சிறுகீரை முளைவிட்ட பச்சைப் பயறு தாளிப்பு

Spread the love

தேவையானவை:

பொடியாக நறுக்கிய சிறுகீரை – ஒரு கப்,

தக்காளி – ஒன்று,

சிறிய வெங்காயம் – 10

 முளைவிட்ட பச்சைப் பயறு – 50 கிராம்

 உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு.

இடிக்க:

பூண்டு – 4 பல்,

இஞ்சி – ஒரு துண்டு,

மிளகு – 10-20 (காரத்துக்குத் தகுந்தாற்போல்).

தாளிக்க:

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – ஒன்று,

உளுத்தம் பருப்பு,

கடுகு – தலா அரை டீஸ்பூன்,

பெருங்காயம் – சிறிது.

செய்முறை:

கீரை, பயறு இரண்டையும் அளவான நீரில் வைத்து, குக்கரில் வேகவிட்டு ஒரு விசிலில் இறக்கவும். வாணலியில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, இடித்த மசாலாவைச் சேர்த்துப் பிரட்டவும். நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்து வதங்கிய பின், வேகவைத்த கீரை, பச்சைப் பயறு சேர்க்கவும். பிறகு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி வந்த பின் இறக்க வேண்டும்.


Spread the love