குறைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது.

நிற்பதனால் கலோரிகள் எரிவது ஏன்?

நிற்பது எளிமையானது என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் கொழுப்பை எரித்து கலோரிகளை செலவு செய்கிறது? என்று ஆச்சர்யமாக உள்ளதா! நிற்கும் போது உங்கள் கால்களில் உள்ள தசைகள், அடிவயிறு, பின்புற தசைகளுக்கு பயிற்சி தருகிறீர்கள். இது உட்கார்ந்திருப்பதை விட அதிக ஆற்றல் வாய்ந்தது.

நிற்பதும் நடப்பதும்

நிற்பது, உட்கார்ந்திருப்பதை விடவும் சிறந்தது தான் என்றாலும். நடப்பது, நிற்பதை விடவும் பல மடங்கு சிறந்தது. ஒரு சராசரி மனிதனுக்கு, நிற்பதன் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 190 கலோரிகள் செலவாகும், உட்கார்ந்திருப்பதின் மூலம் 130 கலோரிகளே செலவாகும், ஆனால் நடப்பது மூலம் ஒருமணிநேரத்தில் 320 கலோரிகள் செலவாகும்.

எத்தனை முறைகள் எழுகிறீர்கள்?

ஒவ்வொரு 30 நிமிடங்கள் உட்கார்ந்திருக்கும் நேரத்திற்கும் நீங்கள் 10 நிமிடங்கள் நிற்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சராசரியாக 8 மணிநேர வேலைக்கு, நீங்கள் 16 முறைகள் நின்று கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் என்ன செய்யலாம்?

உங்கள் அலுவலகத்தில் நின்று வேலை செய்யும் மேஜையை கண்டுபிக்கவும். வேலையில் குறைந்தது 2 மணி நேரமாவது நின்று வேலை செய்ய வேண்டும்.

நிறைய நடந்தபடி பேசலாம். முடிந்த வரை கான்ஃப்ரன்ஸ் கால் பேசலாம் ஹெட்செட்டை அணிந்து கொண்டு, நின்றபடி, நடந்தபடி பேசலாம்.

ஆனால், நாம் மனம் டிவியில் மெய்மறந்து இருக்கும் போது, உடலில் கொஞ்சம் கொழுப்பை செலவு செய்வது தவறில்லையே. அடிக்கடி நிற்க வேண்டும் என்று நினைவூட்டும் சாதனத்தை அணிந்து கொள்ளுங்கள்.

சத்யா

மேலும் தெரிந்து கொள்ள…

https://www.youtube.com/channel/UCVomVtXE3uRJ9PKz088mQFQ/videos


Spread the love
error: Content is protected !!