ஸ்பான்டிலோஸிஸ் மற்றும் ஸ்பான்டிலைடீஸ்

Spread the love

இவை இரண்டும் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்”. ஸ்பான்டிலோ (ஷிஜீஷீஸீபீஹ்றீஷீ) என்பது ஒரு கிரேக்க வார்த்தை இதன் பொருள் முள்ளியல் (ஸ்மீக்ஷீtமீதீக்ஷீணீ) ஸ்பான்டிலோஸிஸ் முதுகெலும்பின் முள்ளியங்கள் (கழுத்து, மார்பு, இடுப்பு பகுதி) சீரழிவினால் ஏற்படும். முதுகெலும்பின் மேல் பாகத்தில் (கழுத்து பகுதியில்) ஏற்பட்டால் இது  ‘செர்விகல் ஸ்பான்டிலோசிஸ்’ எனப்படும். முதுகெலும்பின் கீழ் பாக இடுப்பு பகுதி பாதிப்பு ‘லும்பார் ஸ்பான்டிலோஸிஸ்’ எனப்படுகிறது. ஸ்பான்டிலைடீஸ் முதுகெலும்பின் ஸினோவியல் மூட்டுகளின் அழற்சி, வீக்கம், ‘ஆங்கிலோஸிங் ஸ்பான்டிலைட்டீஸ்’ எனப்படும்.

முதுகெலும்பின் ஏற்படும் பாதிப்புகள்

முள்ளியங்களின் (க்ஷிமீக்ஷீtமீதீக்ஷீணீமீ) வின் நடுவே உள்ள வட்டத்தட்டுகள் (ஞிவீsநீ) பல பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றன. வட்டத்தட்டுக்களின் நடுவே, ஸ்பாஞ்ச் போன்ற மிருதுவான நியூக்லியஸ் (ழிuநீறீமீus) உள்ளது. இதனால் நாம் நிற்கும் போது, நடக்கும் போது, ஓடும் போது ஏற்படும் அதிர்வுகளை தாங்கிக் கொள்கிறது. வட்டத்தட்டின் வெளி வளையம் ஆன்னுலஸ் (ணீஸீஸீuறீus) எனப்படும். இது தான் வட்டத்தட்டுக்கு வடிவையும், உருவத்தையும், பலத்தையும் தருகிறது.

லத்தீன் மொழியில், ‘ஆன்னுலஸ்’ என்றால் வளையம் என்று பொருள் வட்டத்தட்டின் நடுவில் உள்ள நியூக்லியஸை பாதுகாக்க வெளி வளையம், வலை போன்ற நார்த்திசுக்களால் அமைந்துள்ளது.

வட்டத்தட்டின் (ஞிவீsநீ) கோளாறுகள்

வட்டத்தட்டின் சீரழிவு (ஞிவீsமீ பீமீரீமீஸீக்ஷீணீtவீஷீஸீ) – வயதினால் ஏற்படும். அடிபடுதல், தொற்றுநோய்களாலும் உண்டாகலாம்.

வட்டத்தட்டு இறக்கம் (பிமீக்ஷீஸீவீணீtமீபீ பீவீsநீ) இதுவும், புடைத்துக் கொள்ளும் டிஸ்க் (ஙிuறீரீவீஸீரீ பீவீsநீ), நழுவிய டிஸ்க் (ஷிறீவீஜீஜீமீபீ பீவீsநீ), பிளவுபட்ட டிஸ்க் (ஸிuஜீtuக்ஷீமீபீ பீவீsநீ), இடம் பெயர்ந்த டிஸ்க் (றிக்ஷீஷீறீணீஜீsமீபீ பீவீsநீ) எல்லாம் கிட்டத்தட்ட ஒன்று தான்.

ஆங்கிலோஸிங் ஸ்பான்டிலைட்டீஸ் (கிஸீளீஹ்றீஷீsவீஸீரீ ஷிஜீஷீஸீபீஹ்றீவீtவீs)        

முதுகெலும்பு மற்றும் பெரிய மூட்டுக்களின் வீக்கம், இதனால் வரும் வலி, விறைப்பு ஆங்கிலோஸிஸ் ஸ்பான்டிலைட்டீஸ் எனப்படும். குறிப்பாக சொன்னால் முதுகெலும்பின் முள்ளியங்கள் (க்ஷிமீக்ஷீtமீதீக்ஷீணீமீ) இடையே ஏற்படும் உராய்வு, மற்றும் முதுகெலும்புடன், இடுப்பெலும்பு (றிமீறீஸ்வீs) இணைந்த பகுதிகளில் உராய்வு, இதனால் இந்த இணைப்புகளின் வீக்கமும், வலியும் உண்டாகும். சுருக்கமாக முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸ் இந்த வியாதி. இதன் வேறு பெயர்கள் – ருமடாய்ட் ஸ்பான்டிலைட்டிஸ் அல்லது மேரி ஸ்ட்ரம்பெல் (விணீக்ஷீஹ் ஷிtக்ஷீuனீஜீமீறீறீ) நோய். இந்த நோயின் முக்கிய அம்சம் முதுகெலும்பின் கீழே உள்ள முக்கோண வடிவ எலும்புத்தட்டு (ஷிணீநீக்ஷீuனீ) பாதிக்கப்படும். மூட்டுக்களில் ‘ஆஸ்டியோஃபட்’ (ளிstமீஷீஜீலீஹ்tமீ) உருவாகும். இவை ரோஜா செடியின் முள் போன்ற அமைப்பில் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உருவாகும் எலும்பு வளர்ச்சி. மூட்டு அழற்சி மற்றும் வீக்கத்தால், எலும்பு முள்கள் ஒன்றோடொன்று இணைவது, இறுகி விடுவதை ‘ஆங்கிலோசிஸ்’ எனப்படும். இவையெல்லாம் ஆஸ்டியோ ஸ்பான்டிலைட்டீஸின் விளைவுகள்.

இந்த வகை மூட்டு வியாதியில் கை, மணிக்கட்டு, விரல்கள், கால் போன்ற ‘சிறிய’ மூட்டுக்கள் பாதிப்பது அபூர்வம்.

ஆங்கிலோசிஸ் ஸ்பான்டிலைடீஸ் பெண்களை விட 4 மடங்கு ஆண்களை பாதிக்கிறது. 20 வயதிலிருந்து 40 வயதுக்குள் பாதிக்கும். பரம்பரை வியாதி. பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளை தாக்கும் வாய்ப்புகள் 20 தடவை அதிகம்!

காரணங்கள்

மேற்சொன்னபடி பாரம்பரியம் தவிர வேறு காரணங்கள் தெரியவில்லை. வியாதியுள்ளவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மரபணு இருப்பது தெரிய வந்துள்ளது.

அறிகுறிகள்

1.         முதல் முக்கிய அறிகுறி – முதுகு வலி, பகலை விட இரவில் அதிகமிருக்கும். முன்நோக்கி குனிந்தால் வலி குறைவது போலிருக்கும். ஆனால் இந்த மாதிரி வளைவதால், நிரந்தரமாக முதுகு வளைந்து விடலாம்.

2.         முதுகெலும்பு கடினமாகி விறைப்பாக இருக்கும். காலைநேரத்தில் இந்த மாதிரி விறைப்பு ஏறிவிட்டு நேரமாக மறையும்.

3.         பசியின்மை, எடை இழப்பு, களைப்பு, சோகை இவைகள் முதுகு வலியுடன் சேர்ந்து வரும்.

4.         விலா எலும்புகள் பாதிக்கப்படுவதால், மார்பை விரித்து பெருமூச்சு விடுதல் வேதனை தரும்.

5.         பெரிய மூட்டுக்களான தோள் பட்டை, முழங்கால், இடுப்பு இவற்றில் வலி ஆரம்பிக்கும்.

6.         இந்த வியாதிக்கு ஆளாகும் மூன்றில் ஒருவருக்கு கண்கள் பாதிக்கப்படும். கண்பார்வை பாதிக்கப்படுவதில்லை.

இவ்வளவு அறிகுறிகள் இருந்தாலும் திரும்ப திரும்ப வரும் கீழ்பாக

முதுகெலும்பு வலி தான் இந்த நோயின் சாதாரண அறிகுறி. இந்த வலி புட்டப்பகுதிகளுக்கும் பரவும்.

ஆலோசனைகள்

1.         பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வளிக்கவும்.

2.         கடினமான மெத்தையில் படுக்க வேண்டாம். தலையணைகள் வேண்டாம். கால்களுக்கு தலையணை வைத்துக் கொள்வதும் கூடாது.

3.         சுடுநீரில் குளிப்பது, ஐஸ் ஒத்தடம் வலியை குறைக்க உதவும்.

4.         மிதமான உடற்பயிற்சி, நீச்சல், பிஸியோதெராபி (றிலீஹ்sவீஷீ tலீமீக்ஷீணீஜீஹ்) பலனளிக்கும்.

5.         எப்போதும் எல்லா வியாதிகளுக்கும் சொல்லும் அறிவுரை – புகைப்பதை கைவிடவும்.

ஆங்கிலோஸிங் ஸ்பான்டிலைடீஸின் விளைவுகள்

•             அங்கஸ்திதி, நிற்கும், உட்காரும் முறைகளை சரிவர செய்து வந்தாலே, பாதி வியாதி மறையும்.

•             கவனிக்காமல் விட்டால் இந்த வகை ஸ்பான்டிலைடீஸ் முதுகெலும்பை விறப்படைய வைக்கும். இடுப்பு முழங்கால், தோள்கள் – இவற்றை தாக்கும்.

•             “குதிரை வால்” (சிணீஸீபீணீ மீஹீuவீஸீணீ) எனப்படும் பாதிப்பு உண்டாகலாம். முதுகெலும்பின் அடிப்பகுதியிலிருந்து வெளியேறும் “நரம்புக் கட்டுகள்” குதிரை வால் போலிருக்கும். இவை சீரழிந்த முதுகெலும்பின் உடைந்த டிஸ்குகளால் (ஞிவீsநீ) நசுக்கப்பட்டால் வலி உண்டாகும். இது ஒரு அபூர்வமான பாதிப்பு.

செர்விக்கல் ஸ்பான்டிலோஸிஸ் (சிமீக்ஷீஸ்வீநீணீறீ ஷிஜீஷீஸீபீஹ்றீஷீsவீs)

வயதானவர்களை தாக்கும் பரவலான நோய் கழுத்தில வரும் ‘ஸ்பான்டிலோஸிஸ்’. முதுகுத்தண்டின் கழுத்துப் பகுதியில் முள்ளியங்களின் எலும்புகள் விபரீதமாக வளர்ச்சி அடையும். இவற்றின் இடையே உள்ள தகடு (ஞிவீsநீ) சிதைந்து போகும். இதனால் கழுத்துப் பகுதி முதுகெலும்பு அழுத்தப்பட்டு வலியும் வேதனையும் ஏற்படும். இது தான் செர்விகல் ஸ்பான்டிலோஸிஸ் ‘செர்விகல்’ என்றால் கழுத்துப்பகுதி. இந்த நோயின் இதர பெயர்கள் – செர்விகல் ஆர்த்தரைடீஸ் (சிமீக்ஷீஸ்வீநீணீறீ ணீக்ஷீtலீக்ஷீவீtவீs) செர்விகல் மைலோபதி (சிமீக்ஷீஸ்வீநீணீறீ னீஹ்மீறீஷீஜீணீtலீஹ்) மற்றும் செர்விகல் ஆஸ்டியோபைட்டீஸ் (சிமீக்ஷீஸ்வீநீணீறீ ஷீstமீஷீஜீஹ்tமீs)

காரணங்கள்

•             வயதால் பாதிக்கப்படும் மூட்டுகள் – குறிப்பாக முதுகெலும்பு

•             சரியாக நிற்பது, உட்காருவது இல்லாமல், உடலை வளைத்து, நெளிந்து கோணலாக நிற்பது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது. உதாரணம் – கம்ப்யூட்டர் வேலை, டைப் அடிப்பது, படுக்கும் போது அதிக தலையணைகளை உபயோகிப்பது.

அறிகுறிகள்

1.         கழுத்துவலி – இடது, வலது பக்கம் திரும்ப முடியாமல் ஏற்படும் வலி. இந்த வலி தோள்பட்டை, கைகளுக்கும் பரவலாம். மார்பு, நெற்றிக்கு கூட வலி பரவலாம்.

2.         தீவிர நிலையில் தலைசுற்றல், கை கால் மரத்துப் போதல் இவை ஏற்படலாம்.

3.         முதுகெலும்பு நசுக்கப்பட்டால், அது பாதுகாக்கும் நரம்புகளும் அழுத்தப்படும். இதனால் கை கால்களில் குறுகுறுப்பு (உறுத்தம்) தெரியும்.

4.         தொடரும் கழுத்துவலி.

5.         காதில் இரைச்சல், மயக்கம் இவை ஏற்படலாம்.

பொதுவான சிகிச்சைகள்

•             பிஸியோ – தெரபி மூலம் கழுத்திற்கு பயிற்சியளித்தல்

•             ‘டிராக்ஷன்’

•             கழுத்தில் “காலர்” மாட்டுதல்

•             கண்கள் பலவீனம், மலஜலங்களை கட்டுப்படுத்த முடியாமற் போனால் உடனே வைத்தியரை அணுகவும்.


Spread the love